வெளியிடப்பட்ட நேரம்: 07:44 (18/08/2017)

கடைசி தொடர்பு:07:44 (18/08/2017)

தினம் தினம் திருநாளே! தினப் பலன் ஆகஸ்ட் 18-ம் தேதிக்கான ராசிபலன்

தினம் தினம் திருநாளே!
தினப் பலன் - ஆகஸ்ட் - 18
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்:  மிகவும் உற்சாகமான நாள்.  அரசுத்தரப்பில் எதிர்பார்த்த  காரியம் அனுகூலமாக முடியும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வெளியூர்களில் இருந்து  சுபச் செய்திகள் வரும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். 

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

ரிஷபம்: புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலர் வேலையின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பிற்பகலுக்கு மேல்  எதிர்பாராத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.  

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.

மிதுனம்:  முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். தேவைக்கேற்ப பணம் கிடைக்கும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். 

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கடகம்:  இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். 

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்:   இன்று சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் அழகாகச் சமாளித்துவிடுவீர்கள். மலைபோல் வேலைகள் குவிந்தாலும் அலட்டிக்கொள்ளாமல்  செய்துமுடிப்பீர்கள். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்களுக்கு உற்சாகம் தரும். 

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் வரக்கூடும். 

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

துலாம்:  அதிகாரிகள் சந்திப்பும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். அலுவலகத்தில் பணிச் சுமை கூடும் என்றாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் முடித்துவிடுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கடனாகக் கிடைக்கும். நண்பர்கள் வகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். 

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ அனுக்கிரகம் உண்டாகும்.

விருச்சிகம்: உற்சாகமான நாள். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. 

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும்.

தனுசு:  எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.  புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த  தகவல்கள் வரும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அரசு அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். 

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மகரம்:  மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த காரியம் இன்று உங்களுக்குச் சாதகமாக முடியும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

கும்பம்:  இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும்.  சிலருக்கு முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் சிலருக்கு உஷ்ணம் தொடர்பாக கண் வலி, வயிற்று வலி ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி மகிழ்ச்சி தரும்.

மீனம்:   உற்சாகமான நாள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. 

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்