1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, பாடல் பெற்ற சென்னைத் திருக்கோயில்கள்..! #Chennai378

ருமமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னை மாநகரில் தேவார மூவர்களாலும் ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற திருத்தலங்கள் ஒன்பது உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிறப்புற்று விளங்கிய அந்த திருத்தலங்களைத்தான் இங்கே காணவிருக்கிறோம். வால்மீகி முனிவர் வந்து வழிபட்ட திருவான்மியூர், மயில் உருவில் சக்தி சிவனை வழிபட்ட திருமயிலை, மீசையோடு கிருஷ்ணர் வித்தியாசமாகக் காட்சி தரும் திருவல்லிக்கேணி, திருமணக்காட்சி தந்து அகத்தியரை ஆட்கொண்ட திருவேற்காடு, நான்கு உருவில் திருமால் அருளாசி தரும் திருநீர்மலை, குருவின் தலமாக இருக்கும் திருவலிதாயம், தொண்டைமான் மன்னருக்கு அருள் செய்த திருமுல்லைவாயில், திருமகள் வந்து நின்ற திருநின்றவூர், தியாகேசப்பெருமானாக அரசாட்சி செய்யும் திருவொற்றியூர் என ஒன்பது தலங்களை, புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் பார்த்து பரவசம் அடையலாம். அந்த ஆலயங்களுக்கு உரிய பதிக / பாசுரப்பாடலையும் கீழே உள்ள ஆடியோ இணைப்பில் கேட்கலாம். 

பாடல்கள்: பவ்யா கிருஷ்ணன்

படங்கள்: பரணி

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!