Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பின்பற்ற வேண்டிய ஆன்மிக ஜோதிட நடைமுறைகள், பரிகாரங்கள்! #Astrology

27 நட்சத்திரக்காரர்களின் குணங்கள், அவர்கள் வாழ்க்கையில் மேற்கொள்ளவேண்டிய பரிகாரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றோம். பூரட்டாதி நட்சத்திரத்தைத் தொடர்ந்து உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள், அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள், செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி 'ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

உத்திரட்டாதி

 

நட்சத்திர தேவதை : அஹிர்புத்னியன் சங்கு, சக்கரங்களைக்கே.பி.வித்யாதரன்

கைகளில் ஏந்தியவாறு காட்சியளிப்பவர்.

வடிவம் : சதுர வடிவில் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்டவை.

எழுத்துகள் : து, ஞ, ச, ஸ்ரீ.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள்:

இந்த நட்சத்திரத்தின் அதிபதி சனீஸ்வர பகவான். அவருடைய நேர்மறை சக்தி மட்டுமே இதை ஆட்சி செய்கிறதே ஒழிய எதிர்மறை சக்திகள் ஆட்சி செய்யவில்லை.

நட்சத்திர மாலை, ... இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் உண்மையே பேசுவார்கள்; சொன்ன சொல்லை நிறைவேற்றுவார்கள்; தர்ம வழியில் சேர்த்த செல்வம் உடையவர் என்கிறது.

ஜாதக அலங்காரம், இவர்கள் எப்போதும் தண்ணீரில் விளையாட ஆசைப்படுபவர்; உறவினர், நண்பர்களை உடையவர்; நடுநிலைமை உடையவர்; தனவான்; பெண்களுக்கு அன்பானவர்; சாமர்த்தியசாலி என்கிறது.

யவன ஜாதகம், நீங்கள், குழந்தை பாக்கியம் உள்ளவர்; சத்ருக்களை வெற்றிகொள்பவர்; என்கிறது. பிருகத் ஜாதகம், வாதிடும் திறமை உள்ளவர்; சுக வாழ்வு வாழ்வார்கள் என்கிறது.

இதில் பிறந்தவர்கள் கற்றறிந்தவர்களுக்கு நண்பர்களாக இருப்பார்கள். பழமொழி கூறுபவராகவும் தாம்பூலம் தரிப்பவராகவும் இருப்பார்கள். வெளியூர்களுக்கு பயணம் செய்ய விரும்புவார்கள். அகன்ற மார்பு, காதுகளை உடையவராகவும் தான தர்மம் செய்பவராகவும் விளங்குவார்கள். தொலைநோக்குச் சிந்தனையால் சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலையை அடைவார்கள். ஆழமாக யோசிப்பதால் அதிகம் பேசாதவர்கள்! இவர்கள் தொட்ட காரியம் யாவும் துலங்கும். சகல கலைகளையும் ஆழமாக அறிந்திருந்தாலும் ஆரவாரமில்லாதவர்.

கிரகங்கள்

வெளி உலகுக்காகப் போலியாக வாழாத யதார்த்தவாதி. வேத, உபநிடதங்களில் கரைகண்டவர். நீதி, நேர்மை, உண்மை ஆகியவற்றை விட்டு விலகாதவர். இவர்களுக்குள் எப்போதும் ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்கும். ஆரம்பத்தில் சனி தசை வருவதால், சிறு வயதில் சளித் தொந்தரவு, வயிற்று வலி, சின்னஞ்சிறு விபத்தால் கை, கால்களில் காயங்கள் ஆகியவை ஏற்படும்.

பன்னிரண்டு வயது வரை பிடிவாதம், எதிர்மறைப் பேச்சு ஆகியவை இருக்கும். ஆரம்பக் கல்வி சுமார்தான். இவர்களில் பலர் கூச்ச சுபாவம் உள்ளவர்கள். விளையாட்டில் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டுவார்களே தவிர, பின்னர் அதன் பக்கம் போவதும் இல்லை. சிலர், பெற்றோரைப் பிரிந்து விடுதியில் தங்கிப் படிக்க நேரும். மேல்நிலைக் கல்வி மற்றும் கல்லூரிப் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

பொதுவாக சாதுவாக இருக்கும் இவர்கள், முன்கோபம் வந்தால் முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள். கவிதை, கதை எழுதுவார்கள். கணித மேதை, சட்ட நிபுணர், நீதிபதி, மனோதத்துவ நிபுணர், பத்திரிகையாளர் ஆகியோராக இவர்களில் பலர் இருப்பார்கள். வானவியல், மருத்துவம், ஜோதிடம், வங்கி ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். சிட்பண்ட்ஸ், கன்ஸ்ட்ரக்ஷன், பள்ளி, கல்லூரி, பதிப்பகம் ஆகியவை வைத்து நடத்துவார்கள்.

நட்பு வட்டம் உங்களுக்கு அதிகம். ஆனால், யாரிடமும் உதவி கேட்க மாட்டார்கள். மனைவியிடம் அதிகம் எதிர்பார்ப்பார்கள். ஆண் வாரிசுகள் அதிகம் இருக்கும். பிள்ளைகளை பண்பாடு, கலாசாரம் மாறாமல் வளர்ப்பார்கள்.

சொந்த வாகனம் நான்கு இருந்தும் சில நேரங்களில் நடந்து போவார்கள். நட்சத்திர ஓட்டலில் அமர்ந்து வெஜிடபிள் சூப்பை சுவைக்கும் போதும் சின்ன வயதில் அம்மாவின் கைப் பக்குவத்தில் தயாரான மிளகு ரசத்துக்கு இது ஈடாகாது என்பார்கள்.

27 வயது முதல் முன்னேறத் தொடங்குவார்கள். ஆனால் 39 வயதிலிருந்துதான் முழுமையாக எல்லாம் கிடைக்கும். இவர்களில் சிலருக்கு, 51 வயதிலிருந்து நாடாளும் யோகமும் உண்டு. மரம், செடி, கொடி நிறைந்த அமைதியான சூழலில் வீடு அமைந்தால் நல்லது என நினைப்பார்கள்.

இவர்களில் பலர் மத குருவாகவும், அடிக்கடி அயல்நாடு செல்பவர்களாகவும் இருப்பார்கள். இரும்பு, சிமென்ட், தங்க நகை, எலக்ட்ரானிக்ஸ் வகைகளில் பெரும் பணம் சம்பாதிப்பார்கள். பலர், வயதான காலத்தில் துறவறத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:

உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாத பரிகாரம்:

மயிலாடுதுறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அபயாம்பிகை உடனுறை மயூரநாதரையும் மேதா தட்சிணாமூர்த்தியையும் வணங்குதல் நலம்.

உத்திரட்டாதி நட்சத்திரம் இரண்டாம் பாத பரிகாரம்:

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் சந்நிதிக்கு அருகிலுள்ள ஹாட்சன்பேட்டையில் வீற்றிருக்கும் அலர்மேல் மங்கை உடனுறை ஆதிகேசவப் பெருமாளை வணங்குதல் நலம்.

முருகன்

உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:

திருச்சேறையில் அருள்தரும் ஸ்ரீ ஸாரநாயகி உடனுறை ஸ்ரீ ஸாரநாதப் பெருமானை வணங்குதல் நலம்.

உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:

மருதமலையில் அருள்மழை பொழியும் ஸ்ரீமுருகப்பெருமானை வணங்குதல் நலம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement