Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசையாக வாங்கிய சொந்த வீடு சிலருக்கு சுமையாவது ஏன்? #Vastu

சொந்த வீடு பல குடும்பத்தவர்களுக்கும் சுமையானதாக அமைந்து, பல கஷ்டங்களைக் கொடுத்து விடுகிறது.  இதற்குரிய காரணங்களைத் தேடி ஆராய்ந்து கடைசியில் 'நம் தலைவிதி' என்று சொல்லி வருந்துபவர்கள்  ஏராளம். வீடு  ஏன் இத்தனை கஷ்டங்களைத் தருகிறது? சொந்த வீட்டுக்கு  வந்தவுடன் ஏன் எனக்கு இந்த நரகவேதனை? ஏன் சொந்த வீடு சுமையானதாக ஆகிறது? என்று வாஸ்து ஜோதிடப் பேராசிரியர் எம்.எஸ்.ஆர். மணிபாரதியைக் கேட்டோம்.

 

வீடு

அலைந்து திரிந்து தேடித் தேடித் தேர்வு செய்து கட்டப்பட்ட பல வீடுகள் இன்று குடியிருக்க ஆள் இல்லை என்ற நிலையில் இருக்கின்றன. மணிபாரதிஇதுதவிர, பல ரியல் எஸ்டேட் அதிபர்கள், பில்டிங் கான்ட்ராக்டர்கள் வாங்கிய வங்கித் தவணைகளைக்கூட கட்டமுடியாமல்  அவஸ்தைப் படுவதையும் பார்க்க முடிகிறது.

சொந்த வீட்டை  வாடகைக்கு விட்டுவிட்டு, அல்லது விற்று கடனுக்கு பைசல் செய்துவிட்டு, புதிதாக வீடு கட்டியும் அதில் குடியிருக்க முடியாமல், மீண்டும் வாடகை வீட்டுக்கே செல்லும் நிலையையும் பார்க்க முடிகிறது.
 இப்படிப் பிரச்னைகளைத் தரும் அத்தனை வீடுகளையும் நாம் கவனித்தால், வாஸ்து குறைபாட்டுடன் அவை இருப்பதை உணர முடியும்.

ராசியான வீடுகள்

குறையில்லா ராசி வீடுகள்:
வாஸ்து எனும் 'மனையடி சாஸ்திரம்' சொல்லும் கட்டுப்பாட்டின்படி ஒரு வீடானது அமையுமேயானால், அந்த வீடு 26 தலைமுறைக்கும் கண்டிப்பாக பயன்பாட்டில் இருக்கும்.
வடகிழக்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் கூடுதல் இடம் விட்டும், தெற்கு, மேற்கு ஆகிய திசைகளில் தேவைக்கு தக்கபடி இடைவெளி அமைத்தும், வடகிழக்கு பாகத்தில் பிரதான ஹால், அக்கினி பாகம் எனும் தென்கிழக்கு பகுதியில் அடுப்படியும் இருந்தால், அவை குறைவில்லாத ராசி வீடுகளாக அமையும். இதேபோல் அடுப்படியைச் சார்ந்த பகுதியில் டைனிங் ஹால், மேற்கு, தெற்கு, தென்மேற்கு பாகங்களில் படுக்கை அறை, ஆக்னேயம், வாயுவியம் சார்ந்து கழிவறைகள். விருந்தினர் அறைகள், வீட்டில் வேலை செய்பவர்
களுக்கு உண்டான அறைகளை அமைக்கவேண்டும். 
இதைப்போல கட்டடத்தின் வெளியே காம்பவுண்டுக்கும் உள்ளே தரப்படும் கழிவுத்தொட்டிகள் கிழக்கு, வடக்கிலும், ஆழ்குழாய்க் கிணறு மற்றம் கிணறு, கீழ்நிலைத் தண்ணீர்த் தொட்டி வடகிழக்கு சார்ந்தும் மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி தென்மேற்கு சார்ந்தும் இருக்க வேண்டும். 

நீசத்தன்மை பெறும் வீடுகள்:
மனையானது தட்சணாயனத் தன்மை என்னும் நீசத் தன்மை பெற்ற மனையாக இருந்தால், இவ்விதிகள் தீயில் விழுந்த ரூபாய் நோட்டை போல செல்லாத தன்மை பெற்றுவிடும். அப்படிப்பட்ட மனைகளில் வசிப்பவர்களை கடனாளியாக்கி விடுகிறது. அவர்களது வார்த்தைகளுக்கு வலுவில்லாத தன்மையை ஏற்படுத்தி விடுகிறது.
பத்து டிகிரி முதல் நாற்பத்தைந்து டிகிரி வரை மாறுபாடு கொண்ட உத்ராயண மனைகளும் துன்பம் தருபவையாக மாறி விடுகின்றன.
இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட மனைகள் குடிபுகுந்த முதல் இரண்டரை ஆண்டுகள்வரை யாதொரு துன்பமும் இல்லாததுபோல் தோன்றும். இதையடுத்து, பல தொழில்களில் முதலீடு செய்யும்படி செய்து, வருவாய் பெருகுவதற்கு வாய்ப்பளித்தாற்போல் ஒரு மாயை தோற்றுவிக்கும். பிறகு அனைத்தையும் இழக்கும் நிலையை அடுத்து வரும் சில மாதங்களுக்குள் செய்து விடும் வல்லமைபெற்றவை. இதனால் கௌரவத்தைக் காப்பாற்ற மிகுந்த துன்பத்தை இம்மனையில் வசிப்போர் அனுபவிப்பார்கள். 
இப்படிப்பட்ட தன்மையில் இருக்கும் இந்த நீசத்தன்மை பெற்ற மனைகள் நாளடைவில் தானாகவே பாழடைந்துவிடும். எவரும் குடி போக மாட்டார்கள். எப்போதும் டூ-லெட் போர்டு தொங்கிக் கொண்டிருக்கும். இம்மனைகள் பெண்களை நோயாளிகளாக மாற்றி குடும்பத்தின் நிம்மதியை இழக்கச் செய்துவிடும். 

கவலையான மனிதன்


விற்பனைக்கு வீடுகள்! எச்சரிக்கை!
ஒரு வீடானது தவறான அமைப்பில் கட்டப்பட்டிருந்தால், அவ்வீடு விற்பனைக்கு வரும். உதாரணமாக  தென்மேற்கில் கிணறு உள்ள
வீட்டின் எஜமானன் பல ஸ்தாபனங்களுக்கு முதலில் பங்குதாரராவார். அதன்பின் இந்த வீடும் பிணையமாகும். அதற்குப்பின் குடும்பத் தலைவர் ஜீவ மரணப் போராட்டங்களைச் சந்தித்து மடிந்துபோவார். அந்த வீடு விற்பனைக்கு அல்லது ஏலத்துக்கு வரும். அதேபோல் தெற்கில் கிணறு உள்ள வீட்டில் கை, கால்முறிவது. தொடர்ந்து பொருளாதார சரிவு இருந்துகொண்டே இருக்கும். அப்போது வீட்டை விற்று, கடனை அடைக்கும் நிலை உருவாகும். 

தென்கிழக்கு சார்ந்த பகுதி கிணறு, வடமேற்குப் பகுதி சார்ந்த கிணறு உள்ள வீட்டில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அந்த வீடு விற்பனைக்கு வரும். 

மனச்சுமை தந்து ‘சுமையாகும் வீடுகள்’  இந்த வகை நீச வளர்ச்சி பெற்ற வீட்டில் கண்டிப்பாக கஷ்டங்கள் இருந்துகொண்டே இருப்பதாலும், இதிலிருந்து மீளமுடியாமல் வீட்டை விற்றுவிட்டு வெளியேறும்படி அமைந்து விடுவதால் சுமை தாங்கிக் கல்லே சுமையாகிப் போனதுபோல என்ற நிலை ஏற்படுகின்றது. 
 

எஸ்.கதிரேசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement