தினம் தினம் திருநாளே! - தினப் பலன் ஆகஸ்ட் - 10-ம் தேதிக்கான ராசிபலன்

தினம் தினம் திருநாளே
தினப் பலன்
ஆகஸ்ட் - 10
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்: வெளியூர்களில் இருந்து  சுபச் செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள்.  மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். 
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

ரிஷபம்: உற்சாகமான நாள். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 

மிதுனம்: இன்று  நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். 
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் தனலாபம் உண்டாகும்.

கடகம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர்களிடம் இருந்து சுபச் செய்தி வரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். 

சிம்மம்: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். வேலைகளை முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. 

கன்னி: இன்று உற்சாகமான நாளாக அமையும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேவைக்கேற்ற பணவரவு இருக்கும். வெளியூரில் இருந்து நீங்கள் எதிர்பார்க்கும் சுபச் செய்தி வந்து சேரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

துலாம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று தொடங்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. தாய் வழியில் நன்மைகள் நடக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிகம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.  வேலையின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய ஆடை  ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
 கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். 

தனுசு: அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும்  ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். 
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. 
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கக் கூடும்.

கும்பம்:காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். எதிர்பார்க்கும் பணம் கிடைக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மீனம்: முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் இருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை உண்டாகும்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!