வெளியிடப்பட்ட நேரம்: 06:29 (19/07/2017)

கடைசி தொடர்பு:06:29 (19/07/2017)

'மகாகவி பாரதி கசிந்துருகிப் பாடி வழிபட்ட சென்னை காளிகாம்பாள்!

 

ஆடிக்கிருத்திகை

ஆடி மாதம் பிறந்து விட்டாலே, அம்மனுக்கு கோலாகலம்தான். தமிழகம் முழுவதுமுள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் பெரும் திரளாகச் சென்று வழிபாடு செய்வது வழக்கம். கிராமப்புறத்திலும் கூட, 'ஆடிப்பட்டம் தேடி விதை' என் அம்மனை வழிபட்டே தங்களின் வேளாண்மைக்கு பிள்ளையார் சூழி போடுவார்கள். இத்தனைச் சிறப்பு வாய்ந்த அம்மன் திருத்தலங்களின் பக்திப்பூர்வமான தகவல் தொகுப்புகள் இங்கே இடம்பெறுகின்றன. 'மகாகவி பாரதி கசிந்துருகிப் பாடி வழிபட்ட சென்னை காளிகாம்பாள் பற்றிய சிறப்புப் பகிர்வு இதோ...

காளிகாம்பாள்

* சென்னைக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்விதமாகத் திகழும் காளிகாம்பாள் கோயில் பாரிமுனை தம்புச்செட்டித்தெருவில் அமைந்திருக்கிறது. 

*காலை 5 மணி முதல்  பிற்பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், வந்து வழிபட்டுச்செல்லும் இடமாகத் திகழ்கின்றது.  

* ஆங்கிலேயர்களின் முக்கோணத் தலைமைச் செயலகங்களாகவும் கடற்கரைப் பட்டினங்களாகவும் திகழ்ந்தவை, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்கள். மும்பாதேவி மும்பைக்கும், காளிமாதா கல்கத்தாவுக்கும், சென்னம்மன் (காளிகாம்பாள்) சென்னைக்கும் காவல் தெய்வங்களாக ஆட்சி செய்கின்றனர்.

 

 

* அன்னை காளிகாம்பாள் முதலில் தோன்றி அருள் பாலித்துக் கொண்டிருந்த இடம், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகம்தான்.

* கி.பி 1639 ல் ஆங்கிலேயர்கள் விலைக்கு வாங்கிய சென்னக்குப்பம், வடவாறு குப்பம், மதராஸ் குப்பம் ஆகிய பகுதிகள், கடலும் காடுகளும் சார்ந்து புதர் மண்டிய பகுதிகளாகவே இருந்தன. செயின்ட் ஜார்ஜ் கோட்டை வெள்ளையர்களின் ஆட்சிக்குட்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக  மாறியது. இதனால், பக்தர்கள் வந்து வழிபாடுகள் செய்வதில், சிரமங்கள் ஏற்பட்டதால், தற்போதுள்ள தம்புச்செட்டித்தெருவில் கோயில் நிர்மாணிக்கப்பட்டது.

காளிகாம்பாள் பூஜை

* கோட்டைப் பகுதியில் அமைந்திருப்பதால், 'கோட்டையம்மன்' என்றும், கமடேஸ்வரி என்றும் சென்னம்மன் என்றும், நெய்தல் நில மக்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றி வைப்பதால், 'நெய்தல் நில காமாட்சி' என்றும் அழைக்கப்படுகிறார்.

* இக்காளியம்மனை மீனவர்களும் விஸ்வகர்மாக்களும் சிவப்புக் குங்குமம் பூசி வழிபடுவதால் 'சென்னம்மன்' என பெயர் பெற்றார். சென்னம்மன், சென்னியம்மன் என தெலுங்கர்களும், கன்னடர்களும் இப்போதும் அழைக்கின்றனர். 

* சென்னப்ப நாயக்கனுக்கும், அவரது தங்கை சென்னமாவுக்கும் அப்பெயர்கள் வைத்து அழைத்திட, காரணமானவர் அன்னை காளிகாம்பாள்.

பாரதியார்* எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவதில் காமாட்சியம்மனாகவும், தீயவர்களை அழிப்பதில் காளிகாம்பாளாகவும், உலகை ஆளும் அன்னையாகவும், தன்னை வணங்குபவர்களின் துயரம் தீர்க்கும் கமடேஸ்வரி அன்னையாகவும் திகழ்கிறாள். அன்னை காளிகாம்பாளின் குங்குமப் பிரசாதம் கிடைத்தாலே முக்திதான். (இந்த இதழ் சக்தி விகடனுடன் அருள்மிகு காளிகாம்பாள் கோயில் குங்குமப் பிரசாதம் வழங்கப்படுகிறது).சிவாஜி

* சத்ரபதி சிவாஜி தெற்கு ராஜ்ஜியங்களில் படையெடுத்து வந்தபோது அன்னை காளிகாம்பாள் ஆலயத்துக்கு வந்து, அன்னையைத் தரிசித்து ஆசி பெற்றுச் சென்றார்.

* மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் பணியாற்றிய போது காளிகாம்பாளை வந்து வழிபடுவது வழக்கம். அப்படி அவர்  வழிபட்டபோதுதான் , 'யாதுமாகி  நின்றாய் காளி, எங்கும் நீ நிறைந்தாய் காளி!' என்னும் புகழ்பெற்ற பாடலை அன்னையை நினைத்துத்தான் பாடினார்.  

* கோயிலின் தல விருட்சம் மாமரம். கோயிலின் தீர்த்தம் கடல் நீர். இதன் பரிவார தேவதை கடற்கன்னி.

 * ஆதி சங்கரரின் ஶ்ரீசக்கரம் இங்கு பதிக்கப்பட்டுள்ளதால்  ஶ்ரீசக்கர நாயகியாகவும் திகழ்கிறார் . இதற்காக வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாக ஸ்ரீசக்கர கிண்ணித்தேர் உள்ளது. வெண்கல கிண்ணங்களால்  அமைந்த இந்தத் தேரில் மின்னும்  விளக்கொளியில் அன்னை பவனி வரும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

* சிவசக்தி தலமாக இது விளங்குகிறது. இங்கு எம்பெருமான் கமடேஸ்வரராகவும் அருணாச்சலேஸ்வரராகவும் எழுந்தருளி, அருள் பாலிக்கிறார். இங்கு உண்ணாமலை அம்மனுக்கும் சந்நிதி இருக்கிறது. இதனால், இங்கு வந்து வழிபட்டால், காஞ்சியையும், திருவண்ணாமலையையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.

 

 

 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்