தினம் தினம் திருநாளே! தினப் பலன் ஆகஸ்ட் 22-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன் | Daily Horoscope for August 22 with Panchangam details

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (22/08/2017)

கடைசி தொடர்பு:07:30 (22/08/2017)

தினம் தினம் திருநாளே! தினப் பலன் ஆகஸ்ட் 22-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புகளுடன்

தினம் தினம் திருநாளே!
தினப் பலன் - ஆகஸ்ட் -22
'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்

தினப் பலன்

மேஷம்: நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும்.

ரிஷபம்: இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்: இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் மட்டும் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். மாலையில் விருந்தினர் வருகை உண்டு.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கடகம்: அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். கொடுத்த கடன் திரும்ப வரும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்: உற்சாகமான நாள். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டானங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

கன்னி: புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். கணவன் - மனைவிக்குள் மனம் விட்டுப் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை ஏற்படும்.

துலாம்: இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தேவைப்படும் பணம் கடனாகவாவது கிடைத்துவிடும். பள்ளிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும்.

விருச்சிகம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகை  வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும்.

தனுசு: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு  தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் வெற்றி அடையும். அலுவலகத்தில் வேலைகள் அடுக்கடுக்காக வந்தாலும் அழகாகச் சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். 
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் உதவிகள் கிடைக்கும்.

மகரம்: மனதில் இனம் தெரியாத உற்சாகம் காணப்படும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. கோயில் விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண்களால் நன்மை ஏற்படக்கூடும்.

கும்பம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவையான உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மீனம்: நல்லவர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் ஏற்படும். நினைத்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்