Published:Updated:

தை மாத ராசிபலன்! - மேஷம் முதல் கன்னி வரை (ஜனவரி 15 முதல் பிப்ரவரி 12 வரை) #Astrology

ஜோதிட மாமணி கிருஷ்ணதுளசி
தை மாத ராசிபலன்! - மேஷம் முதல் கன்னி வரை (ஜனவரி 15 முதல் பிப்ரவரி 12 வரை) #Astrology
தை மாத ராசிபலன்! - மேஷம் முதல் கன்னி வரை (ஜனவரி 15 முதல் பிப்ரவரி 12 வரை) #Astrology

மேஷராசி அன்பர்களே!

10-ல் சூரியன், கேது;  8-ல் குரு;  8, 9-ல் சுக்கிரன்;  10, 11-ல் புதன்;  12, 1-ல் செவ்வாய்;  9-ல் சனி;  4-ல் ராகு

மாதம் முழுவதும் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும்.

பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்குத் தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.

அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. 

தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப்புது வாய்ப்புகள் தேடி வரும். பிரபல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மாணவ - மாணவியர்க்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: ஜன: 15, 16, 19, 20, 25, 26, 27, 28, 29, பிப்: 3, 4, 5, 6, 7, 11, 12
சந்திராஷ்டம நாள்கள்: ஜன: 30, 31
அதிர்ஷ்ட எண்கள்: 2,5

வழிபட வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், துர்கை

பரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வது நல்லது.  

ரிஷபராசி அன்பர்களே!

9-ல் சூரியன், கேது;  7-ல் குரு;  7, 8-ல் சுக்கிரன்;  9, 10-ல் புதன்;  11, 12-ல் செவ்வாய்;  8-ல் சனி;  3-ல் ராகு

மாதம் முழுவதும் குரு, மாதப் பிற்பகுதியில் சுக்கிரன், புதன் ஆகியோரால் நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் வருகையால் ஆதாயம் உண்டாகும். பழுதான மின்சார, மின்னணு சாதனங்களை மாற்றி புதிதாக வாங்குவீர்கள்.

தந்தை வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல்நலனில் ஆரோக்கியம் தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நினைத்த வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள். ஷேர் மூலம் பணம் வருவதற்கு வாய்ப்பு உண்டு. மாத முற்பகுதியில் தாய்மாமன் வழியில் சில சங்கடங்கள் ஏற்படக் கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. உணவு விஷயத்தில் கவனம் தேவை.

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ஆலோசனைகள் பாராட்டப்படும். சக ஊழியர்கள் கேட்கும் சந்தேகங்களைத் தீர்ப்பதுடன், அவர்களுடைய பணிகளில் உதவி செய்வீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மாதப் பிற்பகுதியில் பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். அரசாங்கத்தால் கௌரவிக்கப்படுவீர்கள். படப்பிடிப்பு தொடர்பாக வெளிமாநில, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்.

மாணவ - மாணவியர்க்குக் கஷ்டப்பட்டு படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். நண்பர்களுடன் பழகுவதில் மிகவும் கவனம் தேவை. சந்தேகங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

சாதகமான நாள்கள்: ஜன: 17, 18, 21, 22, 27, 28, 29, 30, 31, பிப்: 6, 7, 9, 10
சந்திராஷ்டம நாள்கள்: பிப்: 1, 2
அதிர்ஷ்ட எண்கள்: 5,7,9

வழிபட வேண்டிய தெய்வம்: சூரியன், தட்சிணாமூர்த்தி

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்திமாலை அணிவித்து அர்ச்சனை செய்வதும், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதும் நன்மை தரும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.

மிதுனராசி அன்பர்களே!

8-ல் சூரியன், கேது; 6-ல் குரு; 6, 7-ல் சுக்கிரன்; 8, 9-ல் புதன்; 10, 11-ல் செவ்வாய்; 7-ல் சனி; 2-ல் ராகு

மாதம் முழுவதும் செவ்வாய், சுக்கிரன், மாத முற்பகுதியில் புதன் ஆகியோர் மட்டுமே அனுகூலப் பலன்களைத் தருவார்கள். மற்றபடி சூரியன், குரு ஆகியோர்  சாதகமாக இல்லாத காரணத்தால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். அரசாங்கக் காரியங்கள் தாமதமாகவே முடியும். வழக்குகளால் மனதில் ஓர் அச்ச உணர்வு ஏற்படக்கூடும். ஆனால், செவ்வாய் அனுகூலமாக இருப்பதால், எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். அவர்களால் மறைமுக ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாதப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டுச் சரியாகும். மாத முற்பகுதியில் புதன் சாதகமாக இருப்பதால், எடுத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  

திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். மாதத்தின் பிற்பகுதி யில்  உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். ஆனால்,  உடல் நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்குத் தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். 

தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வரவேண்டிய பாக்கித் தொகையும் வந்து சேரும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்களுக்கு மாத முற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் மிகச் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆனால், சக மாணவர்களிடம் கவனமாகப் பழகவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: ஜன: 15, 16, 19, 20, 23, 24, 30, 31, பிப்: 1, 2, 9, 10, 11, 12
சந்திராஷ்டம நாள்கள்: பிப்: 3, 4, 5
அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், மகாலட்சுமி

பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வதும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய்தீபம் ஏற்றுவதும் சிறந்த பலன்களைத் தரும்.

கடகராசி அன்பர்களே!

7-ல் சூரியன், கேது;  5-ல் குரு;  5, 6-ல் சுக்கிரன்;  7, 8-ல் புதன்;  9, 10-ல் செவ்வாய்;  6-ல் சனி;  1-ல் ராகு

மாதம் முழுவதும் குரு, சனியும் மாதப் பிற்பகுதியில் செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரும் நன்மை செய்வார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. குரு சாதகமாக இருப்பதால், முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்குப் பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனால், பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்பதால், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. ஆனால், மாதக் கடைசியில் அவர்களில் சிலரால் பிரச்னைகளும் ஏற்படலாம் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் நலன் அடிக்கடி பாதிக்கப்படக்கூடும். உடனுக்குடன் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. 

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். கூடுமானவரை உங்கள் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். உயர் அதிகாரிகளுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 

தொழில், வியாபாரம் நன்றாகவே இருக்கும். போட்டிகள் குறையும். சக வியாபாரிகள் இணக்கமாக நடந்துகொள்வார்கள். சிலருக்கு வியாபார விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். ஆனால், அரசாங்க வகையில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைக் கவனமாகப் பயன் படுத்திக்கொள்வது அவசியம். மாதப் பிற்பகுதியில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். முயற்சிகளில் இருந்த தடை, தாமதங்கள் நீங்கும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது  அவசியம். கஷ்டப்பட்டுப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.

சாதகமான நாள்கள்: ஜன: 15, 16, 17, 18, 21, 22, 25, பிப்: 1, 2, 3, 4, 5, 11, 12
சந்திராஷ்டம நாள்கள்: பிப்: 6, 7
அதிர்ஷ்ட எண்கள்:5,6

வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி, வெங்கடாசலபதி

பரிகாரம்: விஷ்ணுசஹஸ்ரநாமம் மற்றும் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்குத் துளசி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

சிம்மராசி அன்பர்களே!

6-ல் சூரியன், கேது;  4-ல் குரு; 4, 5-ல் சுக்கிரன்; 6, 7-ல் புதன்; 8, 9 -ல் செவ்வாய்; 5-ல் சனி; 12-ல் ராகு

மாதம் முழுவதும் சூரியன், கேது, சுக்கிரன், மாத முற்பகுதியில் புதன் ஆகியோர் நன்மை தருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் சகோதரர்களால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். 

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம். 

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் கதவைத் தட்டும். பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும். படைப்புகள் வரவேற்பு பெறும். பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கௌரவிக்கப்படுவீர்கள். 

மாணவ மாணவியர்க்குக் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகள் கிடைக்கும். 

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.  கணவரின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பணிக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். 

சாதகமான நாள்கள்: ஜன: 17, 18, 19 20, 23, 24, 27, 28, 29, பிப்: 3, 4, 5, 6, 7
சந்திராஷ்டம நாள்கள்: பிப்: 8, 9, 10
அதிர்ஷ்ட எண்கள்:1,7,9

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை, முருகப் பெருமான்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி பாராயணம் செய்வதும், ஞாயிற்றுக்கிழமைகளில் துர்கைக்கு அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

கன்னிராசி அன்பர்களே!

5-ல் சூரியன், கேது;  3-ல் குரு; 3, 4-ல் சுக்கிரன்; 5, 6-ல் புதன்; 7, 8 -ல் செவ்வாய்; 4-ல் சனி; 11-ல் ராகு

மாதம் முழுவதும் ராகு, மாத முற்பகுதியில் செவ்வாய், மாதப் பிற்பகுதியில் புதன், சுக்கிரன் ஆகியோரால் நன்மை ஏற்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்ப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும்.  மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களால் நன்மைகள் நடக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்குப் பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  ஆனால், உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்படக் கூடும், தாய்வழி உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். சிலருக்கு நீண்டநாளாகத் தடைப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். 

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் சாமர்த்தியமாகப் பேசுவதன் மூலம் வாய்ப்புகளைப் பெறமுடியும். சக கலைஞர்கள் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்கும். மூத்த கலைஞர்கள் உங்கள் முன்னேற்றத்துக்கு உதவி செய்வார்கள்.

மாணவ மாணவியர்க்குப் பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்குச் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சாதகமான நாள்கள்: ஜன: 19, 20, 21, 22, 25, 30, 31, பிப்: 6, 7, 8, 9, 10 
சந்திராஷ்டம நாள்கள்: ஜன: 15, 16, பிப்: 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 4,6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை, மகாவிஷ்ணு

பரிகாரம்: புதன்கிழமைகளில் விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.