வெளியிடப்பட்ட நேரம்: 07:23 (29/05/2017)

கடைசி தொடர்பு:07:23 (29/05/2017)

இந்த வார ராசி பலன் மே 29 முதல் ஜூன் 4 வரை

ராசி

'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி

மேஷம்: மேஷராசிக்காரகளுக்கு பணவரவுக்குக் குறைவே இல்லை. குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். ஒரு சிலருக்கு மட்டும் சிறுசிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்பட்டு, உடனுக்குடன் சரியாகிவிடும் என்பதால் கவலைப்படத் தேவையில்லை.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டாகும்.

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சிலருக்கு இடமாற்றம் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அதனால் நன்மையே உண்டாகும்.

வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்திருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். சாதகமாக முடியும். கொடுக்கல் வாங்கல் நல்லபடி நடக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். வருமானமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைக்கும்.

மாணவ மாணவியருக்கு மேற்படிப்புக்கான உதவிகள் தடையின்றி கிடைப்பதால் உற்சாகம் ஏற்படும். விருப்பப்பட்ட பாடப் பிரிவிலேயே சேருவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தரும். வேறு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மே 29, ஜூன் 4

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,7,9

முக்கியக் குறிப்பு: மே 30,31 தேதிகளில் கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். ஜூன் 1,2,3 ஆகிய தேதிகளில் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

வழிபடவேண்டிய தெய்வம்:   முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!கிருஷ்ண துளசி

 

ரிஷபம்: ரிஷபராசிக்காரகளுக்கு பணவரவு நல்லபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த நண்பர்கள், உங்களைப் புரிந்துகொண்டு மறுபடியும் நட்பு பாராட்டுவார்கள். சகோதர வகையில் மனக் கசப்பு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். சக பணியாளர்களின் உதவி மனதுக்கு ஆறுதல் தரும்.

வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சக வியாபாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

கலைத்துறையினருக்கு சற்று சுமாரான வாரம்தான். வாய்ப்புகள் கிடைப்பதில் சிறு தடைகள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் அறிவுரைகள் நன்மை தரும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். படித்து முடித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை நிம்மதி தருவதாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மே 31, ஜூன் 1,2,3

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,7

முக்கியக் குறிப்பு: மே 29,30 மற்றும் ஜூன் 4 ஆகிய நாள்களில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகள் எதையும் தொடங்கவேண்டாம்.

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

தோடுடையசெவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்

காடுடைய சுடலைப்பொடிபூசியென் உள்ளங்கவர்கள்வன்

ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்த அருள்செய்த

பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே.

 

மிதுனம்: மிதுனராசிக்காரகளுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். செலவுகளும் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு கண்களில் பிரச்னை ஏற்படக்கூடும். உடனே சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. திருமண முயற்சிகள் அனுகூலமாக முடியும்.

அலுவலகத்தில் அனுகூலமான சூழ்நிலையே காணப்படுகிறது. ஒரு சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதுடன், புதிய பொறுப்புகளும் கிடைக்கும். மகிழ்ச்சி தரும் வாரம்.

வியாபாரத்தில் மந்தமான நிலையே காணப்படும். அதன் காரணமாக மனதில் நிம்மதிக்குறைவு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடைபெறும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ மாணவியர்க்கு வெளிநாடு சென்று படிக்க நினைத்த விருப்பம் நிறைவேறும். படிப்புக்குத் தேவையான கடனுதவி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சலுகைகளும் பதவி உயர்வும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மே 31, ஜூன் 1,2

அதிர்ஷ்ட எண்கள்: 4,5,6

முக்கியக் குறிப்பு: மே 29,30, ஜூன் 3 ஆகிய நாள்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை.

வழிபடவேண்டிய தெய்வம்: மகா விஷ்ணு

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து,

கூடினேன் கூடியிளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி

ஓடினேன் ஓடி உய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து

நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.

 

கடகம்: கடகராசிக்காரகளுக்கு பணவரவு எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. தேவைகளுக்காக கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். பொருள்களும், பணமும் களவு போகக்கூடும் என்பதால், வீட்டிலும் வெளியிலும் கவனமாக இருக்கவும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டிவிடவேண்டாம்.

அலுவலகத்தில் அடிக்கடி கோபம் கொள்ளும்படியான சூழ்நிலை ஏற்படும். எனவே மிகவும் பொறுமையாக இருப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது. சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். சக வியாபாரிகளால் சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், சில வாய்ப்புகளை சரியானமுறையில் பயன்படுத்திக்கொள்ள முடியாது.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். குறிப்பாக டெக்னிக்கல் தொடர்பான படிப்பு படிப்பவர்களுக்கு பாடங்களைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களுடன் பேசும்போது நிதானம் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மே 31, ஜூன் 3,4

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5,7

முக்கியக் குறிப்பு: மே 29,30, ஜூன் 1,2 ஆகிய நாள்களில் பயணங்களைத் தவிர்க்கவும். அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்

புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்

அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்

செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

 

சிம்மம்: சிம்மராசிக்காரகளுக்கு பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் உடல் நலன் பாதிக்கப்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கக்கூடும். பிரச்னைகள் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை. 

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப புதிய பொருள்களை அறிமுகப்படுத்துவீர்கள்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். கிடைத்த வாய்ப்புகளையும்  பயன்படுத்தமுடியாத சூழ்நிலை ஏற்படும்.

மாணவ மாணவியர்க்கு படித்து முடித்திருப்பவர்களுக்கு நல்லநிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவையான உதவி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம் என்றுதான் சொல்லவேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் நிம்மதியற்ற போக்கு நிலவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மே 30, ஜூன் 2,3,4

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,7

முக்கியக் குறிப்பு: மே 29, 31, ஜூன் 1 ஆகிய நாள்களில் தேவையற்ற பிரச்னைகளால் மனநிம்மதி பாதிக்கப்படக்கூடும். பொறுமை அவசியம்.

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான் -விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்

கண்ணிற் பணிமின் கனிந்து

 

கன்னி: கன்னிராசிக்காரகளுக்கு பணவரவு ஓரளவுக்கே இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தில் ஓரளவு நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அனுகூலம் உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால், மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது சற்று தள்ளிப்போகும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் ஓரளவுக்கே கிடைத்தாலும் வாய்ப்புகளைத் தவறவிடவேண்டாம்.

மாணவ மாணவியர் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டியது அவசியம். விரும்பிய மேற்படிப்பில் சேருவதற்கு சிலரின் சிபாரிசு தேவைப்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வழக்கமான நிலையே நீடிக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மே31, ஜூன் 1,2,

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,5,9

முக்கியக் குறிப்பு: மே 29,30, ஜூன் 3,4 ஆகிய நாள்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்தவதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

 

துலாம்: துலாம்ராசிக்காரகளுக்கு வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். அதேநேரம் செலவுகளும் சற்று அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையில் சிறு அளவில் கருத்துவேறுபாடுகள் தோன்றக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவி மாற்றமோ, இடமாற்றமோ ஏற்பட்டாலும் நன்மையாகவே முடியும்.

வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுக்க சாதகமான வாரம். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவ மாணவியர்க்கு வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். படிப்புக்கான வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு போதிய பணம் கிடைக்காததால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு இட மாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நாள்கள்: மே 29, ஜூன் 1,2,3

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6,9

முக்கியக்  குறிப்பு: மே 30,31 ஆகிய நாள்களில் அலுவலகப் பணிகளிலும், வியாபார இடத்திலும் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி

வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி

கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு

உடலெனக் குருகு மாலோ எஞ்செய்கே னுலகத் தீரே.

 

விருச்சிகம்: விருச்சகராசிக்காரகளுக்கு பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் இருக்காது. கணவன் - மனைவி இடையில் சிறு அளவில் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். வாங்கிய கடனைத் திருப்பித் தருவீர்கள். மற்றவர்களுக்குக் கொடுத்த கடனும் திரும்ப வரும். திருமண முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் அசதி உண்டாகும். சக பணியாளர்களாலும் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய முதலீடு செய்து கடையை விரிவு படுத்துவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. ஆனால், சக கலைஞர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமை அவசியம்.

மாணவ மாணவியர்க்கு மேல் படிப்புக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெற்றிகரமாக முடியும். தேவையான உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வழக்கமான நிலையே காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நாள்கள் மே 30,31, ஜூன் 1,2

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,7

முக்கியக் குறிப்பு: மே 29, ஜூன் 3 ஆகிய நாள்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களிடம் பேசும்போது உணர்ச்சிவசப்படவேண்டாம்.

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாளென் செயும் வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங் கொடுங் கூற்றென் செயுங் குமரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

 

தனுசு: தனுசுராசிக்காரகளுக்கு பணவரவு திருப்தியாக இருக்கும். பணம் மற்றும் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். புதிய முயற்சிகள் எதையும் இந்த வாரம் தொடங்கவேண்டாம். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். 

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். உங்கள் வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும்.

வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்பட்டு நீங்கும். மூத்த கலைஞர்களின் அறிவுரையைக் கேட்டு நடக்கவும்.

மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். அதன் காரணமாக பெற்றோரின் மனவருத்தத்துக்கு ஆளாக நேரிடும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம்தான். உறவினர்கள் வருகையால் உற்சாகம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஜூன் 3,4

சந்திராஷ்டம நாள்கள்: 29,30,31

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,3,4

முக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் புதிய முயற்சிகள் எதையும் தொடங்கவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்

பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

 

மகரம்: மகரராசிக்காரகளுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். வீட்டில் தேவையற்ற பிரச்னைகளால் மன அமைதி குறையக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீராகும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வேலைகளில் தவறு நேரிடக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். மற்றவர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்கவேண்டாம்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. சக கலைஞர்களுடன் அனுசரித்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது.

மாணவ மாணவியர்க்கு விரும்பிய பாடப்பிரிவில் விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். படிப்பதற்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சியான வாரம் என்றே சொல்லலாம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட நாள்கள்: ஜூன் 3,4

சந்திராஷ்டம நாள்கள்: ஜூன் 1,2

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,5,7

முக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் வழக்கமான பணிகளையே கவனிக்கவும். பயணங்களைத் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச

சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு

வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

 

கும்பம்: கும்பராசிக்காரகளுக்கு பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படாது. தாயாரின் உடல்நலனில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சகோதர வகையில் அன்பும் ஆதரவும் உண்டாகும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படுகிறது. எதிர்பார்க்கும் சலுகைகள் எதுவும் இந்த வாரம் கிடைப்பதற்கில்லை. ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகம் ஆவார்கள்.

கலைத்துறையினருக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் சில தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மாணவ மாணவியர்க்கு மேற்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் கூடிவரும். தேவையான வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்ட நாள்கள்: மே 31, ஜூன் 1

சந்திராஷ்டம நாள்கள்: ஜூன் 3,4

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:1,2,4

முக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் வழக்கமான பணிகளையே கவனிக்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 

ஈசன் எந்தை இணையடி நீழலே

 

மீனம்: மீனராசிக்காரகளுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிட முடியும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். திருமண முயற்சிகள் நல்லபடி முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கணவன் - மனைவி இடையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது எதிர்காலத்துக்கு நல்லது.

அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது அவசியம்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். 

மாணவ மாணவியர்க்கு படிப்பை முடித்துவிட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேற்படிப்புக்கு செய்யும் முயற்சிகள் சாதகமாக முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரம். பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிகவும் அவசியம்.

வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் எதுவும் கிடைப்பதற்கில்லை.

அதிர்ஷ்ட நாள்கள்: மே 30, 31, ஜூன் 1,2,3

சந்திராஷ்டம நாள்: ஜூன் 4 இரவு முதல்

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,4,6

முக்கியக் குறிப்பு: ஜூன் 4-ம் தேதி புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பயணங்களையும் தவிர்க்கவும்.

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்