லலிதாம்பிகை கொலுசு... காமாட்சி கரும்பு... குமரியம்மன் மூக்குத்தி... 9 அம்பிகைகள்... 9 சிறப்புகள்! #Interactive

யிரம் திருநாமங்களுடன் ஆயிரமாயிரம் திருக்கோலங்களில் தலங்கள்தோறும் அருளாட்சி செலுத்துகிறாள் அன்னை ஆதிபராசக்தி. அத்தனை தலங்களிலும் அம்பிகையின் அருளாடல்களுக்கும் அதிசய நிகழ்வுகளுக்கும் குறைவே இல்லை. 

அம்பிகை காஞ்சி காமாட்சி

ஓர் அம்பிகைக்கு ஶ்ரீசக்கரமே தாடங்கங்களாக அழகு செய்கிறதென்றால், மற்றோர் அம்பிகையின் திருவடிகளில் கொலுசுகளின் இனிய ஒலி கீதம் பாடுகிறது. 

மன்மதனிடம் மட்டுமா கரும்பு வில் இருக்கிறது? இதோ காஞ்சியின் அரசியும் கரும்பு வில் கொண்டு காட்சி தருகிறாள். மன்மதனின் கரும்பு வில் மோகத்தைத் தூண்டக்கூடியது என்றால், அம்பிகையின் கரத்தில் இருக்கும் கரும்பு வில்லோ நம் மோகம் அகற்றி, ஆன்மிகத்தில் உயர்நிலை அடையச் செய்கிறது. 

மற்றுமோர் தலத்தில் அம்பிகை மேரு வடிவினளாய் காட்சி தருகிறாள்.

இப்படி தலங்கள்தோறும் அம்பிகையின் ஒவ்வோர் அம்சமும் ஓர் அற்புத உண்மையை, பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்த்திய ஓர் அருளாடலை நமக்கு உணர்த்துகிறது.  நவராத்திரியை முன்னிட்டு இங்கே அம்பிகைக்கே உரிய தனித்துவமான அடையாளங்களை  தரிசிக்கலாம்.

அம்மன் படத்தின் மேல் கிளிக் செய்தால் அதன் சிறப்புகள் உங்கள் கண் முன் விரியும்! மீண்டும் அதே இடத்தில் க்ளிக் செய்தால் அம்மன் திருவுருவம் உங்கள் பார்வைக்கு விரியும். 

 

Just click the image

{{x.title}}

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!