Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாடாளும் யோகம் ரஜினிக்கு உண்டா... ஜாதகம் என்ன சொல்கிறது? #Astrology

‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும்’ என்கிற கருத்தை வலியுறுத்தி, வருகிற 20-ம் தேதி திருச்சியில் 'காந்திய மக்கள் இயக்கம்' சார்பில் மாநாடு நடக்க இருக்கிறது. இந்த நிலையில், ரஜினிகாந்தால் அரசியலில் வெற்றி பெறமுடியுமா? அவருடைய ஜாதகத்தில் அரசியலில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கு உரிய அமைப்புகள் இருக்கின்றனவா? என்பது பற்றி, நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜோதிட நிபுணர் ரமேஷ் சுவாமியிடம் கேட்டோம். 

ரஜினி

தற்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அவருடைய ஜாதகத்தில் அரசியலில் வெற்றி பெறுவதற்கு உரிய கிரக அமைப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை நம்மிடம் விவரிக்க ஆரம்பித்தார் பாரம்பர்யமிக்க ஜோதிடரான ரமேஷ் சுவாமி.

ஜாதகம்

ரஜினி ஜாதகம்

 

“சிம்ம லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த ரஜினியின் ஜாதகத்தில் வருகிற டிசம்பர் 19-ம் தேதி சனிப் பெயர்ச்சி நடைபெறும்போது இவருக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. இந்தக் காரணத்தினால், இவருக்கு அரசியலில் வெற்றி கிடைக்காது. இவரை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  

இவரது ஜாதகத்தில் 2-ம் இடத்தில் ஆன்மிக கிரகமான கேது, சனியுடன் கூடியுள்ள காரணத்தினால் ஆன்மிக வழியையே இவரது மனம் நாடும். அதையும் மீறி அரசியலுக்கு வந்தால், எந்தக் காலத்திலும் ஜொலிக்க முடியாது. அரசியல் கிரகமான சூரியன் இவரது ஜாதகத்தில் சிம்ம லக்னத்துக்கு 4-ம் இடமான விருச்சிக ராசியில் அமர்ந்திருந்தாலும், சூரியனுக்கு மறைவு ஸ்தானமான 7-ம் இடத்து (சூரியன், சனி ஆகிய கிரகங்களுக்கு 7-ம் இடமும் மறைவு ஸ்தானம் ஆகும்) ரிஷப ராசியைப் பார்வை இடுவதால் ரஜினிக்கு அரசியல் எடுபடாது. 

ரசிகர் கூட்டத்தில் ரஜினி

கல்விக்கு உரிய கிரகமான புதன் இவரது ராசியில் 5-ம் இடத்தில் அமர்ந்துள்ள காரணத்தால், கல்விக்கான தானங்களை எப்போதும் இவர் வழங்கலாம். அதாவது, கல்வி நிறுவனங்கள் பல அமைத்து ஏழைகளுக்கு உதவினால் இவருக்கு நல்லது. லக்னத்துக்கு 5 - ம் இடத்தில் புதனுடன், சுக்கிரனும் சேர்ந்திருக்கும் காரணத்தினால்தான் சினிமாவில் கொடிக்கட்டி பறக்க முடிகிறது.  

6-ம் இடத்தில் செவ்வாய் உச்சம் பெற்று இருந்தாலும், எதிரிகளால் இவருக்கு மறைமுக எதிர்ப்பு எப்போதும் இருக்கும். ஏழாமிடத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி குருபகவான் அமர்ந்திருந்தபோதிலும், ஒன்பதாம் இடமாகிய துலாம் ராசியை குரு பார்வையிடுகின்ற காரணத்தினால், இவருக்கு ஆன்மிக வழிதான் உகந்தது. அரசியல் உகந்தது அல்ல. அதே நேரத்தில் ஏழாம் இடத்தில் குரு அமர்ந்திருப் பதால், மகான்களின் ஆசீர்வாதம் இவருக்கு எப்போதும் கிடைக்கும். 

ரஜினி

‘தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது’ என்று 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க.- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக 'வாய்ஸ்' கொடுத்தபோது ரஜினிக்கு குரு மகாதிசை நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒருவேளை அப்போது அரசியலில் அடியெடுத்து வைத்திருந்தால், ஜெயித்திருக்கலாம். ஆனால், அவர் அந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டார். இனி, அவரது ஜாதகத்தில் அரசியலில் ஜொலிக்க வாய்ப்பில்லை’’ என்று ரமேஷ் சுவாமி கூறுகிறார்.

ரஜினியின் ஜாதகம் அவர் அரசியலுக்கு வருவதற்கு சாதகமாக இல்லை என்றாலும், இதையும் மீறி ரஜினி வருவாரா? வெல்வாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement