பணப்புழக்கம் சரளமாக இருக்கும் ஜாதகக்காரர்கள்... யார் யார்? #Astrology | The jathagams which get the lot of money

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (06/04/2017)

கடைசி தொடர்பு:07:29 (06/04/2017)

பணப்புழக்கம் சரளமாக இருக்கும் ஜாதகக்காரர்கள்... யார் யார்? #Astrology

'ணத்தைப் பலர் வெறுப்பார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் வெறுப்பது, அடுத்தவர்களிடம் உள்ள பணப்புழக்கம்' என்று சொல்லுவார்கள். பணம் இல்லாமல் நம்மால், இன்றைய மில்லேனிய உலகில் எதுவும் செய்ய முடியாது.

ஒரு காலத்தில் பட்டணத்துக்குப் போகிறவர்களைப் பார்த்து 'தண்ணீரைத் தவிர மற்ற பொருட்களை காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும்' என்பார்கள், ஆனால், இன்றைக்கு தண்ணீருக்கே மாத பட்ஜெட்டில் ஆயிரம் ரூபாய்க்குமேல் ஆகிறது.

பணப்புழக்கம்

அன்றாட வாழ்வியல் தேவைக்கு, பணம் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இப்படிப்பட்ட பணம் தாராளமாகக் கிடைக்க ஒருவரது ஜாதகத்தில் என்ன வகையான யோகம் இருக்க வேண்டும்? திடீரென்று ஏதாவது மாயஜாலம் போல் சிலருக்கு பணம் கொட்டும். அப்படி ஒருவருக்கு பணம் கிடைக்க என்ன மாதிரியான யோகம் இருக்க வேண்டும் என ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

கே.பி.வித்யாதரன்ஜோதிட ரீதியாக தனக்காரகன் எனப்படும் குரு பகவான், ஒருவரது ஜாதகத்தில் சாதகமான இடத்தில் இருந்தால்தான் ஏற்றமும், உயர்வும் உண்டாகும். லக்னத்துக்கு 2 - ம் இடத்தைத்தான், தனம், குடும்பம், வாக்கு ஸ்தானம் என்று சொல்வார்கள். தனக்காரகனான குரு வலுப்பெற்று இருந்தால் எல்லா வகையிலும் ஏற்றம் உண்டாகும்.

ஜாதகத்தில் இந்த 2 - ம் இடம் சிறப்பாக இருக்க வேண்டும். 2-ம் இடத்துக்கு அதிபதி ஆட்சி உச்சம் பெற்று இருக்க வேண்டும். இந்த இடத்துக்கு குருவின் பார்வை இருப்பது அவசியம்.

2 ம் இடத்துக்கு அதிபதி 1,4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானத்தில் அமையப் பெற்றால், ஜாதகர் செல்வம் மிக்கவராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் இருப்பார். தனஸ்தானாதிபதி 6, 8, 12 - ம் இடங்களில் மறையாமலும், நீசம் அடையாமலும் இருந்தால் பணவரவு சரளமாக இருக்கும்.

இலக்கு

குரு 6, 8, 12 - ம் இடங்களில் மறைந்தாலோ, நீசம் அடைந்தாலோ பொருளாதார ரீதியாக பல்வேறு சங்கடங்களை ஜாதகர் சந்திக்க நேரிடும்.

தனஸ்தானாதிபதி (2 மிடத்து அதிபதி) அல்லது குரு பகவான் பாதக ஸ்தானங்களில் அமையப்பெற்றாலோ நீசம் அடைந்தாலோ, எவ்வளவு பணம் வந்தாலும், வீண்செலவாகவே அவை விரையமாகிவிடும். செலவுகள் கட்டுக்குள் இல்லாத சூழ்நிலை, சேமிப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும்.

தனக்காரகன் குருவும், தனஸ்தானதிபதியும் நான்காம் வீட்டு அதிபதியுடன் தொடர்பு பெற்று வலுப்பெற்று இருந்தால், அசையாச் சொத்துக்கள் வந்து சேரும். அமைப்பு ஏற்படும்.

திடீர் பணம் வரும் யோகம் யாருக்கு?

தொழில் வெற்றி

ஜாதகத்தில், 3,6,10 மற்றும் 11 - மிடங்கள் வலுவாக இருப்பவர்களுக்கு, நேர் வழியிலோ, குறுக்கு வழியிலோ ஏன் ஜாதகரே எதிர்பாராதவிதமாக திடீர் பண வரவு ஏற்படும்.

ஒருவருடைய ஜாதகத்தில் 8 - ம் இடமும் 12 -ம் இடமும் மறைவுஸ்தானமாக இருந்தாலும், 3,6, 8 மற்றும் 12 - ம் இடத்தின் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தால், விபரீத ராஜயோக அமைப்பு ஏற்பட்டு அவர்களது வாழ்வில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்.

- எஸ்.கதிரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்