வெளியிடப்பட்ட நேரம்: 14:12 (06/05/2017)

கடைசி தொடர்பு:15:27 (06/05/2017)

உங்களின் நட்சத்திரத்துக்கு ஏற்ற வெற்றி நட்சத்திரங்கள் எவை?#Astrology

உங்களின் நட்சத்திரத்துக்கு ஏற்ற வெற்றி நட்சத்திரங்கள் எவை? ஒரு சொத்து வாங்குவதற்கான பேச்சுவார்த்தையாக இருந்தாலும், வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தையாக இருந்தாலும் சரி, அதற்கு ஒரு நல்ல நேரம் தருணம் பார்த்து தொடங்க வேண்டும்.  அப்போதுதான் நாம் துவங்குகிற செயல் எந்தவித இடையூறுமின்றி எதிர்பார்த்த வெற்றியைத்  தேடித்தரும். இதை சாதாரண மக்களும் அறிந்து கொள்வது எப்படி என்று ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம். 

வெற்றி

'நல்ல தொடக்கம், பாதி முடிந்ததுக்குச் சமம். நாள் உதவுவது போல் நல்லவன் கூட உதவமாட்டான்'  என்பார்கள். நாம் எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்குமுன், அந்த நாள் நமக்கு வெற்றியைத் தரக்கூடிய நாள் தானா? என்பதைத் தெரிந்துகொண்டு தொடங்க வேண்டும். 
ஜோதிட ரீதியாக இதனை 'தார பலன் என்று கூறுவார்கள். அதாவது ஒரு செயலை செய்பவரின் நட்சத்திரத்துக்கும்  அதைத் தொடங்குகிற நாளின் நட்சத்திரத்துக்கும் உள்ள பலனே தாரா பலன் என்று சொல்வார்கள். 
இதன்படி செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெற எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த நட்சத்திர நாளில் புதிய முயற்சிகளை புதிய யுக்திகளைக் கையாண்டால் வெற்றி வாய்ப்பு அதிகமாகும் என்பதைக் கீழே தரப்பட்டுள்ள பட்டியல் மூலம் கண்டு பயன் பெறலாம்.

வெற்றி மங்கை

 

ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள்:

* அசுவினி: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், உத்திரட்டாதி, ரேவதி. 

* பரணி: உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், ரேவதி, அசுவினி, மகம், மூலம்.

* கார்த்திகை: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி. சதயம், பூசம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், மூலம். வித்யாதரன்

* ரோகிணி: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம்

* மிருகசீரிடம்: சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், உத்திரம், ரோகிணி, அஸ்தம்.

* திருவாதிரை: புனர்பூசம், விசாகம், ரேவதி, ரோகிணி, அஸ்தம், மிருகசீரிடம், சித்திரை.

* புனர்பூசம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, சுவாதி.

* பூசம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, புனர்பூசம், விசாகம், ரேவதி.

கிரகம்

* ஆயில்யம்: அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

* மகம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம்

*  பூரம்: உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், அசுவினி, மகம், மூலம்

*  உத்திரம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம்.

* அஸ்தம்: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், ரேவதி, உத்திரம், உத்திராடம்.

* சித்திரை: சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், அஸ்தம், திருவோணம்.

* சுவாதி: புனர்பூசம், விசாகம், அஸ்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம், ரேவதி

* விசாகம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், சுவாதி, சதயம்.

*  அனுஷம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், விசாகம்,ரேவதி.

கிரகங்கள்

*  கேட்டை: அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், சித்திரை, அவிட்டம், விசாகம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

* மூலம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, ரேவதி.

*  பூராடம்: உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், விசாகம், ரேவதி, அசுவினி, மகம், மூலம்.

* உத்திராடம்: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மூலம்.

* திருவோணம்: மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், உத்திராடம், ரேவதி.

* அவிட்டம்: சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அசுவினி, மூலம், உத்திராடம், ரோகிணி, திருவோணம்.

* சதயம்: புனர்பூசம், விசாகம், ரோகிணி, திருவோணம், மிருகசீரிடம், அவிட்டம், ரேவதி.

* பூரட்டாதி: பூசம், அனுஷம், உத்திரம், அசுவினி, மகம், மூலம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், சதயம்.

* உத்திரட்டாதி: ரோகிணி, அஸ்தம், திருவோணம், சதயம், புனர்பூசம், ரேவதி.

* ரேவதி: அசுவினி, மகம், மூலம், உத்திரம், உத்திராடம், மிருகசீரிடம், அவிட்டம், புனர்பூசம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்