Published:Updated:

எந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் ? #Astrology

எஸ்.கதிரேசன்
எந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் ? #Astrology
எந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் ? #Astrology

'பணம் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் அல்ல, செலவு செய்பவர்களே பணக்காரர்கள்' என்பார்கள். அதிலும் குறிப்பாக, நுகர்வுக் கலாசாரம் பெருகியிருக்கும் இந்த நாள்களில், கடன் வாங்கியாவது செலவுசெய்யும் மனோபாவம் இன்று பலரிடமும் நிறைந்திருக்கிறது. வீட்டுக் கடன், விவசாயக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன் எனப் பல ரூபங்களில் வங்கிகளும் கடன் வழங்கிவருகின்றன. அதனால், பெரும்பாலானவர்களுக்குக் கடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது. 'இந்தக் கடன் எப்போது அடையும்' என்று ஏங்கிக்கிடக்கிறார்கள் மக்கள். கடனற்ற வாழ்க்கை எந்த நட்சத்திரக்காரர்களுக்கு அமையும் என்பது குறித்து, திருவண்ணாமலை ஜோதிடர் ஆனந்தாழ்வானிடம் கேட்டோம். 

எந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் ? #Astrology


ஜோதிட சாஸ்திரப்படி, ஒரு ஜாதகருக்கு கடன் ஏற்படுவதற்குக் காரணம், பூர்வ ஜன்ம கர்ம வினைகளே. கடன் யாருக்கு எந்த அளவு ஏற்படும், எந்த வயதில் கடன் அடைபடும் என்பது பற்றிப் பார்ப்போம்.
* அசுவினி நட்சத்திரக்காரர்கள், கேதுவின் காரகத்துவம் பெற்று செவ்வாயின் வீட்டில் பிறந்தவர்கள். இவர்களுக்கு வீடு மனை, நிலம் வாங்கிய வகையில் 26 சதவிகிதம் அளவு கடன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி ஏற்படும் கடன்களை இவர்கள் தங்களின் 39 - வது வயது தொடங்கிய சில ஆண்டுகளில் அடைத்துவிடுவார்கள். 
 
* பரணி நட்சத்திரக்காரர்கள், சுக்கிரனின் ஆதிக்கத்தில் செவ்வாயின் வீட்டில் பிறந்தவர்கள். இவர்களுக்குச் சொத்து சுகம், வாகனங்கள் வாங்கிய வகையில் கடன் ஏற்படும். இவர்களின் வருமானத்தில் 36 சதவிகிதம் அளவுக்குக் கடன் வாங்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் திருமணம் முடிந்து, 52 வயது முதல் 58 வயதுக்குள் அனைத்துக் கடன்களும் அடைபட்டுவிடும்.

* கிருத்திகை நட்சத்திரக்காரர்கள், சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்களுக்கு, வெளிநாட்டு யோகம் உண்டு. இவர்களின் வருமானத்தில் 16 சதவிகிதம் அளவுக்கே கடன்வாங்க வேண்டியிருக்கும். ஆனால், அதையே பெரிய சுமையாக நினைத்தக் கலங்குவார்கள். இவர்கள், தங்களின் கடனை 40 முதல் 46 வயதுக்குள் அடைத்து முடித்துவிடுவார்கள். 

எந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் ? #Astrology

* ரோகிணி நட்சத்திரக்காரர்கள் மிகவும் யோகசாலிகள். ஏதோ ஒரு விதத்தில் பணமோ பூர்விக சொத்தோ தாய்மாமன் வழி சொத்துகளோ வந்து சேரும். அதனால் இவர்களுக்கு மிரட்டும் அளவு கடனிருக்காது. அதிகபட்சமாக, 8 முதல் 10 சதவிகிதம் அளவுக்குள்ளாகவே கடனிருக்கலாம். 32 வயதுக்குள்ளாகவே கடனைக் கொடுத்து முடித்துவிடுவார்கள். 

* மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள், துணிந்து ஏராளமாகக் கடன் வாங்குவார்கள். தாராளமாக 66 முதல் 78 சதவிகிதம் அளவுக்குக்கூட கடன் வாங்க வேண்டியிருந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். தங்களின் கடன்கள் அனைத்தையும் 60 முதல் 66 வயதுக்குள் முறையாகத் திருப்பிச் செலுத்திவிடுவார்கள்.  

* திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வேலை சிரமமில்லாமல் அமையும். திருமணமும் எளிதாகக் கடன் தொல்லை இல்லாமல் நடக்கும். அதனால், இந்த நட்சத்திரக்காரர்கள்  5 சதவிகிதம் அளவே கடன் வாங்கவேண்டியது இருக்கலாம். மனைவியால் ஏற்படும் யோகம், பிறந்த குழந்தையால் உண்டாகும் யோகம் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால், தங்களின் கடனை 51 வயதுக்கு மேல் அடைத்துவிடுவார்கள். கடனே இல்லாத வாழ்வு வாழ்வார்கள். 

எந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் ? #Astrology



* புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு அதிபதி குரு. தங்களின் பெற்றோர்களைக் கவனிப்பது, நோய் நொடிகளுக்குச் செலவு செய்யப் போய், வருமானத்தில்  45 சவிகித அளவுக்கு கடனாளியாகிவிடுவார்கள். இவர்கள், இந்தக் கடனைத் தங்களின் 57 வயதுக்கு மேல் முழுவதுமாகக் கொடுத்து முடிப்பார்கள்.

* பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும்  48 சதவிகித அளவு கடன் வாங்க வேண்டியிருக்கலாம். ஆனாலும், இது இவர்களுக்குப் பெரிய சுமையாக இருக்காது. கடனிருப்பதை வெளியிலும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். பூச நட்சத்திரக்காரர்கள் 61 வயதுக்கு மேல் தங்களின் கடனை அடைத்துவிடுவார்கள்.
 
*ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு ஜாதக ரீதியாகக் கடனிருக்காது. இதையும் தாண்டி கடனிருக்கிறதென்றால், தானாக வலிந்து தேடிக்கொண்டதாக இருக்கும். ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் 29 சதவிகித அளவு கடன் சேரலாம். அதையும் 41 வயது முதல் 47 வயதுக்குள் அடைத்து முடிப்பார்கள்.

* மகம் நட்சத்திரக்காரர்களுக்குக் கடனிருக்காது. மகத்தில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்திலிருப்பவர்கள். முன்பகுதியில் கெடுத்து பின்பகுதியில் யோகங்களை வழங்குவார். மக நட்சத்திரக்காரர்கள், 21 வயதிலேயே கடனை அடைத்து முடித்துவிடுவார்கள்.

எந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் ? #Astrology



* பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு 16 சதவிகித அளவிலேயே கடனிருக்கும். பூர்வபுண்ணிய ஸ்தானம், சகோதரஸ்தானம் வலுவாக இருக்கும். தொழில் தொடங்குவதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருதால், இந்தக் கடன் ஏற்படுகிறது. இந்தக்கடனை தங்களின் 59 வயதில் அடைப்பர்கள்.

*உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு 7 சதவிகித அளவுக்குள்ளாகவே கடனிருக்கும். பெற்றோர்களுக்காகவோ குழந்தைகளின் உடல்நலனுக்காகவோ வாங்குவார்கள். இந்தக் கடனை இவர்கள் தங்களின் 31 வயது முதல் அடைக்கத் தொடங்கிவிடுவார்கள்.

* அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு பூர்வ ஜனன பாக்கியம் நன்றாக இருக்கும். பிறரின் பேச்சைக் கேட்டு நடப்பதாலும், ஆடம்பரச் செலவுகளாலும் கடன் 30 சதவிகித அளவு ஏற்படும். இவர்கள், தங்களின் 69-வது வயதிற்குள் கடனை அடைப்பார்கள்.

* சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு பொன் பொருள் சேர்க்கை சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு, 46 சதவிகித அளவு  கடனிருந்துகொண்டே இருக்கும். அவற்றை 41 வயதிலிருந்து திருப்பி அடைக்கத் தொடங்குவார்கள்.

* சுவாதி நட்சத்திரக்காரர்கள் எப்போதும் சுற்றுலா செல்வது, ஆன்மிகத் திருத்தலங்களுக்குச் செல்வது ஆகிய காரணங்களால் 43 சதவிகித அளவுக்கு கடனோடிருப்பார்கள். தங்களின் 50 வயதுக்கு மேல் கடனை திருப்பிச்செலுத்துவார்கள். 

* விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு பிரதானமாகக் கடனிருக்காது. பேரன் பேத்திகளுக்குச் செய்யும் வகையில் கடன் ஏற்படலாம். அப்படியே ஏற்பட்டாலும், இவர்கள் அதை உடனே அடைத்துவிடுவார்கள்.  சொத்து சுகம் வாங்கிய வகையிலான கடன், சிறுவயதிலேயே பெற்றோரால் அடைக்கப்பட்டிருக்கும்.

எந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் ? #Astrology

* அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இரக்க சிந்தனை அதிகமிருக்கும். இதனால் அடுத்தவர்களுக்கு அவ்வப்போது உதவிக்கொண்டே இருப்பார்கள். இதற்காக, அடிக்கடி கடன் வாங்கவும் செய்வார்கள். அப்படி வாங்கிய வகையில் இவர்களுக்கு வருமானத்தில் 27 சதவிகித அளவு கடனிருக்கலாம். இதை மனைவியின் பலம், குலதெய்வ அருள் ஆகியவற்றால் 30 வயது முதல் 36 வயதுக்குள் அடைத்துவிடுவார்கள். 

*கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்க்கையில் கொஞ்சம் விட்டேத்தியான மனோபாவமிருக்கும். அதனால் காலத்தோடு எதையும் செய்யாததால், இவர்களுக்கு 16 சதவிகித அளவு கடனிருக்கும். இந்தக் கடனை 39 வயதிலிருந்து 45 வயதுக்குள் கொடுத்து முடித்துவிடுவார்கள்.

* மூலம் நட்சத்திரக்காரர்களுக்குக் கடன் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க நினைப்பதால்தான் இவர்களுக்குக் கடன் ஏற்படும். அதையும் 46 வயது முதல் 65-வது வயதுக்கு மேல் கொடுத்து முடிப்பார்கள்.

*  பூராடம் நட்சத்திரக்காரர்கள், நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கடன் வாங்கிக் கொடுத்தவகையிலும், ஜாமீன் கையெழுத்துப் போட்ட வகையிலும் 26 சதவிகித அளவுக்குள் கடன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மிகவும் கௌரவம் பார்க்கும் இவர்கள், வாங்கிய கடன் வெளியில் தெரியாத வகையில் ரகசியம் காப்பாற்றுவார்கள். 59 வயதில் கடன் இல்லாத நிலையை அடைவார்கள்.

* உத்திராடம் நட்சத்திரக்காரர்கள், தங்களின் சகோதர சகோதரிகளுக்காக நிறையக் கடன் வாங்க நேரிடும்.  அவர்கள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாவிட்டாலும் இவர்கள் கர்ம சிரத்தையுடன் அதைக் கட்டி முடிப்பார்கள். இவர்களின் 31 வயதில் ஏற்படும் கடன் 53-வது வயதில்  நிறைவடையும். 

* திருவோணம் நட்சத்திரம் சந்திரனுடைய நட்சத்திரம். பெருமாளுக்கு உகந்த நட்சத்திரம். இவர்கள், பெரும்பாலும் கடன் வாங்க மாட்டார்கள். அப்படியே வாங்கவேண்டி வந்தாலும் 36 வயதுக்கு மேல் வாங்குவார்கள். அதை 44 வயதிலேயே திரும்பக் கொடுத்துவிடுவார்கள்.

* அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு 16 சதவிகித அளவிலேயே கடன் ஏற்படலாம். ஆனாலும் அந்தக் கடனை இவர்கள் உடனே அடைக்க மாட்டார்கள். 47 வயதுக்கு மேல்தான் இவர்கள் தங்களின் கடனை அடைப்பார்கள். 

*சதயம் நட்சத்திரக்காரர்கள், உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அன்பாக இருப்பார்கள். அவர்களின் பொருட்டு 26 வயதிலேயே கடன் வாங்குவார்கள். இப்படியாக வாங்கிய கடனை இவர்கள் தங்களின் 59 வயதுக்குமேல் கடனைக் கட்டி முடிப்பார்கள். மற்றவர்கள் குறிப்பிட்ட வயதிலிருந்து ஆறு ஆண்டுகளில் கடனை அடைப்பார்களென்றால், இவர்கள் மூன்று வருடங்களிலேயே அடைத்துவிடுவார்கள்.

எந்த நட்சத்திரக்காரர்களுக்கு கடனற்ற யோக வாழ்வு கிடைக்கும் ? #Astrology



* பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு, 33 வயதில் மருத்துவ செலவுகளைச் சார்ந்து கடன் பெறவேண்டியிருக்கும். இவர்கள், இந்தக் கடனை 41 வயது முதல் 47 வயதுக்குள் கட்டிமுடித்துவிடுவார்கள்.
   
* உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வீடு மனை வாங்குவதால் கடன் வாங்க வேண்டியிருக்கும். கடன் வாங்கும்போது, மற்றவர்கள் சொற்படி நடக்காமல், தன் மனம் சொல்லுவதற்கேற்ப செயல்பட வேண்டும். 21 சதவிகித அளவு கடன் வாங்க நேரிடலாம். 49 வயதுக்குள் கடனைத் தந்து முடிப்பர். 

* ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கும் கிட்டத்தட்ட உத்திரட்டாதியைப் போல் அடுத்தவர்களின் பேச்சால் கடன்பட நேரிடும்.  27 வயதில் இவர்கள் வாங்கும் கடன் கைமாற்றிக் கைமாற்றி அடைத்துமுடிக்க 69 வயதில் தீரும். இதற்குத் தீவிர தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்" என்கிறார் திருவண்ணாமலை ஜோதிடர் ஆனந்தாழ்வான். 

பரிகாரம்:
வாங்கிய கடனை நாம் அடைக்காமல் போவதால்தான் பிறவிகளை எடுத்துப் போராடவேண்டியிருக்கிறது. கடன்  முழுவதுமாக அடைபட வேண்டுமானால், கும்பகோணம் அருகிலிருக்கும் திருச்சேரை சாரநாதரை திங்கள்கிழமை நாளில் சென்று வழிபட வேண்டும். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வணங்கினால், பிறவிக் கடனை சேர்த்தே அடைக்கலாம். வைணவர்கள் திருப்பதி வேங்கடேசப் பெருமாளையும், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளையும் வணங்கினால், கடன்களை விரைந்து கொடுத்து முடிக்கலாம். அம்மனை வழிபடுபவர்கள், திருவேற்காடு தேவி கருமாரியம்மனை  வணங்கிக் கடனில்லாத மகிழ்வான வாழ்வு பெறலாம்.  

Vikatan