வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (20/04/2017)

கடைசி தொடர்பு:19:17 (22/04/2017)

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றுவந்த உங்கள் அனுபவம் எப்படி? #VikatanSurveyResults

ருடத்தின் 365 நாட்களில் 450 திருவிழாக்களும், உற்ஸவங்களும் திருப்பதி பெருமாளைத் தவிர வேறு எந்த தெய்வத்துக்கும் நடப்பதாகத் தெரியவில்லை. 'திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றுவந்த உங்கள் அனுபவம் எப்படி?'என்று #VikatanSurvey ஒன்று நம் தளத்தில் நடத்தினோம். அதன் முடிவுகள் இதோ..

பெருமாள்

 

திருப்பதி


*நீங்கள் ஒரேநாளில் திருப்பதி பெருமாளை தரிசித்திருக்கிறீர்களா? என்பது முதல் கேள்வி. இதற்கு ஆம் என்று அதிகபட்சமாக 89.2 % தேர்வு செய்திருந்தனர். இல்லை என்று 10.8% கூறியுள்ளனர். 

திருப்பதி

* வெங்கடாசலபதியை தரிசிக்கப் பாத யாத்திரையாகச் சென்றிருக்கின்றீர்களா ? என்பது இரண்டாம் கேள்வி. ஆம் என்று 52.2 % பேர் தேர்வு செய்து பிரமிக்க  வைத்துள்ளனர். இல்லை என்று 47.8% பேர் பதிவு செய்துள்ளனர். 

சர்வே

 

*திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்ஸவத்தில் கலந்து கொண்டு இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு ஆம் என்று வெறும் 6.3% மட்டுமே கூறியுள்ளனர்.இல்லை என்று 93.7% பதிவு செய்துள்ளனர்.

திருப்பதி

*ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் திருப்பதிக்குச் செல்பவரா நீங்கள்? என்று கேட்டதற்கு, ஆம் என்று 41.7% மக்கள் உற்சாகமாக கூறியுள்ளனர்.இல்லை என்று 58.3% பேர் கூறியுள்ளனர்.

 

திருமலை

* திருப்பதியில் இருக்கும் தங்கும் விடுதிகள், உணவுகள் , பேருந்துகள் போன்றவற்றின் வசதிகள் உங்களுக்குத் திருப்திகரமாக அமைந்துள்ளதா? என்று கேட்டிருந்தோம் அதற்கு 84.3% மக்கள் திருப்தியடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.15.7% மக்கள் இல்லை என்று கூறியுள்ளனர்.

சர்வே ரிசல்ட்

* திருப்பதிக்குச் செல்லும்போதெல்லாம் உண்டியலில் காணிக்கை செலுத்துவது, முடியைக் காணிக்கையாக கொடுப்பது இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றீர்களா? என்ற கேள்விக்கு, ஆம் என்று 89.4% மக்களும், இல்லை என்று 10.6% மக்களும் தெரிவித்துள்ளனர்

 

ஏழுமலை சர்வே

* திருப்பதிக்குச் செல்லும்போதெல்லாம் பத்மாவதி தாயாரையும் தரிசிக்கும் வழக்கம் உண்டா? என்று கேட்டோம். நாளுக்கு நாள் வேங்கடேசனைக் காணவரும் பக்தர்கள் பலர், தயாரையும் காணச் செல்லும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இதற்குச் சான்றாக,ஆம் என்று 60.5% மக்கள் கூறியுள்ளனர். இல்லை என்று 39.5% மக்கள் கூறியுள்ளனர்.

சர்வே முடிவுகள்

 

*வேங்கடநாதனை தரிசிக்க 2 நாட்களுக்கு மேல் காத்திருந்த அனுபவம் உண்டா? என்ற கேள்விக்கு 83.8% மக்கள் ஆம் என்றும், 16.2% மக்கள் இல்லை என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியிலும், கோடை விடுமுறை வரும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் பக்தர்கள் 3 நாட்களுக்கு மேல் காத்திருக்கத்தான் செய்கிறார்கள்.

 

திருமலை

*கூட்டம் காரணமாக தரிசிக்க முடியாமல் திரும்பிய அனுபவம் உண்டா? என்று கேட்டிருந்தோம். இல்லை என்று 13.6% மக்கள் மட்டுமே கூறியுள்ளனர். ஆம் என்று 86.4% மக்கள் கூறியுள்ளனர்.

பத்மாவதி

 

*'திருப்பதி சென்றால் திருப்பம்' இதை உங்கள் வாழ்வில் உணர்ந்தது உண்டா? என்ற கடைசி கேள்விக்கு, ஆம் என்று 79% மக்களும், இல்லை என்று 21% மக்களும் கூறியுள்ளனர்.

 


- கி.சிந்தூரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்