ஒரே நாளில் நவகிரக தலங்களை வழிபட, பலன் பெற வழிகாட்டி! #VikatanInteractive | Visit Navagraha Temples in One Day

வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (26/07/2017)

கடைசி தொடர்பு:10:31 (26/07/2017)

ஒரே நாளில் நவகிரக தலங்களை வழிபட, பலன் பெற வழிகாட்டி! #VikatanInteractive

இந்தியாவின்  பல்வேறு பகுதிகளில் இருந்தும் தோஷ நிவர்த்திப் பரிகாரங்களுக்காக தமிழகத்தில் உள்ள நவகிரக கோயில்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கான எளிய வழிகாட்டிதான் இது. ஒரே நாளில் நவகிரகத் தலங்கள் அனைத்தையும் தரிசித்துத் திரும்ப இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவும். 

நவகிரகங்கள்

நவகிரகத் தலங்களுக்கு மையமாக இருப்பது மயிலாடுதுறை. இங்கு தங்குவதற்கான வசதிகள் ஏராளம் உண்டு. தமிழகத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து வசதிகளும் உண்டு. நல்ல உணவகங்களும் இருக்கின்றன. முதல்நாள் இரவு இங்கு சென்று தங்கிவிடுவது நல்லது. மறுநாள், அதிகாலை 5.15 மணிக்கு காரில் கிளம்பினால், இரவு எட்டரை மணிக்குள் நவகிரகத் தலங்களையும் நன்கு தரிசித்து, வழிபட்டுத் திரும்பி விடலாம். நவகிரக தலங்களுக்கு அழைத்துச் செல்ல மொத்தக் கட்டணத்தில் மயிலாடுதுறையில் வாகனங்கள் கிடைக்கின்றன. அதிகப்பட்சம் 4000 ரூபாய் கேட்பார்கள்.

பயணத்தை எப்படித் திட்டமிடுவது? எந்த வழியாகச் செல்வது? ஒவ்வொரு கோயிலுக்கும் இடைப்பட்ட தூரம் எவ்வளவு? கோயில்களின் சிறப்புகள் என்னென்ன? எந்தெந்த  கிரகங்களுக்கு என்னென்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்? எப்படி வழிபட வேண்டும்? என எல்லாத் தகவல்களையும் இந்த வழிகாட்டி உங்களுக்கு வழங்கும். 

முதலில் START THE TRIP  என்ற பட்டனை அழுத்துங்கள். உங்கள் வாகனம் மயிலாடுதுறையில் இருந்து கிளம்பும். ஒவ்வொரு தலமாக உங்களை அழைத்துச் செல்லும். ஒவ்வொரு தலத்துக்கும் சென்றடைந்தவுடன், விரியும் pop-up window அந்தத் தலத்தைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்கும். அவற்றைப் படித்தபிறகு, next பட்டனை அழுத்தினால் அடுத்த தலத்துக்கு வாகனம் கிளம்பும்.  

நவகிரக தலத்தையும் வலம்வரும் இனிய அனுபவத்தைத் தரும்  இந்த விஷூவல் வழிகாட்டி எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்!

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்