வெளியிடப்பட்ட நேரம்: 22:47 (21/04/2017)

கடைசி தொடர்பு:22:43 (21/04/2017)

ஸ்ரீராமாநுஜரின் 1000வது ஆண்டு அவதார உற்சவம் விழா 

 

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பூதூரில் ராமாநுஜர் அவதரித்த   திருக்கோயிலில் ராமாநுஜரின் ஜயந்தி விழா நாளை தொடங்குகிறது. 

Sri Ramanujar 1000 years

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில்கள்  உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு வைணவ தலங்களில் 'ஸ்ரீராமாநுஜரின், ஜயந்தி விழா' சிறப்பாக கொண்டாப்படுவது வழக்கம். 


இந்தாண்டு ஸ்ரீராமாநுஜரின் 1,000-வது ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, ஸ்ரீபெரும்பூதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயில்களில் 'ஸ்ரீராமாநுஜரின் 1,000-வது ஆண்டு அவதார உற்சவம்'  என்ற நாளை  (ஏப்ரல் 21ம் தேதி) தொடங்கி மே 1ம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. 

Sri Ramanujar 1000 years

இந்த வைபவ விழாவில் உற்சவ திருநாள்கள் புறப்பாடு முதல் 7 நாட்கள் நடைபெறுகிறது. முக்கிய உபய விபூதி பட்டாபிஷேகம் கூரேச விஜயம் 27-ம் தேதியும், திருமந்திரார்த்தம் சேவித்தல் 29-ம் தேதியும், திருத்தேர் வீதிவுலா 30-ம் தேதி காலை 6.30 மணிக்கும் நடைபெறுகிறது. தொடர்ந்து ஏப்ரல் 1-ந்தேதி திருநாள் சாத்துமுறையும் நடைபெறுகிறது.

அதேபோல், திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயிலில் "ஸ்ரீ ராமாநுஜர் ஆயிரமாவது வருட உற்சவ விழா" நாளை  முதல் வருகின்ற, மே 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.