Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தினம் தினம் திருநாளே! - தினப் பலன் ஆகஸ்ட் - 5

தினப் பலன் - ஆகஸ்ட் - 5
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்


மேஷம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் எதிர்காலத்தில் நன்மையும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

ரிஷபம்: அரசு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். பேச்சால் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. அலுவலகப் பணிகளில் கவனமாக இருக்கவும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு ஏற்படும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் கிடைக்கும்.

மிதுனம்: வெளியூர்களில் இருந்து  சுபச் செய்தி வரும்.  மனம் உற்சாகமாக இருக்கும்.  எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். 
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் நன்மை ஏற்படும்.

கடகம்: இன்றைய நாள்  உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். 
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்:  இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர்களில் இருந்து  சுபச் செய்திகள் வரும். 
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். 

கன்னி: இன்று  உற்சாகமான நாளாக அமையும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி   உண்டாகும். வராது என்று நினைத்திருந்த  கடன் தொகை திரும்பக் கிடைக்கும்.  சிலரால் மனதில் சிறு வருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் ஆதாயம் ஏற்படும்.

துலாம்: அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும்  ஏற்படும். முய ற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும்.  பிற்பகலுக்குமேல் எதிர்பாராத சிலரை சந்திக்க நேரிடுவதும், அதனால் மனதில் சிறு வருத்தம் ஏற்படவும் கூடும். 
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்: எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் பேச்சிலும் செயலிலும் பொறுமை தேவை.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்..

தனுசு: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது.தசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு எதிர்பாராத யோகம் ஏற்படும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

மகரம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும்.  எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. 
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் நன்மை உண்டாகும்.

கும்பம்: உயர் அதிகாரிகளுடன் கருத்துவேறுபாடும் மனக் கசப்பும் உண்டாகும்.  சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. 
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடை தாமதம் ஏற்படக்கூடும்.

மீனம்:  அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். 
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு பிரச்னை ஏற்படக்கூடும். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close