Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புத்தர் ஞானம் அடைந்த பிறகும் மனைவியை ஏன் சந்தித்தார்?#BudhdhaPoornimaSpecial

எஸ்.குருபாதம், சமய மெய்யியல் ஆய்வாளர் , எழுத்தாளர் டொரொன்டோ, கனடா  

புத்தர் பிறந்த நாள் இன்று. புத்தமதம் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைமுறையாக இருந்து வருகிறது. குறிப்பாக, கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசிய மக்கள் பெரிதும் ஆராதிக்கும் மதம். இந்தியாவிலும் புத்தரின் கொள்கைகக்குப் பெரும் 
மதிப்பு காலங்களைக்கடந்து பொக்கிஷங்களாக மதிக்கப்படுகின்றது. புத்தர் போதனைகள் மிகவும் எளிமையானவை. எந்தவித சிக்கலும் 
இல்லாத தெளிவான நெறி முறைகள். இன்று புத்தர் பிறந்த நாள்.

 

***

சித்தார்த்தன், ஒரு விழாவில்தான் யசோதராவை சந்தித்தான். அப்போதே அவரது அழகில் மயங்கினான். யசோதராவுக்கும் சித்தார்த்தனை ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. கபிலவஸ்துவின் இளவரசனாக இருந்தபோதிலும், யசோதராவை மணமுடிக்க பெரும் போட்டி இருந்தது. யசோதராவின் தந்தை நடத்திய விற்போட்டியில் பல ஜாம்பவான்கள் கலந்துகொள்ள, ஒல்லியாகவும் சாந்தமாகவும் இருந்த சித்தார்த்தன் வென்றார். யசோதராவை மணமுடித்து லும்பினி கார்டனுக்கு வந்து சேர்ந்தார்.

புத்தர்


***
ஒரு நாள் தனது தேரோட்டி சன்னாவுடன் நகர்வலம் வரும்போதுதான்  பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவற்றைப் பற்றி முதன்முதலாக அறிந்துகொண்டார். உலக வாழ்க்கை இவ்வளவுதானா? உண்மையான வாழ்வு எதுவென அறியத் தொடங்கினார்.
***
தனது 29 வது வயதில் ஒரு நள்ளிரவில் இளம் மனைவி யசோதராவையும் மகன் ராகுலையும் பிரிந்து சென்றார். ஞானத்தைத் தேடி உண்மையைத்தேடி...
***
தனது தலைமுடியை மழித்து சன்னாவிடம் கொடுத்து அனுப்பினார். தான் துறவறம் பூண்ட செய்தியைச்  சொல்லாமல் சொல்லி அனுப்பினார்.

ஞானம்

12 ஆண்டுகாலம் படாத பாடுகள் பட்டார். காடு, மலை, நதி எனப் பலவற்றையும் கடந்து பயணம் போனார். எங்கு சென்று தேடியும் அவர் தேடியது கிடைக்கவில்லை. ஒரு நாள் போதி மரத்தடியில் ஊண் உறக்கமின்றி தவத்திலமர்ந்து 49-ம் நாள் ஞானமடைந்தார். 'ஆசையே துன்பங்களுக்குக் காரணம்' என்றார். நற்கொள்கை, நன்மொழி, நல்வாழ்வு, நல்லெண்ணம், நல்லார்வம், நன்னடத்தை, நல்முயற்சி மற்றும் நற்சிந்தனை ஆகிய எட்டு வழிகளே வாழ்வில் முக்தி அடைவற்கான வழிகள் என போதித்தார்.
***
புத்தர் ஞானமடைந்தபின், அவர் தன் சீடர்களிடம் முதன்முதலில் சொல்லியது 'நான் எனது மனைவி யசோதாராவிடம் செல்ல விரும்புகிறேன் அவளுடன் பேச விரும்புகிறேன்' என்றார். புத்தரின் சீடர்கள் 'உங்களைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள். நீங்கள் பிரிந்து 12 வருடங்களுக்குப் பிறகு, ஏன் இப்போது அந்த நினைப்பு ஏற்பட்டது?' என்றார்கள். குருபாதம்அதற்கு புத்தர் 'நான் இந்த ஞான நிலையை அடைந்ததற்கு அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அதைத் தெரிவிக்க வேண்டும்' என்றார். புத்தர் அரண்மனைக்கு வந்தார்மக்கள்
மனைவி யசோதாராவைச் சந்தித்தார். புத்தர் மீது கோபப்பட்டாள். பல ஆண்டுகள் பிரிந்திருந்த கோபம் அது. தனக்குச் சொல்லாமல் தன்னை விட்டுப்பிரிந்து போனதில் ஏற்பட்ட கோபம் அது. 

'தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறேன். அப்போது புரியாமல் செய்துவிட்டேன். அப்பொழுது இந்தப் பிரக்ஞை நிலையில் நானிருக்கவில்லை. இப்போது புரிந்த நிலையில் இருக்கிறேன், என்னுடைய அனுபவத்தை உன்னோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்' என்றார். 

மனைவி யசோதரா புத்தரை உற்றுநோக்கினார். தலையைச் சுற்றி ஒளிவட்டம், தனது பழைய கணவர் புதியவருக்குள் மறைந்துவிட்டார் என்பதை உணர்ந்து, புத்தரின் காலில் விழுந்து தன்னை சீடராக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.
***
புத்தர்-யசோதரா சந்திப்பைப் பற்றி ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். 
யசோதரா புத்தரிடம்

'நீங்கள் ஒரு விஷயத்தை மட்டும் கூறுங்கள். நீங்கள் எதையெல்லாம் அடைந்திருக்கிறீர்களோ, அவையெல்லாம் என்னால் கவனிக்க முடிகிறது. ஒரேயொரு விஷயத்தைமட்டும் சொல்லுங்கள். இங்கேயே இந்த வீட்டிலேயே அதை உங்களால் ஞானத்தை அடைய முடியாதா?'

அதற்கு புத்தரால், 'முடியாது' என்று சொல்ல முடியாது. புத்தருக்கு அது அங்கேயே நிகழமுடியும் என்பது தெரியும். 
ஞானம் அடைவதற்கு ஒரு காட்டிலோ, ஆலமரத்தடியிலோ வசிப்பதற்கு எந்தச் சம்பந்தமும் கிடையாது. அதற்கும் உண்மை நிலைக்கும்தான் சம்பந்தம் உள்ளது. அந்தப் பேரியக்க உயர்த்தன்மை எங்கேயும் இருக்கிறது என்பதை புத்தர் உணர்ந்திருப்பதால், முடியாது என்று சொல்ல அவரால் முடியாது, என்று தாகூர் கவிதையில் கூறுகிறார்.
ஆண் பெண்ணை முழுமையாக்குகிறான்,

பெண் ஆணை முழுமையாக்குகிறாள்.

இருவரும் சேர்ந்து உலகத்தை முழுமையாக்குகிறார்கள்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement