Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`ஏழைக்கு இரங்கு!’ இஸ்லாமின் மாண்பு - ரம்ஜான் சிறப்பு கட்டுரை-5

‘வேத வரிகளும் தூதர் மொழிகளும்' நூலின் ஆசிரியரும் பேராசிரியருமான டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத் தனது அடுத்த நூலுக்காக தொகுத்துள்ள கட்டுரையை, ரம்ஜான் நோன்பை முன்னிட்டு நம் விகடன் வாசகர்களுக்கு வழங்குகிறார். இதில் ஆதரவற்றவர்கள், ஏழைகள், விதவைகள் இவர்களை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும். இவர்கள் குறித்து நமது கடமைகள் என்னென்ன என்பது பற்றி அழகாகத் தொகுத்து வழங்கியுள்ளார்.

ரம்ஜான்

அனாதைகளை அன்புடன் நடத்துக!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
* அனாதைகளை நல்ல முறையில் நடத்தும் வீடே, உலகில் உள்ள வீடுகளில் சிறந்தது. அனாதைகளை மோசமாக நடத்தும் வீடே, வீடுகளில் மோசமானது.  ஹபீப் முகம்ம்மது- (நூல்: இப்னு மாஜா)

* இறைவனுக்காக எவர் அனாதைகளின் தலையைத் தடவிக்கொடுக்கிறாரோ அவர் கரம் தொடும் ஒவ்வொரு முடிக்கும் நற்கூலி உண்டு. எவர் அனாதையான ஆண் அல்லது பெண்ணை அன்புடன் நடத்துகின்றாரோ அவரும் நானும் மறுமையில் இவ்வாறு இணைந்திருப்போமென தனது இரு விரல்களைச் சேர்த்துக் காட்டினார்கள். - (நூல்:அபூதாவூத்)

* எவர் அனாதைகளுக்கு உறைவிடம் அளித்து, உண்ணவும் குடிக்கவும், ஏற்பாடு செய்கின்றாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தை (சொர்க்கம்) உறுதிசெய்கின்றான்... ஆனால், அவர் மன்னிக்கப்படாத குற்றங்கள் எதையும் செய்யாதவரை.  - (நூல்: அபூதாவூத்)

ஏழைக்கு இரங்கு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
* விதவைகளுக்கும் வறியவர்களுக்கும் உழைப்பவர், இறை பாதையில் போராடியவர்போலாவார். ஓய்வின்றித் தொழுதவர்போலாவார். விடாது நோன்பு நோற்றவர்போலாவார்.  - (நூல்:புகாரி,முஸ்லிம்)

* ஏழைகள் உங்களிடம் தானம் கேட்டு வந்தால், பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டையாவது கொடுக்காமல் அனுப்பாதீர்கள். ஏழைகளை நேசியுங்கள், அவர்களை  உங்களருகில் வர அனுமதியுங்கள். ஏனெனில், மறுமை நாளில் உங்களை இறைவன் அவனருகில் அழைத்துக் கொள்வான். - (நூல்: திர்மிதி)

* பசித்தவருக்கு உணவளிப்பதே தர்மங்களிலே சிறந்தது ஆகும். - (நூல்: பைஹகீ)

* மக்களிடம் வந்து ஒன்று அல்லது இரண்டு உணவுக் கவளங்கள் அல்லது பேரீச்சம்பழங்களை வாங்கிக்கொண்டு திரும்பிவிடுபவர் ஏழையல்ல. ஏழை என்பவர், தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அளவுக்கு செல்வத்தைப் பெறாதிருப்பவர். ஆனால், அவர் வறியவர் என மக்களால் அறியப்படாதவராக இருப்பார். மக்களிடம் யாசகம் கேட்க மாட்டார்.  - (நூல்:பைஹகீ)
(பிச்சை எடுப்பவன் மட்டுமல்ல ஏழை. ஏழ்மையில் வாழ்ந்தாலும், சுயமரியாதையுடன் பிறரிடம் கையேந்தாமல் இருக்கும் ஏழைகளுக்கே நாம் முன்வந்து உதவி செய்ய வேண்டும்).

* பணக்காரர் மட்டும் அழைக்கப்பட்டு, ஏழைகள் விரட்டப்படும் திருமண விருந்து, விருந்துகளில் மிகவும் கெட்டதாகும். - (நூல்:முஸ்லிம்)

* ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், இஸ்லாமியப் பண்புகளில்  சிறந்தது எது எனக் கேட்டார். 
நபி(ஸல்) அவர்கள் பசித்தவருக்கு உணவளிப்பது, அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் (சலாம்) முகமன் கூறுவது ஆகும் எனப் பதிலளித்தார்கள். (நூல்;புகாரி:12)

பரஸ்பர அன்பு

உழைப்பவர் உரிமைகள் 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
* தமது பணியாளர்களிடம் மோசமான முறையில் நடப்பவன் சுவனம் புக மாட்டான் . - (நூல்:திர்மிதி)

* உங்களிடம் பணியால் வெப்பம், புகை ஆகிய சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு உணவைச் சமைத்து, உங்களிடம் கொண்டு வருகிறார். எனவே, அவரை  அருகில் உட்கார வைத்து உணவு உண்ணுங்கள். உணவு குறைவாக இருந்தால், ஒரு கவளம் அல்லது இரண்டு கவளம் அவனுடைய கையில் கொடுங்கள். - (நூல்: முஸ்லிம்)

* ஒருவர் தமது பணியாளரை எத்தனை முறை மன்னிப்பது என ஒருவர்  நபியவர்களிடம் கேட்டார். இரண்டு முறை கேட்டபோதும், அமைதியாக இருந்த நபியவர்கள் மூன்றாவது முறை கேட்டதும், ``'ஒரு நாளைக்கு எழுபது முறை (அதாவது பலமுறை) மன்னியுங்கள்’’' என்றார்கள். (நூல்: அபூதாவூத்)

* நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்:
''நான் நபிகளிடத்தில் பத்து ஆண்டுகளாகப் பணிபுரிந்தேன். என்னை ஒருபோதும் நபியவர்கள் `ச்சீ’ என்று கூறியதில்லை. 'இதனை ஏன் இவ்வாறு செய்தாய்? ஏன் செய்யவில்லை’ எனக் கேட்டதில்லை. - (நூல்: புகாரி,முஸ்லிம்) 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

* மூன்று பேர் விஷயத்தில் நானே மறுமையில் வழக்காடுவேன். 
1). என் பெயரால் ஒன்றைத் தந்துவிட்டு, அதில் மோசடி செய்தவன் .
2). சுதந்திரமான மனிதரை அடிமை எனக் கூறி விற்றுவிட்டு, அந்த பணத்தைச் சாப்பிட்டவன். 
3). ஒருவரிடம் கூலி பேசி வேலை வாங்கிவிட்டு, கூலியை அவருக்குத் தராதவன் என நபியவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி) 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement