வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (23/05/2017)

கடைசி தொடர்பு:08:05 (24/05/2017)

'ரஜினியின் மனம் பகல் இரவு போல் மாறிக்கொண்டே இருக்கும்!' - பெயரியல் நிபுணர் கருத்து #Nameology

ஜினிகாந்த் என்னும் பெயர் தமிழ் திரையுலக வரலாற்றில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. 'அபூர்வ ராகங்கள்' தொடங்கி  கபாலி வரை அவரது படங்களுக்கு  ஓர் எதிர்பார்ப்பு இருந்தே வருகின்றது. இந்தக் 'காந்தம்' தமிழக மக்களை எப்படி எதனால் ஈர்த்தது? அப்படியென்ன வசியம் இவரது பெயரில் ஒளிந்துள்ளது. ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் பற்றி பெயரியல் நிபுணர் சி.வி.ராஜராஜனிடம் கேட்டோம்.

ரஜினி

அதேவேளையில் அரசியலில் இவர் எழுப்பிய 'எழுச்சிக்குரல்கள்' எங்கேயோ கேட்ட குரலாக இருந்துவந்து இப்போது நான் போட்ட சவாலாக மாறி இருக்கிறது. அரசியலில் இவரது நிலையை ஆய்வு செய்வதற்கு முன், இவரது பிறந்த தேதியின் பலம், பலவீனத்தைப் பார்ப்போம்.

ரஜினிகாந்த் பிறந்த தேதி 12-12-1950
1+2+1+2+1+9+5+0= 21
2+1=3
பிறந்த தேதி 1+2= 3

ரஜினிகாந்தின் பிறந்த தேதியை வைத்துப் பார்க்கும்போது அவரது உடல் எண், உயிர் எண் எல்லாமே 3 தான் வருகின்றது.
3 ஆம் எண்ணுக்குரிய காரகன் குரு. குருவின் ஆதிக்கத்தை வலிமையை முழுவதுமாகப் பெற்றவர். ஆனால், இந்த குருவின் சிறப்பம்சம் என்னவென்றால், பள்ளிக்கூட ஆசிரியர், கல்லூரி பேராசிரியர் போல், மற்றவர்களுக்கு ஆசோனைகள். அறிவுரைகள் கூற முடியும் மற்றவர்களை, நல்ல முறையில் உருவாக்க முடியும். அதாவது ஒரு ஆசிரியர், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். போன்ற படிப்புகள் படித்த அதிகாரியாக தன் மாணவனை உருவாக்க முடியும். ஆனால், அவரால் கலெக்டராகவோ, காவல்துறை உயர் அதிகாரியாகவோ ஆக முடியாது. நம் இந்தியாவின் ஜாதகமும் இப்படித்தான் இருக்கின்றது. INDIA
1+5+4+1+1+=12= 3

உலகில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன. ஆனால், எல்லா மதங்களும் தோன்றுவதற்கு முன்பே, இந்தியா மதரீதியான நாடாக, 'மதங்களின் தாய் நாடாக' இருந்திருக்கிறது. இந்து மதம், சமணம். பௌத்தம் சீக்கிய மதம் என்று இங்கு தோன்றிய அளவு மதங்களும் மத போதகர்களும் ஆன்றோர்களும் சான்றோர்களும் வேறு எங்குமே தோன்றவில்லை. ராஜராஜன்சகலருக்கும் உபதேசம் வழிகாட்டுதல்களை தானே முன்வந்து வழங்கிய நாடு. ஆனால், அது வல்லரசாக என்றும் ஆகவில்லை. மற்ற நாடுகளுக்கு நல்லரசாகத்தான் இருந்து வருகிறது. 

எதற்கு இதைச் சொல்கின்றேனென்றால், 3ஆம் எண் மற்றவர்களுக்குத்தான் வழிகாட்டும். இப்போது குருவின் ஆதிக்கம் பெற்ற ரஜினிகாந்த்தின் கலையுலக அரசியல் உலக வாழ்க்கையைப் பார்ப்போம். சிவாஜிராவ் கெய்க்வாட்டாக, அடையாறு நடிப்புப் பயிற்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவரை கே.பாலச்சந்தர் தனது படத்தில் அறிமுகம் செய்துவைத்து 'ரஜினிகாந்த்' என்ற பெயரை வைக்கிறார்.

RAJINIKANTH
2+1+1+1+5+1+2+1+5+4+5 = 28

2+8=10=1
மூன்றாம் எண் ஆதிக்கம் பெற்ற ரஜினிகாந்துக்கு சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள 1ஆம் எண் பெயரை மிகப் பொருத்தமாக, தன்னை அறியாமலே சூட்டி விடுகின்றார். அன்று தொடங்கிய வெற்றி இன்றுவரை அவருக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது காரணம் தமிழ்நாடுதான்.
TAMILNADU
4+1+4+1+3+5+1+4+6 = 29
2+9=11=2.

3ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்த ரஜினிகாந்துக்கு குருவின் வலிமை உண்டு. இவர் சந்திரனின் வலிமைபெற்ற தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்திட, 'குரு சந்திர யோகம்' ஏற்பட்டு, காந்தம் போல, சந்திரகாந்தம்போல் புகழ் பெற்று விட்டார். அவருக்கு புனர்ஜென்மமான மறுவாழ்வைக் கொடுத்த படத்தின் பெயரும் சந்திரமுகி.

இதே ரஜினிகாந்த் கர்நாடகாவிலோ, மகராஷ்டிராவிலோ இருந்து, அங்குள்ள படங்களில் நடித்திருந்தால், நிச்சயம் புகழ் பெற்றிருக்கமாட்டார். 'குரு சந்திர யோகம்' இருப்பதால்தான் குளிர்ச்சி, மலர்ச்சி, காமெடி, அடிதடி என்று இவரது படங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஓடிக்கொண்டிருக்கின்றன .

ரஜினிகாந்த்

குருவை எப்போதும் தேடிக்கொண்டே இருப்பார். ஆனால், சந்திரன் அவரை முழுமையான ஆன்மிகப் பாதைக்குப் போக விட மாட்டார். அரசியலை எடுத்துக்கொள்ளுங்கள். இவர் மற்றவர்களுக்காக எந்தவித பிரதிபலனும் நிர்ப்பந்தமும் இல்லாமல் சுயமாக 'வாய்ஸ்' கொடுத்தபோது இவரது வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தது. பலனும் பன்மடங்காக இருந்தது. 1996 ஆம் ஆண்டில் முதல்முறையாக தி.மு.க + த.மா.கா. கூட்டணிக்கு 'வாய்ஸ்' கொடுக்கின்றார். இவர் ஆதரித்த கூட்டணி அமோகமாக வெற்றி பெறுகிறது.

அதே கூட்டணிக்கு வெளிநாட்டிலிருந்து வந்து, விமானத்திலிருந்து இறங்கியும், இறங்காத நிலையில் நிர்ப்பந்தத்தின் காரணமாக 'வாய்ஸ்' கொடுக்கின்றார். கோவை குண்டு வெடிப்பு நடந்த நிலையில், வாய்ஸ் கொடுக்கின்றார். அப்போது அது பலனற்றுப் போய் விடுகின்றது. அதே ரஜினிகாந்த் 2001ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எந்த அணிக்கும் வாய்ஸ் கொடுக்கவில்லை. 'No Voice உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்' என்று கூறி ஒதுங்கிவிட்டார்.

ரஜினிகாந்த்

அதன்பிறகு கால சூழல்களின் மாற்றம், பாபாவின் தோல்வி என்று பல விஷயங்கள் சினிமாவிலும் அரசியலிலும் அரங்கேறி விடுகின்றன. பா.ம.க.வுடன் மோதல் ஏற்பட்டு தனது சொந்த விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ஸ் கொடுக்கின்றார். பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கின்றார். அப்போது அவரது சொல்லுக்கு மதிப்பின்றி போய்விடுகின்றது. இதற்கெல்லாம் காரணம் குருவின் ஆதிக்கம் பெற்ற அவர், பிரதிபலன் பார்க்காமல், தனது குரலை ஒலிக்கின்றாரோ அப்போதெல்லாம் அவருக்கு வெற்றி கிடைக்கும் என்பது தான். 

ரஜினியைப் பொறுத்தவரை வழக்கம்போல் சினிமா, லௌகீகம், ஆன்மிகம் என்ற மூன்று முகங்களுடன் இருப்பார். அரசியலில் வழக்கம் போல் பின்னணிக்குரல் கொடுக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். நேரடி அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. லௌகீக சுகங்களைத் துறந்து முழுமையான ஆன்மிகத்துக்கும் அவரால் போக முடியாது. குருசந்திர ஆதிக்கத்தில் அவரது மனம் இருப்பதால், பகல், இரவு போல் இந்த இரண்டும் அவருக்கு மாறி, மாறி வந்துகொண்டுதானிருக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்