Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உத்தராடம் நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்! #Astrology

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், நடைமுறைகள் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். பூராடம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து உத்தராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

உத்தராடம்

நட்சத்திர தேவதை: விஸ்வம் என்னும் விஸ்வே தேவர்கள்.
வடிவம்  :  பாம்பு வடிவத்தில் உள்ள எட்டு நட்சத்திரங்களின் தொகுப்பு.
எழுத்துகள் : பே, போ, ஜ, ஜி.கே.பி.வித்யாதரன்

உத்தராடம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பொதுவான பலன்கள்:

சூரியனின் 3 - வது நட்சத்திரம் இது.  ஜாதக அலங்காரம், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூத்த சகோதரிகள் மீது பாசமுள்ளவர்; முகத்தில் மரு உள்ளவர்; பலவான்; அறிவாளி; கொஞ்சியும் கெஞ்சியும் கோபித்தும் பலவாறு மற்றவர்களைக் கவர்பவர்; வைராக்கியம் உள்ளவர்; நல்லவர்; பிரபலங்களால் விரும்பப்படுபவர்; கொடையாளி என்று கூறுகிறது.

நட்சத்திர மாலை, இவர்கள் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்; ஆர்வமுள்ளவர்; சிந்தனை செய்பவர், கற்றறிந்தவர்களுக்கு நண்பர்; அருள் உடையவர்; உத்தமன் என்கிறது.

யவன ஜாதகம், ... தர்மவான், வீரர், செய்நன்றி மறவாதவர், நல்ல மனைவி வாய்த்தவர், அழகர் என்கிறது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ‘நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையும்’ கொண்டவர். நானிலத்தில் யாருக்கும் அஞ்சமாட்டார்கள். பேச்சில் பதிலடி தரத் தயங்க மாட்டார்கள். சமூக நலன் மீது அக்கறை கொண்டவர். விழிப்புஉணர்வு இயக்கங்களையும் சங்கங்களையும் தலைமை தாங்கி நடத்துவார்கள். வயோதிக வயதிலும் இளமையான சிந்தனை இவர்களுக்கு உண்டு.  இளைஞர் கூட்டம் அலை மோதும். 

கிரகம் 

நாட்டின் மீதும் அடித்தட்டு மக்கள் மீதும் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள். அவலங்களைத் தட்டிக் கேட்கும் சீர்திருத்தவாதிகளாக விளங்குவார்கள். எந்தத் துறையில் பணியாற்றினாலும் முதலிடம் பிடிப்பார்கள். நிலையான கொள்கை உள்ளவர்கள்.
கண்ணால் கண்டதை மறைக்காமல், உண்மையைப் பேசுவார்கள். கை வீசி வேகமாக நடப்பவர்கள் என்றும் அகலமான நெற்றி உடையவர்கள். ‘உத்தராடத்தில் பிள்ளையும் ஊரோரத்தில் கழனியும்’ என்றொரு பழமொழி உண்டு. அதற்கேற்ப ஊருக்கருகில் சொத்து வாங்கும் யோகம் பலருக்கு அமைந்துள்ளது. நந்தி வாக்கியம், ‘பிறர் சொத்துக்கு ஆசைப்படாதவன், பிறர் மனை நோக்காதவன்’ என்று கூறுகிறது. சூடானதும் கொஞ்சம் காரமானதும் எண்ணெயில் பொரித்ததுமான உணவை விரும்பி உண்பார்கள். தாய்ப் பாசம் அதிகம் உள்ளவர். 

22 முதல் 26 வயது வரை உங்களிடம் ஒரு தடுமாற்றமும் குழப்பமும் வந்து, பிறகு நீங்கும். 27 வயது முதல் எதிலும் வெற்றி பெறுவார்கள். 40 வயது முதல் பொருளாதாரத்தில் அதிரடி முன்னேற்றம் வரும். வியாபாரத்திலும் புகழ் பெற்று விளங்குவீர்கள். மூடநம்பிக்கை இல்லாத, முற்போக்கு சிந்தனை உள்ளவர்களாக இருப்பார்கள்.

மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த வைத்தியம், ஹோமியோபதி, சீன வைத்தியம், கட்டடக் கலை, பூமியை ஆதாரமாகக் கொண்ட வியாபாரம், மந்திர தந்திரம், நடிப்பு, நாடக, திரைப்படத் தயாரிப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு என்று பற்பல துறைகளிலும் பலர் மிளிர்வார்கள். 

வயலூர் முருகன் 

உத்தராடம் நட்சத்திரக்காரர்களின்  நான்கு பாத பரிகாரங்கள்:

உத்தராடம் நட்சத்திர முதல் பாத பரிகாரம்:

வயலூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப் பெருமானையும், ஸ்ரீ பொய்யாமொழி கணபதியையும் வணங்குதல் நலம்.

உத்தராடம் நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:

திருக்கோளூரில் அருள்புரியும் ஸ்ரீ குமுதவல்லி (கோளூர்வள்ளி) உடனுறை ஸ்ரீ நிஷேபவித்தன் (வைத்த மாநிதிப் பெருமாள்) பெருமாளை வணங்குதல் நலம்.

உத்தராடம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:

திருக்கடல்மல்லையில் (மாமல்லபுரத்தில்) வீற்றிருக்கும்
ஸ்ரீ நிலமங்கைத் தாயார் உடனுறை ஸ்ரீ ஸ்தலசயனப் பெருமாளை வணங்குதல் நலம்.

உத்தராடம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:

புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள குடுமியான்மலையின் அடிவாரத்தில் அருள்புரியும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ சிகாநாதரையும், குன்றின் மீதுள்ள ஸ்ரீ சுப்பிரமணியரையும் வணங்குதல் நலம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close