சபரிமலை கோயிலில் நாளை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது

sabarimala

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் புதிய கொடிமரம் நாளை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புதிய கொடிமர வடிவமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. புதிய கொடிமரத்திற்கான தேக்கு மரம், கோணி காட்டுப்பகுதியில் இருந்து வெட்டி எடுத்துவரப்பட்டது. நன்கு காயவைக்கப்பட்ட கொடிமரம், பம்பை கணபதி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 40 அடி நீள தொட்டியில் மூலிகைகள் சேர்ந்த தைலத்தில் கடந்த ஆறு மாத காலம் ஊற வைக்கப்பட்டது.

கொடிமரம் சுற்றிலும் தங்கத்தகடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், நாளை மதியம் 11.50 மணி முதல் 1.40 மணிக்குள் தந்திரி கண்டரரு ராஜீவரு இந்தப் புதிய கொடி மரத்தை பிரதிஷ்டை செய்து வைக்கிறார். கொடிமரத் தங்கத்தகடுகளில், பல்வேறு கலை நயங்கள், சிற்பங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!