Published:Updated:

ஆனி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை...!

கண்ணன் கோபாலன்
ஆனி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை...!
ஆனி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை...!

ஆனி மாத ராசிபலன் ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை மேஷம் முதல் கன்னி ராசிகளுக்கான ராசிபலனைப் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

துலாம்: 8, 9-ல் சுக்கிரன்; 9-ல் சூரியன், புதன், ராகு; 9, 10-ல் செவ்வாய்; 2 -ல் குரு; 3 -ல் சனி, கேது

ஆனி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை...!

துலாராசி அன்பர்களே!

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்கிடையே  அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை திட்டமிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு வெளிமாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.  இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை மாதமாக இந்த மாதம் அமையும்.

தந்தையுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், தந்தையுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நீண்டகாலமாக செலுத்த முடியாமல் போன குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்ச்சியடைவீர்கள். படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு சற்று முயற்சியின் பேரில் நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு கனிந்து வரும். 

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். உயர் அதிகாரிகள் உங்கள் ஆலோசனைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். உங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு நல்ல நல்ல வாய்ப்புகளும், தாராளமான பணவரவும் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள். புகழும், ரசிகர்களிடம் செல்வாக்கும் அதிகரிக்கும். 

மாணவ மாணவியர்க்கு, படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆனாலும், குருபலம் இருப்பதால், மனத் தெளிவு பெற்று ஓரளவு படிப்பில் கவனம் செலுத்த முயற்சி செய்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் பயன் தருவதாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.

சாதகமான நாள்கள்: ஜூன் 18, 19, 25, 26, 27, 28, 29, ஜூலை 4, 5, 8, 9, 10, 11, 12, 15, 16
சந்திராஷ்டம நாள்கள்: ஜூன் 30, ஜூலை 1
அதிர்ஷ்ட எண்கள்: 1,7,9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், விநாயகர்

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதும், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதும் நன்மை தரும்.



விருச்சிகம்: 7, 8-ல் சுக்கிரன்; 8-ல் சூரியன், புதன், ராகு; 8, 9-ல் செவ்வாய்; 1 -ல் குரு; 2 -ல் சனி, கேது

ஆனி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை...!

விருச்சிகராசி அன்பர்களே!

அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்பட்டு மன அமைதி பாதிக்கக்கூடும். கூடுமானவரை மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒருமுறைக்குப் பலமுறை போராடித்தான் முடிக்கவேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே  அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சாதகமாக முடியும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படக்கூடும்.

அரசாங்க வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தைவழி உறவினர்களுடன் சற்று இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. பயணங்களின்போது கொண்டு செல்லும் பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். 

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் சற்று கஷ்டப்பட்டுத்தான் முடிக்கவேண்டி இருக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களால் ஓரளவு உதவி உண்டு.
தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும். புகழும் கௌரவமும் அதிகரிக்கும். ரசிகர்களிடம் உங்கள் செல்வாக்கு கூடும். சிலருக்கு விருதுகளும் பட்டங்களும் கிடைக்கும்.
மாணவ - மாணவியர்க்கு படிப்பில் இருந்த தேக்க நிலை மாறும். பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். ஆசிரியர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கூறி, பாராட்டு பெறுவீர்கள். ஆனாலும், நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.

சாதகமான நாள்கள்: ஜூன் 16, 17, 20, 21, 27, 28, 29, 30 ஜூலை 1, 6, 7, 8, 9, 13, 14
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 2, 3
அதிர்ஷ்ட எண்கள்: 2,4,6

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர், பெருமாள்

பரிகாரம்: விநாயகர் அகவல் பாராயணம் செய்வதும், விநாயகருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, தும்பைப் பூக்களால் அர்ச்சனை செய்வதும் நன்மைகளைத் தரும்.
 

தனுசு: 6, 7-ல் சுக்கிரன்; 7-ல் சூரியன், புதன், ராகு; 7, 8-ல் செவ்வாய்; 12 -ல் குரு; 1 -ல் சனி, கேது

ஆனி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை...!

தனுசுராசி அன்பர்களே!

மாதத் தொடக்கத்தில் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். தெய்வ பக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் ஏற்படும்.  பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனாலும், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை அளவோடு பேசவும். கணவன் - மனைவிக்கு இடையில் சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்திலும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். 

குடும்பப் பொறுப்புகளின் காரணமாக திடீர்ப் பயணங்களை மேற்கொள்ளவும் அதன் காரணமாக உடல் அசதியும் மனச் சோர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் சில வீண்செலவுகள் ஏற்படக்கூடும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். வழக்குகளில் பிற்போக்கான நிலைமையே காணப்படும். 

அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். ஆனாலும், பணிச்சுமை அதிகரிக்கவே செய்யும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு வேலையில் இடமாற்றமும் ஊர்மாற்றமும் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப்படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும். 
கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு தடைப்பட்ட வாய்ப்புகள் கைகூடி வரும். வருமானமும் அதிகரிக்கும். பாராட்டுகள் குவியும். புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவ - மாணவியர் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்துப் படிக்கவேண்டியது அவசியம். பொழுதுபோக்குகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும். 

சாதகமான நாள்கள்: ஜூன் 18, 19, 22, 23, 24, 30, ஜூலை 1, 2, 3, 8, 9, 10, 11, 12, 15, 16
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 4, 5
அதிர்ஷ்ட எண்கள்: 3,7

வழிபடவேண்டிய தெய்வம்; தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர்

பரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரகங்களில் குருபகவானுக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு அர்ச்சனை செய்து, அனுமன் சாலீசா படிப்பதும் நன்மை தரும்.

ஆனி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை...!


 

மகரம்:  5, 6-ல் சுக்கிரன்; 6-ல் சூரியன், புதன், ராகு; 6, 7-ல் செவ்வாய்; 11 -ல் குரு; 12 -ல் சனி, கேது

ஆனி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை...!

மகரராசி அன்பர்களே!

பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்திகளைக் கேட்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், கவனமாகச் செல்வதன் மூலம் விபத்துகளைத் தவிர்க்கலாம்.

தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி உறவு சுமுகமாகும். அரசாங்க வகையில் காரிய அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படக்கூடும். ஷேர் மூலம் பணவரவு கிடைக்கக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு பதவி மாற்றமும், இட மாற்றமும் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சக ஊழியர்களிடமும் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. 

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இந்த மாதம் வேண்டாம். மாதப் பிற்பகுதியில் ஓரளவுக்கு நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு எதிர்பார்த்தபடியே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகும். நியாயமாக உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பாராட்டுகள் மறுக்கப்படும். 

மாணவ - மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. கஷ்டப்பட்டு படித்தால்தான், பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சாதகமான நாள்கள்: ஜூன் 16, 17, 20, 21, 25, 26, ஜூலை 2, 3, 4, 5, 10, 11, 12, 13, 14
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 6, 7
அதிர்ஷ்ட எண்கள்: 2,3,7

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி, விநாயகர்

பரிகாரம்: விநாயகருக்கு வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, அறுகம் புல்லால் அர்ச்சனை செய்வது நல்லது. மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர் கொண்டு அர்ச்சித்து வழிபடுவதும் நன்மை தரும்.


கும்பம்: 4, 5-ல் சுக்கிரன்; 5-ல் சூரியன், புதன், ராகு; 5, 6-ல் செவ்வாய்; 10 -ல் குரு; 11 -ல் சனி, கேது

ஆனி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை...!

கும்பராசி அன்பர்களே!

வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும்.  ஆனால், மாதப் பிற்பகுதியில் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம். வீட்டில் பொருள்கள் களவு போகக்கூடும் என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.

வீடு, மனை வகைகளில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பத்துடன் வெளியூர், வெளி மாநிலங்களில் உள்ள பிரசித்திபெற்ற திருத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். 
அலுவலகத்தில் ஓரளவுக்கு முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படுகிறது. எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில் இருந்த தடைகள் விலகும். 

தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். மற்ற கலைஞர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. உங்களைப் பற்றிய வதந்திகள் பரவினாலும், பொருட்படுத்தாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
மாணவ - மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: ஜூன் 16, 17, 18, 19, 22, 23, 24, 27, 28, 29, ஜூலை 4, 5, 6, 7, 13, 14, 15, 16
சந்திராஷ்டம நாள்கள்: ஜூலை 8, 9
அதிர்ஷ்ட எண்கள்: 1,2,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான், பைரவர்

பரிகாரம்: அஷ்டமி தினத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும், செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் நன்மை தரும்.


மீனம்:  3, 4-ல் சுக்கிரன்; 4-ல் சூரியன்,  புதன், ராகு; 4, 5-ல் செவ்வாய்; 9 -ல் குரு; 10 -ல் சனி, கேது

ஆனி மாத ராசிபலன் துலாம் முதல் மீனம் வரை...!

மீனராசி அன்பர்களே!

வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை நல்லபடியே இருக்கும். பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் குடிகொள்ளும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.  சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். 

தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. அவருடன் வீண்விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்வது அவசியம்.

அலுவலகத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கு புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். ஆனால், மாதப் பிற்பகுதியில் சக கலைஞர்களால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களைப் பற்றிய வதந்திகளும் பரவக்கூடும்.

மாணவ - மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டிப் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

சாதகமான நாள்கள்: ஜூன் 18, 19, 20, 21, 25, 26, 30, ஜூலை 1, 6, 7, 8, 9, 15, 16
சந்திராஷ்டம நாள்கள்:  ஜூலை 10, 11, 12
அதிர்ஷ்ட எண்கள்: 2,5

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், துர்கை

பரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வேளையில் துர்கைக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை 

- 'ஜோதிடஶ்ரீ'முருகப்ரியன்

Vikatan