தினம் தினம் திருநாளே! - தினப் பலன் ஆகஸ்ட் - 2

தினப் பலன்
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்:  காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகள் வெற்றி அடையும். காணாமல் போன பொருள் திரும்பக் கிடைக்கும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும்.

ரிஷபம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை  ஆபரணங்கள் வாங்குவீர்கள். 

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை உண்டாகும்.

மிதுனம்: அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும்  ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும்  பண லாபமும் உண்டாகும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரைச் சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் மகிழ்ச்சி ஏற்படவும் கூடும். 

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும்.

கடகம்: புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு.கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். 
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

சிம்மம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து வரும்  செய்தி  உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பேச்சிலும் செயலிலும் பொறுமை அவசியம்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

கன்னி:   வெளியூர்களில் இருந்து  சுபச் செய்திகள் வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள்.  

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்: உற்சாகமான நாளாக இருக்கும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வரும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகக் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் சிலருக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். 

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச்  சாதகமாக முடியும். இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. 

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

மகரம்:  இன்று எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும், சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து  சுபச் செய்திகள் வரும்.  

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கையும் பணலாபமும் கிடைக்கும்.

கும்பம்: உற்சாகமான நாள். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள்  ஏற்படக்கூடும். 

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் சகோதாரர்களால் நன்மை ஏற்படும்.

மீனம்:  புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு பணப் பற்றாக்குறை ஏற்படவும் அதன் காரணமாக கடன் வாங்கவும் நேரிடும். 

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!