தினம் தினம் திருநாளே! - தினப் பலன்-ஆகஸ்ட் -11 - பஞ்சாங்கக் குறிப்புகளுடன்


தினம் தினம் திருநாளே!
தினப் பலன்
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்
ஆகஸ்ட் - 11-வெள்ளிக்கிழமை

தினப் பலன்

மேஷம்:  மிகவும் உற்சாகமான நாள்.  அரசுத்தரப்பில் எதிர்பார்த்த  காரியம் அனுகூலமாக முடியும். இன்று தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். வெளியூரில் இருந்து  சுபச் செய்தி வரும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். 
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

ரிஷபம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல் பால்ய கால நண்பர்களை சந்திக்க நேரிடும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:  முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். தேவைக்கேற்ப பணம் கிடைக்கும். 
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் பணலாபம் கிடைக்கும்.

கடகம்:  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

சிம்மம்:   இன்று சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள். மலைபோல் வேலைகள் குவிந்தாலும் உற்சாகமாகவும்  அழகாகவும் செய்துமுடிப்பீர்கள். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். 
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்திகள் வந்து சேரும்.

கன்னி: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் அனுகூலமாகும்.

துலாம்:  அதிகாரிகள் சந்திப்பும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். அலுவலகத்தில் பணிச் சுமை கூடும் என்றாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் முடித்துவிடுவீர்கள்.  நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். 
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். 
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

தனுசு:  எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.  புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த  தகவல்கள் வரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் நன்மை உண்டாகும். 

மகரம்:  மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். 
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கும்பம்:  இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.  சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு. 

மீனம்: உற்சாகமான நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.  நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. 
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புராதனமான கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!