தினம் தினம் திருநாளே! - தினப் பலன்- ஆகஸ்ட் - 12 - பஞ்சாங்கக் குறிப்புகளுடன் | Daily Horoscope for August-12-with Panchangam details

வெளியிடப்பட்ட நேரம்: 05:55 (12/08/2017)

கடைசி தொடர்பு:05:55 (12/08/2017)

தினம் தினம் திருநாளே! - தினப் பலன்- ஆகஸ்ட் - 12 - பஞ்சாங்கக் குறிப்புகளுடன்

தினம் தினம் திருநாளே!
தினப் பலன்
ஆகஸ்ட் - 12 - சனிக்கிழமை
'ஜோதிடஶ்ரீ'முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்: சகோதரர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். அரசு காரியங்கள் அனுகூலமாகும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

ரிஷபம்: புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மாலை நேரத்தில் மனதுக்கு இனிய செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

மிதுனம்: அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் நல்லபடி முடியும். தந்தையாலும் தந்தை வழி உறவினர்களாலும் நன்மைகள் உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். 
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

கடகம்: இன்று உற்சாகமாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். அரசாங்க வகையில் ஆகவேண்டிய காரியங்கள் அனுகூலமாகும்.  உறவினர்கள் வருகை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

சிம்மம்: சகோதர வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை ஏற்கவேண்டி வரும் என்றாலும் உற்சாகமாகவே ஏற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும்.

கன்னி: உற்சாகமான நாள். மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். கணவன் - மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காரியங்களில் சிறு சிறு தடைகள் உண்டாகும்.

துலாம்: இன்று செலவுகள் அதிகரிக்கும். அதனால் சிறிய அளவில் கடன் படவும் நேரும். அலுவலகத்தில் உங்கள் அனுபவ அறிவு பெரிதும் பாராட்டப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தந்தையால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். 
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

தனுசு: இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். சகோதர வகையில் எதிர்பார்க்கும் ஆதரவு கிடைக்கும். நிலம், மனை வாங்கும் முயற்சி நல்லமுறையில் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். 
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மகரம்: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். தந்தை வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்குப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். மாலையில் மனதுக்கு இனிய சம்பவம் ஒன்று நடைபெறும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

கும்பம்: இன்று எதிலும் சற்று பொறுமையுடன் இருப்பது அவசியம். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வெளியில் செல்லும்போது சற்று எச்சரிக்கையாக இருக்கவும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும்.

மீனம்: காலையில் இருந்தே பரபரப்பாகக் காணப்படுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத தன லாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணிகளில் கவனமாக இருக்கவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்