ஆ முதல் ஒள  வரை... ஏழு சக்கரங்களை வலுப்படுத்தும் தியானம்..!

நம் உடலில் ஏழு ஆதாரச் சக்கரங்கள் அமைந்துள்ளன. மூலாதாரம் தொடங்கி சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ராரம் என்பவையே அந்த ஏழு ஆதாரச் சக்கரங்கள். இந்த ஏழு சக்கரங்களின் வழியே, நம் ஆன்மா பயணிக்கும் போது சில ஓசைகளைக் கேட்க முடியும். அந்த ஓசைகளை அறிந்து, உணர்ந்து அந்த ஒலிகளையே தனது மொழியாக்கியவர்கள் தமிழர்கள். பல்வேறுவிதமான நோய்களுக்குத் தமிழ் மொழியே மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தின் ஒலியும் நம் பிணிகளைப் போக்கும் மாத்திரைகள் போன்று செயல்படுகின்றன என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர். மேலும் இதன் நன்மைகளைப் பற்றி தியானம் மற்றும் யோகாப் பயிற்சியாளர் மதன் மோகன்ராஜிடம் கேட்டபோது அவர் கூறிய தகவல்கள்.

தியானம்

பிரபஞ்ச ஆற்றலை நம் உடல் உணர, தியானம் உதவுகிறது. நம் உடலையும் பிரபஞ்சத்தையும் இணைக்கும் புள்ளியாக நம் உயிர் எழுத்துக்கள் இருக்கின்றன. பிரபஞ்சமெங்கும் நிறைந்திருப்பது தமிழ் எழுத்துக்களின் அதிர்வுகளும், அதன் அலைவரிசைகளுமே. மனிதன் ஈர்ப்பு விதிக்கு உட்பட்டே இயங்குகிறான். ஒலி உருகேற உருகேற ஒளி (ஆன்மா) உருகேறுகிறது.மதன் மோகன்ராஜ்

நம் உயிர் எழுத்துக்களில் 'ஆ' முதல் 'ஒள' வரையிலான ஒவ்வொரு எழுத்தும், நம் உடலில் ஒவ்வோர் வேலையைச் செய்கிறது,

'ஆ'

தியான நிலையில் அமர்ந்து 'ஆ' என்கிற உயிரெழுத்தை மனதுக்குள் தொடர்ந்து ஒலிக்கச் செய்தால், சஹஸ்ராரச் சக்கரம் நல்ல இயக்கம் பெறும். பிரபஞ்ச சக்திகள் நம்முள் பாயும். சுவாசம் உச்சந்தலையில் நிலைபெறும். இதன் மூலம் ஆன்ம விடுதலை, முக்தி மற்றும் பரவசநிலை பெற்று வாழலாம்.

'ஈ'

தியான நிலையில் அமர்ந்து 'ஈ' என்கிற உயிரெழுத்தை மனத்தினுள் ஒலிக்கச் செய்தால், ஆக்ஞைச் சக்கரம் நன்கு இயக்கம் பெறும். மூச்சானது புருவ மத்தியில் நிலைபெறும். அறிவில் சிறந்தவராகவும் , ஞானமுள்ளவராகவும் வாழும் வாழ்க்கையைப் பெறலாம்.

'ஊ'

தியான நிலையில் அமர்ந்து 'ஊ' என்கிற உயிரெழுத்தை மனதினுள் ஒலிக்கச் செய்தால், விசுத்திச் சக்கரம் இயங்க ஆரம்பிக்கும். சுவாசமானது கழுத்து சங்குத் துடிப்பில் நிலைபெறும். இந்த இயக்கத்தினால் பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வாழலாம்.

'ஏ'

தியான நிலையில் அமர்ந்து 'ஏ' என்கிற உயிரெழுத்தை மனத்தினுள் ஒலிக்கச் செய்தால், அனாகதச் சக்கரம் இயக்கம் பெறும். சுவாசமானது இதயத்தில் நிலைபெறும். இதன் மூலம் அன்பு மிகுந்தவராகவும் , படைப்பாற்றலுடனும் ஒருவர் திகழ முடியும்.

உயிர் எழுத்துக்கள்

'ஐ'

தியான நிலையில் அமர்ந்து 'ஐ' என்கிற உயிரெழுத்தை மனத்தினுள் ஒலிக்கச் செய்தால் மணிபூரகச் சக்கரம் இயக்கம் பெறும். சுவாசமானது தொப்புள் பகுதிக்குச் சற்று கீழே நிலைபெறும். இதன் வாயிலாக கடின உழைப்புடனும் , விடாமுயற்சியுடனும் வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.

'ஓ'

தியான நிலையில் அமர்ந்து 'ஓ' என்கிற உயிரெழுத்தைத் தொடர்ந்து மனத்தினுள் ஒலிக்கச் செய்தால், சுவாதிஷ்டானச் சக்கரம் இயக்கம் பெறும். மூச்சானது முதுகுத் தண்டின் கீழ்மையப் பகுதியில் நிலைபெறும். இதனை நன்கு இயக்கச் செய்தால், உலக இன்பங்களுக்கு சொந்தக்காரர் ஆகலாம்.

'ஔ'

தியான நிலையில், அமர்ந்து 'ஔ' என்கிற உயிரெழுத்தைத் தொடர்ந்து மனதுக்குள் ஒலிக்கச் செய்தால் மூலாதாரச் சக்கரம் இயங்கத் தொடங்கும். சுவாசம் மலவாயிலுக்கு சற்று மேலே நிலைபெறும். இதன் வாயிலாக நல்ல உணவு, உறக்கம், மன நிம்மதி போன்றவற்றைப் பெறுவோம்.

தியானம்

தமிழர்களின் மொழி, உடல், இறைவழிபாடு இம்மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் மொழியும், நம் வழிபாடும் நம்மை நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ வழிவகை செய்கிறது. மொழி வெறும் தகவல் பரிமாற்றத்துக்கு மட்டும் இன்றி நமக்கு இறை வடிவமாகவும் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!