வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (29/06/2017)

கடைசி தொடர்பு:11:48 (03/07/2017)

திருமணத் தடை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம்... பரிகாரங்கள்! #Astrology

திருமணம் என்பது எல்லோருக்கும் உரிய காலத்தில் நடைபெற்று விடுவதில்லை. சில காரணங்களால் தள்ளிப் போவதும் உண்டு. அதில் செவ்வாய் தோஷம் காரணமாகவும் தள்ளிப்போவதுண்டு. அங்காரக தோஷமென்றால் என்ன? அதற்குரிய பரிகாரங்கள் யாவை? திருமணத் தடை ஏற்படுத்தும் செவ்வாய் தோஷம்... பரிகாரங்கள் என்பது பற்றி ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் விளக்குகிறார். நவகிரகங்களில் மூன்றாவதாக இருப்பவர்  'செவ்வாய்'.  இவரை அங்காரகன் என்றும் அழைப்பார்கள். 'செவ்வானம், செம்பவளம் போன்ற சிவந்த மேனியை உடையவர் என்பதால், செவ்வாய் என்று அழைக்கப்படுகிறார். பூமியில் இருந்து தோன்றியவர் என்பதால், அங்காரகனை 'நிலமகளின் சேய்' என்றும் கூறுவார்கள்.

செவ்வாய்

உமாதேவி இறைவனை விட்டு நீங்கிய காலத்தில் சிவபெருமான் யோகத்தில் இருந்தார். அப்போது அவருடைய நெற்றி வியர்வைத் துளியில் உண்டாகி, பூமியில் விழுந்தது. அது 'மங்களகன்' என்னும் குழந்தையாக உருவெடுத்தது. குழந்தை பெரியவனாக வளர்ந்து தவத்தில் ஈடுபட்டான். அது சமயம், அவனது உடம்பில், 'யோக  அக்னி' கொழுந்துவிட்டு எரிந்தது. அந்தத் தவத்தின் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக பதவி  வகிக்கும் பொறுப்பை அங்காரகன் பெற்றார்.

சிவன்

செவ்வாயும் முருகனும்

சிவபெருமானது நெற்றிக்கண்ணில் தெறித்த தீப்பொறியில் பிறந்தவர் முருகன். நெற்றி வியர்வைத் துளியில் உதிர்த்த அங்காரகனை 'முருகனின் அம்சம்' என வழிபட்டு வருகின்றனர். இருவரது பிறப்புக்கும் ஆதாரம் ஈசனின் நெற்றிதானே!

இவர், திருமண விஷயத்தில் அதிகமான பாதிப்புகளைத் தருகிறார். இதனால் ஏற்படும் தோஷத்தை 'செவ்வாய் தோஷம்' என்பர். செவ்வாய்க்கு ‘குஜன்’ என்ற பெயரும் உண்டு. குஜன் என்றால் ஜனித்தல் என்றும் பொருள்படும். 

ஒருவரது ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8, 12 - ம் இடங்களில்  செவ்வாய் இருந்தால் தோஷம் ஆகும். பெண்கள் ஜாதகத்தில் 7, 8--ம் இடங்களில் அங்காரகன்  இருந்தால் தோஷம் ஆகும்.

செவ்வாய் தோஷ விதி விலக்குகள்:

மேஷம், விருச்சிகம், மகரம் ஆகிய இடங்களில் இருந்தால், ஆட்சி வீடு, உச்ச வீடு என்பதால் தோஷம் இல்லை. கடகம் நீச வீடு என்பதால் அங்கிருந்தாலும் தோஷம் இல்லை.

செவ்வாய்

குரு, சூரியன், சந்திரன், சனி ஆகிய கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும், பார்வை பெற்றிருந்தாலும் தோஷமில்லை.
சிம்மம், கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தாலும் தோஷமில்லை.

ஜாதகரின் 2 - ம் இடம் மிதுனம், கன்னியாக இருந்தால் தோஷமில்லை.

மேலும், 1, 2, 4, 8, 12 ஆகிய இடங்கள் சர ராசிகளாக மேஷம், கடகம், துலாம், மகரம் இருந்து அந்த இடங்களில் செவ்வாய் இருந்தாலும்  தோஷம் இல்லை. ஆனாலும், இவர்கள் தோஷப் பரிகாரம் செய்தால் நிச்சயம் நல்ல பலனிருக்கும். 

திருத்தணிகை முருகன்

தோஷப் பரிகாரமும் மந்திரங்களும்

அங்காரகன், தமிழ்க் கடவுள் எனப் போற்றப்படும் முருகனின் அம்சம் கொண்டவர். அதனால் பழநி, வைத்தீஸ்வரன் கோயில், ஆகிய புண்ணியத்தலங்கள் அங்காரகனுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. செவ்வாய்க்கிழமையில் முருகனையும் அங்காரகனையும் வணங்கினால், எண்ணியது எண்ணியபடி நடக்கும்.

இந்த தோஷத்தினால் பாதிக்கப்படுவோர் செவ்வாய் காயத்ரீ மந்திரம், தியான மந்திரம், சூரிய கவசம், அஷ்டோத்திரம் போன்றவைகளை பக்தி சிரத்தையோடு சொல்லி வந்தால், தோஷம் விலகி நன்மைகள் நடைபெறும்.

செவ்வாய் காயத்ரி மந்திரம்

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌமஹ் ப்ரசோதயாத்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்