ஜாதகத்தில் 6, 8 மற்றும் 12ஆம் இடமாகிய மறைவுஸ்தானம் கெடுபலன் மட்டுமே தருமா?

ருவருடைய ஜாதகத்தில் 6, 8 மற்றும் 12 ஆம் இடங்கள் மறைவு ஸ்தானங்களாக இருக்கின்றன். அவை ஜாதகருக்கு நன்மை செய்யாத இடங்களாக இருக்கின்றன. ஜாதகத்தில் 6, 8 மற்றும் 12 ஆம் இடமான மறைவுஸ்தானம்  கெடுபலன் மட்டுமே செய்யுமா? என்று ஜோதிட நிபுணர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணனிடம் கேட்டோம்.

மறைவுஸ்தானம்

ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்துக்கு 6 ,8 ,12 ஆம் இடங்கள் சுப கிரகங்களுக்கு மறைவு ஸ்தானங்கள் ஆகும்.  சுப கிரகங்கள் எனும் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் ஆகியோர்  ஒரு லக்னத்துக்கு 1,  4, 7 மற்றும் 10 என்ற கேந்திர ஸ்தானங்கள் மற்றும் 5, 9 ஆம் இடம் என்கிற திரிகோண ஸ்தானங்களில் இருக்கும்போது நல்ல பலன்களைத் தருவார்கள்.  ஆனால், அந்த கிரகங்களே  6, 8, 12 ஆம் இடங்களில் இருந்தால் நற்பலன்களைத் தரமாட்டார்கள்.

மறைவுஸ்தானம்

பாபகிரங்களான  சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியவை லக்னத்துக்கு 1,  4, 7 மற்றும் 10 என்ற கேந்திர ஸ்தானங்கள் மற்றும் 5, 9 ஆம் இடம் என்கிற திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்தால், சில சமயம் நல்ல பலன்களைத் தர மாட்டார்கள்.  ஆனால்,  அதே  6, 8 மற்றும் 12ஆம் இடங்களில் அமர்ந்தால், ஜாதகருக்கு ஒரு உயர்வைத் தருகிறார்கள். அதாவது, ஜாதகரைக் கடுமையாக வாழ்க்கையில் போராட வைத்து உழைப்பால் உயர்த்தி விடுவார்கள். 

இந்த 6, 8 மற்றும் 12 ஆம் வீட்டுக்கு உரியவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வீடு கொடுத்து அமர்ந்தால், விபரீத ராஜ யோகத்தைக் கொடுத்து திடீர் அதிர்ஷ்ட வாழ்வைக் கொடுப்பார்கள்.  

கிரகங்கள்  

இப்போது கிரக ரீதியாகப் பார்ப்போம். சூரியன், செவ்வாய், சனி , ராகு, கேது  ஆகிய கிரகங்கள் லக்னாதிபதிக்கு 8,12 ஆம் இடத்தில் இருந்தால், மறைவுஸ்தானம். சந்திரன், புதன், குரு, லக்னத்துக்கு 3, 6, 8 மற்றும் 12 ஆம் இடத்தில் இருந்தால் மறைவு ஸ்தானம்.

சுக்கிரன் லக்னாதிபதிக்கு 3, 8 இல் இருந்தால் மட்டும் மறைவு, சுக்கிரன் லக்னாதிபதிக்கு 6, 12ஆம் இடத்தில் இருந்தால் மறைவு இல்லை. மேலும் ஒன்பது கிரகங்களில் சுக்கிரனுக்கு மாத்திரம் விரையாதிபத்தியம்  என்கிற 12 ஆம் பாவ தோஷம் கிடையாது. சரி, இந்த அமைப்பில் கிரகங்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பார்ப்போம்.ஆஸ்ட்ரோ கிருஷ்ணன்

கட்டாந்தரையில்  படுத்து உறங்கும் அமைப்பு:
புல் தரையில் அல்லது கட்டாந்தரையில்  படுத்து உறங்கும் அமைப்பு எண்  12 ஆம் இடத்துக்கு உடையவன் 6 அல்லது 8 ஆம் இடத்தில் அமர, சனி, ராகு , 12 ஆம் இடத்தில்  அமர்ந்து, சுபர் பார்வையும் பெறவில்லை என்றால் ஜாதகர்  கட்டாந்தரையில்தான் படுத்து உறங்குவார். 

பட்டு மெத்தை மீது படுத்து உறங்கும் அமைப்பு: 
12 ஆம் இடத்தில் சுக்கிரன் உச்சம் அல்லது ஆட்சியாக, குரு சுப ராசியில் அமர அல்லது லக்ன கேந்திரத்தில் உச்ச கிரகம் இருந்தாலும் அந்த இடத்தை சுப கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் ஜாதகர் ஊஞ்சல் ஆடும் மஞ்சத்தில் பட்டு மெத்தை மீது படுத்து உறங்கும் பாக்கியத்தை அடைவார் . உடல் நன்றாக இருக்க, நல்ல சத்தான உணவும் வாசனைத் திரவியங்களும் பூசிக்கொண்டும் நல்ல பெண்கள் சூழ பவனி வருவார் . மேலும் இன்னிசை முழங்க, அழகிய பெண்கள் சேவை செய்ய அந்த ஜாதகர் ஒரு ராஜா போல் வாழ்வார் . 

நீண்ட ஆயுள் உடைய அமைப்பு: 
லக்னாதிபதிக்கு 8ஆம் இடத்துக்கு உடைய கிரகத்தை 9 ஆம் இடத்துக்கு உடைய கிரகம் சுபர், பாவியாக இருந்தாலும் அவர் உச்சமடைந்து சேர்ந்தாலும், பார்த்தாலும் சந்தேகம் இல்லாமல் ஆயுள் தீர்க்கம் உண்டு. அதேபோல்  8 ஆம் இடத்துக்குடையவன் ஆட்சி உச்சமானாலும், லக்னத்தில் பலமானாலும் பூரண ஆயுள் உண்டு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!