வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (04/08/2017)

கடைசி தொடர்பு:07:30 (04/08/2017)

தினம் தினம் திருநாளே! - தினப் பலன்- ஆகஸ்ட் - 4


தினம் தினம் திருநாளே!
தினப்பலன் - ஆகஸ்ட் - 4

'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்:    உற்சாகமான நாள். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உதவுவார்கள்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

ரிஷபம்:   இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. தாய்வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்:     இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். உங்களின் அறிவார்ந்த பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். 

கடகம்:   உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி  உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும்.

சிம்மம்:  காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.  பிற்பகலுக்குமேல் உற்சாகம் பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.  ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. 
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புது முயற்சிகள் வெற்றி அடையும். 

கன்னி:     காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் வைத்துக்கொள்ளவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தள்ளிப் போகும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.

துலாம்:      காலைப் பொழுது உற்சாகமாக விடியும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். 

விருச்சிகம்:  இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். உங்களுடைய அனுபவப்பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குருவின் அருளால் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.  

தனுசு:     இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள்  அனுகூலமாக முடியும்.  எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.  வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் பணவரவு உண்டாகும். 

மகரம்:  காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சிறிய அளவில் மன உளைச்சல் ஏற்படும்.  பிற்பகலுக்குமேல் உற்சாகமாக அமையும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். 
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கும்பம்:    இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். அலுவலகத்தில்  சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். 
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம்.

மீனம்:   உற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். மாலை நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையினால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்