வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (20/05/2017)

கடைசி தொடர்பு:19:18 (20/05/2017)

மாளிகைபோல் வீடு, நீச்சல்குளம், செல்லப்பிராணிகளுடன் வாழும் யோகம் யாருக்கு? #Astrology

வீடு பற்றிய கனவு இன்றைக்கு எல்லோர் மனதிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. ஆனால், அந்த வீட்டை அடைவதற்குரிய பாக்கியமோ எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை. மாளிகைபோல் வீடு, நீச்சல்குளம், செல்லப்பிராணிகளுடன் வாழும் யோகம் யாருக்குக் கிடைக்கும்? என்று ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

யோகம்

'தூக்கணாங்குருவியின் கூட்டைவிட அழகான வீட்டை எந்த இன்ஜினீயரும் கட்டிவிட முடியாது'. அதைப் பார்க்கும்போதெல்லாம் நமக்கும் இப்படி ஒரு எழிலான வீடு அமைய வேண்டுமென எல்லோரும் ஆசைப்படுவார்கள். ஆனால் எல்லோருக்கும் இப்படிப்பட்ட வீடு அமைந்து விடுவதில்லை.

வீடு, நிலம், மனை செவ்வாய்தான் அதிபதி: வித்யாதரன்

ஒரு ஜாதகனின் அசையாச் சொத்துக்களான வீடு, நிலம், நிலங்களுடன் அமைந்த பண்ணை வீடு இவை அனைத்தும் ஜாதகத்தில் கேந்திரஸ்தானமான 1, 4, 7, 10 ஆகிய வீடுகளின் நிலைகளே இச்சொத்துக்களை நிர்ணயம் செய்யும் காரகத்துவம் பெற்றதாக ஆகிவிடுகின்றன. விவசாய விளைநிலங்களுக்கும், வீட்டு மனைகளுக்கும் காரகத்துவம் பெற்றவர் செவ்வாய், கட்டடங்களுக்கு காரகத்துவம் பெற்றவர் கேது, இவை இரண்டு கிரகங்களும் இருக்கும் இடத்தைக் கொண்டுதான் ஜாதகரின் வீட்டு அமைப்பை நிர்ணயிக்கமுடியும்.

நான்காம் வீடு சுபர் பார்வை பெற வேண்டும்:

ஜாதகக் கட்டத்தில் 4 ஆம் இடத்துக்கு உடையவர் உச்சம் பெற்றிருந்தால் வசதியுடன் பெரிய வீட்டில் வாழும்வாய்ப்பைத் தருவார். ஜாதகத்தில், 4ஆம் இடம் என்பது தாயார், வீடு, சுகம் ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்கின்றது. 4ஆம் வீடு சுபர் சேர்க்கையுடன், அல்லது சுபர் பார்வையுடன் இருந்தால்தான் சொந்தவீட்டில் வசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.

அரண்மனை வீடு

சூரியன் நின்றால் அரசன் போல் வாழ்வு:

4 ஆம் வீட்டில் சூரியன் நின்றால் குடிசை வீடாக இருந்தாலும், அதிகமான பரந்தவெளியுடன், மரங்கள், பறவைகளுடன் இயற்கையான சூழலில் வீடு அமையும். சிலருக்கு இவர்களது தோட்டத்திலேயே இதுபோன்ற வீடு அமையும். எந்த நாட்டில் எந்த நகரத்தில் இவர்களது பிள்ளைகள் படித்தாலும் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தாலும் தன்னுடைய தாய், தந்தை இருக்கும் இந்த வீட்டை சொர்க்கபுரியாக நினைத்து வந்துபோவார்கள். இப்படிப்பட்ட தோட்டவீட்டைத்தான் 'ஃபார்ம் ஹவுஸ்' என வெளிநாடுகளில் சொல்கிறார்கள். சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் தொழிலதிபர்கள் பலரும் இதுபோன்ற வீடுகளை அமைத்து வருகின்றனர். இத்தகைய அமைப்பை சூரியனே வழங்கும்.

ரிசார்ட்ஸ்

நான்காம் வீட்டில் சந்திரன்:

இத்தகைய அமைப்புள்ள ஜாதகருக்கு நீர் நிறைந்த 'வசந்த மாளிகை 'போல் வீடு அமையும். எந்தப் பக்கம் போனாலும், பைப்பைத் திருகினால் தண்ணீர் கொட்டும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்புள்ளவர்கள் வீடுகளில் நீச்சல்குளம் அமைத்து வாழ்வார்கள்.

லாபம் தரும் பண்ணை வீடுகள்:

4 ஆம் வீட்டு அதிபதிக்கு லாபஸ்தானமாகி 2 ஆம் வீட்டில் இருக்க, இந்த ஜாதகர் பண்ணை வீடு அமைத்தால் அந்த வீட்டால், வருமானம் ஈட்டுவார். இந்த வீட்டை கிழக்கு பார்த்த வீடாக அமைத்துக்கொள்வது நல்லது. இந்த யோகத்துக்கு 'லபக்காலா யோகம்' என்று பெயர்.

ரிசார்ட்ஸ் போல் அமையும் வீடுகள்:

அர்க்கலா யோகம் உள்ளவர்களுக்கு சுகபோகமான வாழ்க்கையும், அரச வம்சத்துக்கு இணையான சொத்துக்களும் அமையும். இந்த யோகம் 10  ஆம் வீட்டு அதிபதியால் அமைகிறது. 4 ஆம் வீட்டை கேது ஆண்டால் கட்டட பூமியும், 10 ஆம் வீட்டு அதிபதி 5 ஆம் வீட்டில் ஆட்சி பெற்றால் சுகமான பண்ணை வீடே, சௌகரியமான பொழுதுபோக்கு மையமாகவும் அமைந்து போகும். கால்ஃப் கிரவுண்ட், டீ எஸ்டேட், ரிசார்ட்ஸ் என கோலாகலமான வாழ்வு அமையும். மூத்தவர்களின் வம்சா வழியாலேயே பண்ணை வீடுகளை ஜாதகர் பெற்றிருப்பார்.

ஃபேர்ட்ஸ் நெஸ்ட்

செல்லப்பிராணிகளுடன் வாழும் கடற்கரை வீடுகள்:

அதிகமான பொழுது போக்கு மையங்களை அமைத்துக்கொள்ள 11ஆம் வீட்டில் சனி இருந்து அமைய வேண்டும். இதை வசுமதி யோகம் என்பார்கள். இவர்களுக்கு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இருப்பது போல உப்பு வளம் பெற்ற பூமியில் சுத்தமான நீர் நிலைகள் சூழ வனம் போன்ற மேற்கு பார்த்த வீடுகள் அமையும். கால்நடைகள், பறவைகள் என்று செல்லப்பிராணிகளுடன் அமைதியாக வாழ்வார்கள்.

தீவுகளை விலைக்கு வாங்கி வாழும் தனிக்காட்டு ராஜாக்கள்:

ஜாதகருடைய ஜாதகக் கட்டத்தில் 1, 4, 7, 10 ஆம் வீடுகளாகிய நான்கு கேந்திர ஸ்தானங்களும் பலம் பெற்றால், சிங்கம் போன்ற ராஜநடையுடன் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்வார்கள். இதை 'சதுர்பாத யோகம்' என்பார்கள். இயற்கை வளம் மிக்க தீவு விலைக்கு வாங்கி தங்கள் வீடுகளை கட்டிக்கொண்டு வாழ்வாங்கு வாழ்வார்கள். சுக்கிரன், உச்சம் பெற்ற சந்திரனும், இதற்கு காரகத்துவம் பெறுகிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்