Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தவறான நட்பால் பாதை மாறும் ஜாதக அமைப்பும் பரிகாரங்களும்! #Astrology

இப்போதெல்லாம் நாளிதழ்களைத் திறந்தாலே கள்ளக்காதல் சம்பவங்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று நடைபெறுவதைப் பார்க்கும்போது, 'இந்தச் சமூகம் எங்கே செல்கிறது?' என்று கவலையுடன் சிந்திக்கவேண்டியதாக இருக்கிறது. போதாக்குறைக்கு ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சோஷியல் மீடியாக்களால் ஏற்படக்கூடிய நன்மைகளை விட அதிகமாக நேரத்தை வீணடிக்கவும், விபரீத நிகழ்வுகள் நடைபெறவும் காரணமாக அமைந்துவிடுகிறது.

ஜாதக அமைப்பு

ஒரு குடும்பத்தில் ஒருவர் செய்யும் தவறு அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிவிடுகிறது. இப்படி தடம் மாறிப்போகும் அமைப்பில் உள்ள ஜாதக அமைப்புகள் எவை, அவற்றுக்கு உரிய பரிகாரங்கள் என்ன என்று ஜோதிட நிபுணர் சூரிய நாராயணமூர்த்தியைக் கேட்டோம்.ஜொதிடர் சூரியநாராயணன்

'ஒரு மனிதனுக்கு நல்லதுக்கும் நாலு பேர் வேண்டும். கெட்டதுக்கும் நாலு பேர் வேண்டும்' என்பார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், நல்லது செய்ய நாலு பேர் கூடுவதை விட, கெட்டது செய்ய பத்து பேர் கூடி விடுகிறார்கள். இது எப்படி?

நாம் தினமும் பேப்பரில் வரக் கூடிய செய்திகளைப் பார்க்கும்போது ஆள்கடத்தல், கள்ளக்காதலுக்கு உதவி, வழிபறிக் கொள்ளை, வீட்டில் கொள்ளை என்று படிக்கும்போது தனிமனிதனாக இது போன்ற செயல்களைச் செய்ய முடியாது. ஆனால், பல பேர் சேர்ந்து இதனை செய்ய முடிகிறது. அப்படி தீய செயல்கள் செய்வதற்கு பலர் ஒன்று கூடுவது எப்படி என்பதைப் பற்றி ஜோதிட ரீதியாகப் பார்ப்போம்.

ஜாதகக் கட்டத்தில் நண்பர்கள் பற்றி பார்க்கும்போது, 7-ம் பாவத்தைத்தான் பார்க்கவேண்டும். 7 – ம் பாவம் என்பது குறிப்பாக மனைவி பற்றி கூறினாலும், கூட்டாளிகள், நண்பர்களையும் குறிப்பதாகவும் இருக்கிறது. மனைவி எந்த விதமான ரத்த சம்பந்தமும் இல்லாமல், நம்முடைய தேவையைக் கருதி நமக்கு உதவுவது போலவே, நண்பர்களும் எந்தவிதமான ரத்தம் பந்தமும் இல்லாமல் நம்முடைய தேவையைக் கருதி சேவை செய்யும் நிலையில் அவர்கள் இருப்பதால்தான், நண்பர்களுக்கும் 7-ம் பாவம் சொல்லப்பட்டு இருக்கிறது.

தொடக்கத்தில் நல்ல விதமாகத் தொடங்கினாலும், பிறகு தவறான பாதையில் பயணிக்கும் ஜாதகர்களைப் பற்றி ஜோதிட ரீதியாகப் பார்ப்போம்.

தவறான நட்பு

* ஒருவரது ஜாதகத்தில், பாக்யஸ்தானாபதி எனும் யோகாதிபதி அதாவது 9-ம் வீட்டுக்கு உடையவர் கெட்டுப் போய்விட்டால் ஜாதகருக்கு பெரிய அளவில் எந்தவிதமான யோகமும் நடைபெறாமல் போகும்.

* ஜாதகத்தில் பாதகம் செய்யும் கிரகம், அதிக பலம் பெற்றால் ஜாதகரை தீய எண்ணங்கள், தீயசெயல்கள் என அலைக்கழிக்கும்.

* 6, 8, 12 -ம் இடத்துக்கு உடையவர்கள் அதிக பலம் பெற்று இருந்தாலோ, 6, 8, 12-ம் வீட்டிலேயே இருந்தாலோ தீயசெயல்கள் செய்ய அஞ்சவும் மாட்டார்கள். அதற்கு வெட்கப்படவும் மாட்டார்கள்.

* 6, 8, 12 -ம் வீட்டுக்கு உடையவர்கள் பாதகாதிபதியுடன் இணைந்து அதற்குரிய தசா - புக்தி நடந்தால் தீயதைச் செய்ய சிறிதும் தயக்கம் காட்ட மாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் சிறையில்தான் காலத்தைக் கழிப்பார்கள்.

* 6, 8, 12 -ம் வீட்டுக்கு உடையவர்கள் வீடு மாறி நிற்பதும் இவர்களது தசா - புக்தி நடப்பில் இருந்தால், திருட்டுத் தொழிலில் ஈடுபடுவார்கள்.

* ஜாதகத்தில் முக்கிய கிரகங்களாக கருதப்படும் லக்னாதிபதி, ராசிக்கதிபதி, திரிகோணாதிபதிகள் நீசம் பெற்றாலும், ராகு - கேதுவுடன் சேர்ந்து அதற்கு உரிய தசா புக்தியை நடந்தாலும் மனத்துணிவுடன் தவறான பாதையில் செல்வார்கள். காலம் கடந்து வருந்துவார்கள்.

* இத்தகைய கிரக அமைப்புகள் கொண்டவர்கள் ஒன்றாகச் சேரும் போதுதான் கூட்டுக் கொள்ளை, கொலை போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

ஜாதகத்தைப் பொறுத்தவரை ஆண்கள், பெண்கள் என்னும் பேதமெல்லாம் கிடையாது. இத்தகைய ஜாதக அமைப்பில் பிறந்திருந்தால் இந்த மாதிரி பலன்கள்தான் நிகழும். இதை நாம் அனுபவத்தில் அறிந்துகொண்டு முறையான பரிகாரங்களைச் செய்து, இறைவழியில் பயணித்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

பகவான் புதன்

பரிகாரம்

நல்ல புத்தியும் நல்ல நண்பர்களும் அமைய வேண்டுமானால், திருவெண்காட்டில் அமைந்துள்ள புதன் பகவானை வழிபட்டால், கெட்டது நீங்கும் . இல்லாவிட்டால், அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் கெட்டது நீங்கி நன்மைகள் பெருகும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close