Published:Updated:

`பக்தர்களுக்கே முன்னுரிமை!' - திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர்

எஸ்.கதிரேசன்
`பக்தர்களுக்கே முன்னுரிமை!' - திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர்
`பக்தர்களுக்கே முன்னுரிமை!' - திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர்

இந்தியாவில் உள்ள திருத்தலங்களுள் புகழ்பெற்றது திருப்பதி. இந்த ஆலயத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மிகவும் நேர்த்தியுடன் பராமரித்துவருகிறது. 

`பக்தர்களுக்கே முன்னுரிமை!' - திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர்


திருமலை திருப்பதிக்கு, ஒரு நாளைக்கு 60,000 முதல் 80,000 பக்தர்களுக்கு மேல் வருகிறார்கள். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில், இந்த எண்ணிக்கை 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அதிகரிக்கும். இவர்களுக்கு, உணவு, குடிநீர் , போக்குவரத்து, தங்கும் அறைகள், லாக்கர் வசதிகள், முடி இறக்குவதற்கான இடங்கள் என அனைத்து வசதிகளும் தங்குதடையின்றி வழங்கப்படுகின்றன. பெரும்பாலான சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

`பக்தர்களுக்கே முன்னுரிமை!' - திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர்


இத்தனை சிறப்பு வாய்ந்த திருமலை தேவஸ்தானத்தின் புதிய  தலைவராக எஸ்.வி.சுப்பா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர், தேவஸ்தானத்தின் பொறுப்பை ஏற்கும் 50-வது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

`பக்தர்களுக்கே முன்னுரிமை!' - திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர்

ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று, புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றுள்ளார். அவரின் புதிய அமைச்சரவை பதவியேற்றதும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு பொறுப்பை ஏற்றனர். அந்த வகையில், திருப்பதி தேவஸ்தான தலைவராக வி.சுப்பா ரெட்டி பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவி ஏற்றதும், வேங்கடேசப்பெருமாளை  தரிசனம் செய்தார். அதன்பின்னர், அன்னதானம் வழங்குமிடம், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பக்தர்களிடம் திருமலையில் செய்யவேண்டிய வசதி வாய்ப்புகள் பற்றி கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், 'திருப்பதிக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்வேன்' என உறுதியளித்தார். 

அத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு! - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி