வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (13/06/2017)

கடைசி தொடர்பு:11:11 (13/06/2017)

‘கருணைக்கு நற்கூலி உண்டு!’ - கடைப்பிடிக்கவேண்டிய நபிகள் வாக்கு!

பாலைவனமாக இருந்த உலகத்தை, சோலைவனமாக மாற்றுவதற்கு இறைவன் கொடுத்த பூச்செண்டுதான் 'இஸ்லாம்' என்னும் இனிய மார்க்கம். நபி அவர்கள் பிறக்கவும், அல்லாஹ் குர்ஆனை இறக்கி வைக்கவும் இஸ்லாம் உண்டானது. நபிகள் பெருமகனார் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்வையும், நபிகள் தன் தோழர்களுக்குக் கூறிய ஒரு நன்னெறிக் கதையையும் இங்கு காண்போம்.

நபிகள் போதித்த சகோதரத்துவம்

அண்ணலின் அருங்குணம்:

மெக்காவின் கடைக்கோடியில் மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார். அவருக்கு, முஹம்மது நபிகளின் மீது துளிகூட நம்பிக்கை பேராசிரியர் அபூதாஹிர்இல்லை. மேலும், நபிகளின் போதனைகளையும் வெறுத்துவந்தார். நபிகளின் மீதும் மிகுந்த வெறுப்போடு வாழ்ந்துவந்தார்.

ஒருநாள் மெக்காவுக்கு பொருள்கள் வாங்குவதற்காகச் சென்றார். பொருள்கள் அதிகமாக இருந்ததால், தூக்க முடியாமல் சிரமப்பட்டார். அருகில் கூலிக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடிப் பார்த்தார். கூலிக்காரர்கள் யாருமே கிடைக்காததால் மிகவும் கஷ்டப்பட்டுத் தூக்கி வந்தார்.

அந்த நேரத்தில் முஹம்மது நபிகள் அவ்வழியாக வந்தார். பாட்டி ஒருவர் சிரமத்துடன் பொருள்களைத் தூக்கி வருவதைக் கண்டார். அந்தப் பாட்டியிடம் சென்று, ''நான் வேண்டுமானால் தூக்கி வரட்டுமா பாட்டி?" என்று கேட்டார்.

தொழுகை

பாட்டியும், "ஆமாப்பா, வயதானதால் தூக்குவதற்குச் சிரமமாக உள்ளது. என் வீடும் இங்கிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. தூக்கி வந்தால் மிகுந்த உதவியாக இருக்கும்" என்று கேட்டுக்கொண்டார்.

நபிகளும் சுமையான அந்த மூட்டையைத் எவ்வித களைப்பையும் வெளிப்படுத்தாமல் தூக்கி வந்தார். சரியாக, பாட்டியின் வீட்டை வந்தடைந்தனர். மூட்டையின் பாரத்தைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக சுமந்துவந்த நபிகளைக் கண்டு, பாட்டிக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி.

பாட்டி நபிகளைப் பார்த்து "மகனே, மிகப்பெரிய உதவியை நீ எனக்காகச் செய்திருக்கிறாய். ஆனால், இதற்கு கூலியாகக் கொடுக்க என்னிடம் எந்த பெரிய சன்மானமும் இல்லை. ஆனால், உன் வாழ்வுக்கு பலன் தரும் அறிவுரை ஒன்றை உனக்குத் தருகிறேன், என் அருகில் வா மகனே "என்று அழைக்கிறார்.

இஸ்லாம்நபிகளும் அந்தப் பாட்டியின் அருகில் சென்றார்.

அவரிடம் அந்தப் பாட்டி "மெக்காவில் ஒரு மனிதர் இருக்கிறார். அவர் பெயர் முஹம்மது. அவர் ஒரு பொய்யாளர். சூனியக்காரர். அவரை ஒரு போதும் நம்பிவிடாதே" என்று நபிகளைப் பற்றி நபிகளிடமே கூறுகிறார்.

பாட்டியின் பேச்சைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த முஹம்மது நபி அவர்கள், "நீங்கள் ஒருவரைப் பற்றி இவ்வளவு நேரம் சொன்னீர்களே, அவர் நானாக இருந்தால், இதே போன்று ஏசுவீர்களா " என்று கேட்டார்.

மூதாட்டி அதிர்ச்சியுற்றார். "நற்குணமும், தாராள மனமும், பிறருக்கு உதவி செய்யும் பண்பும் உடைய நீங்கள் செய்யும் போதனைகள் நிச்சயமாக உணமையாகத்தான் இருக்கும், கண்டிப்பாக பொய்யாகவோ, சூனியமாகவோ இருக்காது" என்று சொல்லி முஹம்மது நபிகளின் இருகரத்தையும் பற்றிக்கொண்டார். அந்த நிமிடமே இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்டார்.

***

கருணைக்கு நற்கூலி உண்டு:

முஹம்மது நபிகள் ஒருமுறை தன் தோழர்களுடன் அம்ர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கதை ஒன்று கூறினார்.

மனிதன் ஒருவன் ஒரு சாலை வழியாகப் போய்க்கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று சுற்றும்முற்றும் பார்த்தான். தூரத்தில் ஒரு கிணறு தென்பட்டது. நீர் இரைப்பதற்கு கயிறுடன் கூடிய வாளி இல்லாததால் கிணற்றுக்குள் இறங்கி நீர் அருந்தினான். பின்பு ஏறி மேலே வந்துவிட்டான்.

அப்போது, அவன் கண்ட காட்சி அவனுக்கு கவலையைத் தந்தது. நாய் ஒன்று தண்ணீர் தாகத்தால் ஈர மண்ணை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. உடனே மீண்டும் கிணற்றுக்குள் இறங்கி தன் தோல்ப்பையில் நீர் நிரப்பி, அதனத் தன் வாயால் கவ்விக் கொண்டே மேலேறி வந்து நாய்க்கு தண்ணீர் புகட்டினான். அல்லாஹ் அவனுடைய இந்த நற்செயலைக் கண்டு அவனது பாவங்களை மன்னித்தார் என்றார் நபிகளார்.

பேரன்பு

உடனே கூட்டத்தில் இருந்த ஒருவர் கால்நடைகளின் மீது கருணை காட்டுவதாலுமா நற்கூலி கிடைக்கின்றது? என்றார். அதற்கு அண்ணலோ, ஆம். ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் கருணை காட்டுவதாலும், நற்கூலி கிடைக்கிறது என்று கூறினார். (புகாரி)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்