Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மனோபலம், மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி மீனாட்சி! #AadiSpecial

மீனாட்சியம்மன்

நான்மாடக்கூடல் நகரம் 'மதுரை' என்றாலே மனதுக்குள் மகிழ்ச்சி பிறப்பதைத் தடுக்கமுடியாது. நம்மையெல்லாம் ஆளும் லோக மாதா மீனாட்சி ஆட்சி செய்யும் இடமல்லவா? மூக்குத்திப் புன்னகையால் ஜகத்தை ஆளும் ஈசனையும் வென்று , ஜகத்தையும் வென்று ஆட்சி செய்கிறாள். அதனால்தான் இங்கே அம்பாள் சர்வ அதிகாரமும் படைத்தவளாக பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்குகிறாள்.

தல வரலாறு

கந்தர்வலோகத்தில் வாழ்ந்து வந்த விசுவாவஸு என்பவனுக்கு இறையருளால் வித்யாவதி என்ற பெண் பிறந்தால் அந்தப் பெண் பூலோகத்தில் இருக்கும் அம்பிகையை வழிபட ஆசைப்பட்டாள் மகளின் விருப்பத்தை அறிந்த தந்தை, மதுரையிலிருக்கும் அம்பிகை சியாமளியை வணங்கும்படி அறிவுறுத்தினார்.

மீனாட்சி அம்மன்


அம்பாளை தரிசித்த வித்யாவதியின் கண்களுக்கு 3 வயது சிறுமியாக அம்பிகைத் தோன்றினாள். வித்யாவதியிடம் அம்பிகை தோன்றி,'என்ன வரம் வேண்டுமென' கேட்க, 'நீயே எனக்கு மகளாக வர வேண்டும்' எனக் கூறினாள். 

‘உனது அடுத்தபிறவில் இது நடக்குமென கூறிச் சென்றாள் அம்பிகை. அதைப் போலவே  வித்யாவதி, சூரசேனனின் மகளாகப் பிறந்து காஞ்சனமாலையாக என்ற பெயரில் வளர்ந்தாள். அவளை மதுரையை ஆண்ட மலையத்துவஜன் என்னும் பாண்டிய மன்னன் மணந்தான். அவர்களுக்கு மகளாக அம்பிகை தோன்றி மீனாட்சி எனும் பெயரில் வளர்ந்தார். ஆண் வாரிசு இல்லாத மன்னன், தன் மகளை ஆயகலைகளும் அறிந்த பெண்ணாக வளர்த்தான். மதுரையை ஆளும் ஆட்சிப் பொறுப்பையும் அளித்தான். தன்னை வணங்கிய பக்தைக்கு மகளாகப் பிறந்ததால் பெண்கள் குலம் காக்கும் தெய்வமாக மீனாட்சி வணங்கப்படுகிறாள்.

தல விருட்சம்

இங்கே முதலில் மீனாட்சியை வணங்கிய பின்னரே சிவபெருமானை வணங்கும் மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. பாண்டிய மன்னன் சிவனருளால் இங்கிருந்த கடம்பவனத்தை அழித்து மதுரை மாநகரையும் கோயிலையும் உருவாக்கியதால், ஆலயத்தின் தல விருட்சமாக கடம்ப மரம் இருந்து வருகிறது.

பூஜைகளும் வழிபாடுகளும்...

மற்ற கோயில்களில் எல்லாம் ஆறு காலம் ஆறு பூஜைகள் என்றால் இங்கே எட்டு காலம், எட்டு கோலமென பூஜைகளும் வழிபாடுகளும் நடக்கின்றன. ஒவ்வொரு நாளும் இங்குள்ள மீனாட்சி அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருவனந்தல், விளாபூஜை, கால சந்தி, திரிகால சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம், பள்ளியறை பூஜை ஆகிய எட்டுக்கால பூஜைகளும் வழிபாடும் நடக்கின்றன. இவையாவும் திருமலை நாயக்கரின் ஆட்சிகாலத்தில் அமைச்சராகப் பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதரின் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

சிவபெருமானின் திருவிளையாடல்கள் யாவும் நடந்தேறிய திருத்தலம் மதுரைதான். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்துக்கு தேவர்களும் மகரிஷிகளும் வந்தனர் . இவர்களில் வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் சிவதாண்டவத்தைப் பார்த்த பின்னரே உணவருந்துவது வழக்கம். அவர்களுக்காக இங்கே தனது சிவதாண்டவத்தை ஈசன் நடத்திக்காட்டினார். சிவனின் இடப்பகுதி உமையவள் என்பதால் கால் மாற்றி ஆடியதும் இந்த மதுரையம்பதியில்தான். இடது காலை ஊன்றி ஆடியதால், இங்கு அம்மனுக்கே அதிக வலிமை என்பது ஐதீகம்.

குமரகுருபரர் அம்மனை சிறுகுழந்தையாகப் பாவித்து பிள்ளைத்தமிழ் பாடியதால், தனது முத்துமாலையை அவருக்கு அம்பிகை அணிவித்து அழகு பார்த்ததும் இந்தத் திருத்தலத்தில்தான்.

திருக்கல்யான கோலத்தில் மீனாட்சி

அம்பிகையின் தோளில் கிளி

'சொன்னதை சொல்லுமாம் பச்சைக் கிளி' அம்பிகையின் தோளில் இருக்கும் கிளியானது, பக்தர்களின் வேண்டுதல்களை  அம்பிகையிடம் சொல்வதாகவும் அம்பிகை அதை அப்படியே நிறைவேற்றுவதாகவும் ஓர் ஐதீகமும் நம்பிக்கையும் நிலவுகிறது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத்திருவிழாவில் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேர்த்திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

கிழக்கு கோபுர வாயிலின் வழியாக அம்மன் சந்நிதிக்குள் நுழைந்தால், முதலில் வரும் மண்டமே அஷ்டதிக்கு மண்டபம். இங்குள்ள எட்டுத்தூண்களில் கௌமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, எக்குரூபணி, சியாமளி, மகேஸ்வரி, மனோன்மணி என எட்டுசக்திகளாக காட்சி தருகிறாள். இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு அன்னை மீனாட்சி பக்தர்கள் வேண்டும் வரங்களுடன், அவர்களுக்கு மனோபலத்தையும் தந்து அருள்கிறாள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close