அட்சயதிரிதியை அன்று எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன தானம் செய்யலாம்?

அட்சயதிரிதியை நாளில் தங்கம்தான் வாங்க வேண்டுமா? அட்சயதிரிதியை நாளில் எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன தானம் செய்யலாம்? என்பதுபற்றி வாஸ்து ஜோதிட நிபுணர் எம்.எஸ்.ஆர். மணிபாரதியிடம் கேட்டோம்.

அட்சயதிரிதியை 

அட்சயதிரிதியை அன்று தங்கம்-வெள்ளி நவரத்தின நகைகள் ஏன் வாங்கவேண்டுமென்பது பலரது கேள்வியாக உள்ளது.இதற்கான ஜோதிடர் மணிபாரதிகாரணத்தை ஆராய்ந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கு

 

செல்வ வளம் பெருக 11 எளிய வழிகள்!

ராஜாக்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் மன்னர்கள், பிரபுக்கள் குடும்பம்தான் நகைகள் ஆபரணங்களை அணிவார்கள். தொழிலாளிகள், கூலி வேலை பார்ப்பவர்கள் அணியமுடியாது அணியக்கூடாது.

தங்கம், வெள்ளி உலோகங்கள் வான்வெளியில் உள்ள காந்த அலைகளை ஈர்க்கவல்லவை. நவரத்தினங்களோ பால் வெளியில் உலாவரும் கோள்களின் சலனங்களில் நற்கதிர்களை தன்னுள் வாங்கி பிரதிபலிப்பவை. 

அதனால்தான் நகையணியும் பழக்கத்தை உலக அரங்கில், நாடு, மொழி என்ற பாகுபாடு இன்றி, பிரபுக்கள், மன்னர்கள் அணிந்தனர். இன்றோ நாம் அனைவரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதால் நகை வாங்கி அணிந்து மகிழ்கின்றோம்.

அட்சய திரிதியை நாளில் நாம் நம்மால் இயன்ற அளவு நகை வாங்குவோம். தங்கம் வாங்க முடியவில்லை என்றால் வெள்ளிப் பொருளாவது வாங்கலாம். ஆனால், தங்கமோ, வெள்ளியோதான் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. கல் உப்பு, பச்சரிசி, ஆடைகள் போன்றவற்றையும் வாங்கலாம்.

நாம் நமக்கு வாங்குவதை விடவும், மற்றவர்களுக்கு நாம் தானம் செய்வது மிகவும் சிறப்பான பலன்களைத் தரும்.

பழங்கள்  

புனித நாட்களில் தானங்கள் செய்வது மிகவும் உயர்வானதாகச் சொல்லப்படுகிறது. காரணம், நாம் எந்த அளவுக்கு தானம் செய்கிறோமோ அந்த அளவை விடவும் அதிகமான பலன்களை நாம் பெறலாம் என்பதற்காகத்தான்.

இவ்வாண்டு அட்சய திரிதியை திதியானது வெள்ளிக்கிழமை பகல் 1.50 முதல் சனிக்கிழமை காலை 11.15 வரை இருக்கிறது.

வெள்ளிக்கிழமை 4.50 வரை கிருத்திகை நட்சத்திரமும், அதன்பின் ரோகிணி நட்சத்திரமும் வருவதால், கீழ்க்கண்ட நட்சத்திரக்காரர்கள் பொருட்கள் எது வாங்கினாலும் வாங்காவிட்டாலும், கீழ்க்கண்ட தானங்களையாவது இயன்ற அளவு செய்து சுபபலன்களைப் பெறலாம்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏழைகளுக்கு வாழைக்காய், வாழைப்பழம் வாங்கித் தரலாம்.

செல்வ வளம் பெருக 11 எளிய வழிகள்!

அசுவினி, மகம், மூலம், பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் ஏழைகளுக்கும், வேதியர்களுக்கும், பசுக்களுக்கும் பழ வர்க்கங்களைத் தானமாக தருவது உத்தமமான பலனைத் தரும்.

உப்பு 

ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திக்காரர்கள் தென்னை மரங்களுக்கு உப்பு வாங்கி வைக்கலாம். நீர்நிலைகளில் உப்பு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து கரைப்பது உத்தமம்.

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரக்காரர்கள் எள்ளுருண்டை தானம் செய்வது நல்லது.

அட்சயதிரிதியை 

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், நட்சத்திரக்காரர்கள் மட்டும் வீட்டில் பிற உறுப்பினர்கள் கைகளால் ஆபரணங்கள் வாங்கி பிறிதொரு நன்னாளில் அணிந்து மகிழலாம்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர அன்பர்கள் வெல்லம், பச்சரிசி, எள் கலந்து பசு, யானைக்கு உணவாக வழங்கி ஆபரணங்கள் அணிய உத்தமம். சனிக்கிழமை அன்று நகையை அணிய நகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!