Published:Updated:

உலகின் போக்கையே மாற்றிய பலரும் மிதுனம் ராசியில் பிறந்தவர்கள்தான்! #Astrology

எஸ்.கதிரேசன்
உலகின் போக்கையே மாற்றிய பலரும் மிதுனம் ராசியில் பிறந்தவர்கள்தான்! #Astrology
உலகின் போக்கையே மாற்றிய பலரும் மிதுனம் ராசியில் பிறந்தவர்கள்தான்! #Astrology

மிதுனம் ராசிக்காரர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். மிதுனத்தை லக்னமாகவோ ராசியாகவோ கொண்டவர்கள். மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவு அறிவாளிகளாக இருப்பார்கள். பள்ளிப் பருவத்தில், கல்லூரி நாள்களில் மற்றவர்கள் இவர்களை மட்டம் தட்டியிருப்பார்கள். ஆனால், படிப்பு முடிந்து சாதனைகள் படைக்கும்போது, `இவரா அப்படி?' என ஆச்சர்யப்பட வைப்பார்கள்.

உலகின் போக்கையே மாற்றிய பலரும் மிதுனம் ராசியில் பிறந்தவர்கள்தான்! #Astrology

உலகின் போக்கையே மாற்றிய அறிவாளிகள், புத்திசாலிகள், கண்டுபிடிப்பாளர்கள் எனப் பலரும் மிதுன ராசியில் பிறந்தவர்கள்தான்.   பணத்தைவிட புகழுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

மிதுன ராசிக்காரர்களுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகமிருக்கும். எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று நினைப்பார்கள். அமெரிக்க அதிபரிலிருந்து அவர் வீட்டு அடுப்பங்கரை வரை எதையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் இவர்களுக்கு அதிகமிருக்கும். ஆனால், ஒன்றைப் பற்றித் முழுமையாகத் தெரிந்துகொள்ளுவதற்கு முன்பே அடுத்து ஒரு விஷயத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிடுவார்கள். இதனால் இவர்களுக்கு எல்லா விஷயங்களிலும் இரட்டைச்சிந்தனை மனநிலை இருந்துகொண்டே இருக்கும். இது இவர்களின் பலவீனமாகும். 

மற்றவர்களுக்கு அறிவுரைகளை மிகவும் பக்குவமாகச் சொல்வார்கள். ஆனால், அதை இவர்களின் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கமாட்டார்கள். எல்லாவற்றிலும் அடுத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுவைத்துக்கொண்டு இறுதியில் அவர்கள் நினைத்ததையே செய்வார்கள். எல்லோரையும் அரவணைத்து மேலே கொண்டுவரவேண்டுமென நினைப்பார்கள். எவரையும் காலை வாரிவிட மாட்டார்கள். 

உலகின் போக்கையே மாற்றிய பலரும் மிதுனம் ராசியில் பிறந்தவர்கள்தான்! #Astrology

மிதுனத்தின் அதிபதியான புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள், புத்தகம், அறிவின் மூலம் விருத்தியளிக்கும் தொழில்களான நிதி, சட்டம் ஆகியற்றுக்கு ஆலோசனைகள் வழங்கும் தொழில்கள் இவர்களுக்கு ஏற்றவை, பேச்சாளர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் இந்த ராசியில் பிறந்தவர்களாக இருப்பார்கள். 

மிதுன ராசிக்காரர்கள் 33 வயதுக்கு மேல் படிப்படியாக முன்னேறுவார்கள். இவர்களுக்கு ஏற்ற நிறம் பச்சை. ஏற்ற தெய்வம் திருப்பதி வேங்கடாஜலபதி '' என்கிறார் ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி. 

Vikatan