வேண்டும் வரங்கள் அனைத்தும் தரும் அருள் பூமி! தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் | All the blessings to be blessed by Thenampaakam Brahmapureeswarar

வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (15/05/2017)

கடைசி தொடர்பு:11:14 (17/05/2017)

வேண்டும் வரங்கள் அனைத்தும் தரும் அருள் பூமி! தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர்

யிலை சங்கரனாம் நம் ஐயன், உலக மக்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களை எல்லாம் அருள்புரிய திருவுள்ளம் கொண்டு, பல திருத்தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அந்தத் திருத்தலங்களில் தனிச் சிறப்பு கொண்ட தலமாகத் திகழ்வது தேனம்பாக்கம் திருத்தலம். தனிச் சிறப்புக்குக் காரணம் இங்கே ஐயன் கோயில் கொண்டது மட்டுமல்ல; ஐயனின் அம்சமாக அவதரித்த காஞ்சி மகா பெரியவா, நம்முடைய நன்மைக்காகவும், நம்முடைய பாவங்கள் எல்லாம் தொலைந்து போகவும் திருவுள்ளம் கொண்டு, நீண்ட நெடிய தவ வாழ்க்கை மேற்கொண்ட தவ பூமி. ஆம், தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் திருத்தலம், மாமுனிவரின் தவத்தில் கனிந்த அருள்பூமி!

பிரம்மபுரீஸ்வரர் திருத்தலம்

கயிலை நாயகனி அம்சமாக அவதரித்த காஞ்சி பெரியவர், இந்தத் தலத்தை தம்முடைய நெடிய தவத்துக்காகத் தேர்ந்தெடுத்த பின்னணி என்ன? அப்படி என்ன தனிச் சிறப்பு அந்தத் திருத்தலத்துக்கு வந்துவிட்டது?

அந்தத் திருத்தலம்தான் பிரம்மதேவரின் பிரார்த்தனையின்படி சிவபெருமான் தம்முடைய யதாஸ்தானமாகக் கொண்ட புனித பூமி! அந்தத் தலம்தான் சிவபெருமானின் சிவாஸ்தானம்! அதனால்தான் ஐயனின் அம்சமாகத் தோன்றிய காஞ்சி பெரியவர் அந்தப் புனித பூமியைத்  தம்முடைய தவ வாழ்க்கைக்காகத் தேர்வு செய்தார்.

அந்தத் தவபூமியில் அவர் நிகழ்த்திய அருளாடல்களுக்குப் பஞ்சமே இல்லை! உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, காஞ்சிப் பெரியவரின் அருள் பெற்று, வாழ்க்கையில் விரும்பிய அனைத்தும் பெற்றார்கள்.

மகா பெரியவா

காஞ்சி மாநகரம் முக்தி தரும் நகரங்களில் முதன்மையாகத் திகழ்கின்றது. அதனால்தான், 'நகரேஷு காஞ்சி' என்று கவி காளிதாசனால் போற்றப் பெற்றது. ஶ்ரீமத் வேதாந்த தேசிகரும், 'முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சி' என்று சிறப்பித்துப் பாடி இருக்கிறார்.

இத்தனை சிறப்பு மிக்க திருத்தலத்தில்தான் பிரம்ம தேவர், உயிர்களைப் படைக்கும் ஆற்றலைப் பெறுவதற்காக சிவபெருமானைக் குறித்து தவமியற்றி, படைக்கும் ஆற்றலைப் பெற்றார். தன்னுடைய தவத்துக்கும் வேள்விக்கும் மகிழ்ந்து தரிசனமளித்த சிவபெருமானிடம், தான் படைக்கும் ஆற்றலை வரமாகப் பெற்றதுடன், அந்தத் தலத்தையே சிவபெருமான் தம்முடைய யதாஸ்தானமாகக் கொண்டு எழுந்தருளவேண்டும் என்றும், அந்தத் தலம் சிவாஸ்தானம் என்று அழைக்கப்பெறவேண்டும் என்றும் வரம் பெற்றார்.

பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்

அப்படி சிவபெருமானின் யதாஸ்தானமான தேனம்பாக்கம் திருத்தலத்தில் காஞ்சி பெரியவர் பல ஆண்டுகளாக, நீண்ட தவ வாழ்க்கை மேற்கொண்டார். நாமெல்லாம் உய்வும் உயர்வும் பெறவேண்டும் என்பதற்காகவே தம்மை ஒடுக்கி தவம் மேற்கொண்ட காஞ்சி பெரியவர், அந்தத் தலத்திலிருந்தபடி பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்த்திய அருளாடல்களுக்கு அளவே இல்லை.

மகா ஞானியின் தவப் பயனாகவும், சிவபெருமானின் யதாஸ்தானம் என்னும் சிறப்பினாலும் பெருமையுடன் திகழும் தேனம்பாக்கம் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலைப் புதுப்பிக்க விரும்பி, திருப்பணிகளைத் தொடங்கி உள்ளனர். பிரம்மபுரீஸ்வரர் சந்நிதியுடன் பரிவார தெய்வங்களின் சந்நிதிகளும் புதுப்பிக்கப்படுவதுடன், மகா பெரியவா தியான மண்டபமும் புதுப்பிக்கப்பட்டு, வைகாசி மாதம் 25-ம் தேதி 8.6.17 அன்று காலை 10.30 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

பிரம்மபுரீஸ்வரர் கோயில் கினறு

நாமெல்லாம் நாளும் நலமும் வளமும் பெற்றிட, கயிலை நாயகனின் அம்சமாக அவதரித்த காஞ்சிப் பெரியவர் நீண்ட நெடிய தவம் மேற்கொண்ட, பரம பவித்ரமான தேனம்பாக்கம் திருத்தலத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகளுக்கு நாம் நம்மால் இயன்றளவு பொருளுதவி செய்து, பிரம்மபுரீஸ்வரரின் பேரருளுடன், மகா பெரியவா அனுக்கிரஹமும் சேர்த்துப் பெறலாம்.

நன்கொடைகள் அனுப்ப வேண்டிய விவரம்:

SRI SIVASTHANAM NITHYA POOJA TRUST

INDIAN BANK, SHANKARA MUTT, KANCHIPURAM,

A/C No. 774698810

IFSC CODE: IDIB000S085

தொடர்புக்கு:

எஸ்.சைலேஷ் - 09380872790

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்