தினம் தினம் திருநாளே! - தினப் பலன் | Daily horoscope for august 1

வெளியிடப்பட்ட நேரம்: 07:42 (01/08/2017)

கடைசி தொடர்பு:12:43 (01/09/2017)

தினம் தினம் திருநாளே! - தினப் பலன்

தினப்பலன்
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.
 
ரிஷபம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிதாக அறிமுகமான நபர்களால் ஆதாயம் உண்டாகும். 
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மிதுனம்:இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும்.   
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மை உண்டாகும்.

கடகம்:  வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு.  பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்: : எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும்.  தாய் வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். 
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கன்னி: எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். உறவினர்களின் வரவும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். கோயில் திருவிழாக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்: சகோதர வகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அரசு அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.

தனுசு:  முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேருவதால் மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

மகரம்: இன்று உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத நல்ல தகவல்கள் வரும். கணவன் மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துர்கை வழிபாட்டால் நன்மை பெறலாம்.

கும்பம்: உற்சாகமான நாள். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

மீனம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் செய்தி  மகிழ்ச்சி தரும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்