Published:Updated:

சமத்துவப் பொங்கல் வைத்து அந்தோனியார் வழிபாடு... தஞ்சையில் நடைபெற்ற வித்தியாசத் திருவிழா

விகடன் விமர்சனக்குழு
சமத்துவப் பொங்கல் வைத்து அந்தோனியார் வழிபாடு... தஞ்சையில் நடைபெற்ற வித்தியாசத் திருவிழா
சமத்துவப் பொங்கல் வைத்து அந்தோனியார் வழிபாடு... தஞ்சையில் நடைபெற்ற வித்தியாசத் திருவிழா

த்தோலிக்க கிறிஸ்தவர்களால், `புனித அந்தோனியார்' என்று போற்றப்படுபவர், போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் பிறந்தார். அவர் கிறிஸ்தவத்தின்மேல் கொண்ட பற்றும் பைபிளை அணுகும் கூர்மையும், அவரின் புனித வாழ்வு என்றும் கிறிஸ்தவர்களால் நினைவுகூறப்படுகிறது. 15 வயதில் துறவறம் பூண்ட அவர்,  இறந்த தினமான ஜூன் 13-ந்தேதி, உலகம் முழுவதும் புனித அந்தோனியார் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது, வெளிநாடுகளில் அப்பம், லில்லி மலர் போன்றவை படைக்கப்படும். ஆனால், தமிழகத்தில் சில இடங்களில் இத்திருவிழா வித்தியாசமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். 

சமத்துவப் பொங்கல் வைத்து அந்தோனியார் வழிபாடு... தஞ்சையில் நடைபெற்ற வித்தியாசத் திருவிழா

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி அருகே உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று (18.06.19) விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோயில்முன் வரிசையாகப் பொங்கல் பொங்கவைத்து விழாவைக் கொண்டாடினர்.

திருவிழா குறித்து பாத்திமா மேரி கூறும்போது...

``ஆண்டுதோறும் புனித அந்தோனியாரை நினைவுகூரும்விதமாக, அந்தோனியார் திருவிழாவைக் கொண்டாடிவருகிறோம். திருவிழாவின்போது, கோயில் முன் தமிழர் பாரம்பர்யப்படி பொங்கல் வைப்பதை வழக்கமாகக்கொண்டுள்ளோம். அதுவும், தனித்தனியாக அல்லாமல், ஒரு பகுதியில் இருக்கும் அனைவரும் ஒன்றுகூடி சமத்துவப் பொங்கலாகப் படைப்போம். இங்கு மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளில் அந்தோனியார் திருவிழா இப்படித்தான் கொண்டாடப்படுகிறது. காலையில் பொங்கல் சமைத்தவுடன் அந்தோனியாரை வழிபடுவோம். இரவில், அந்தோனியார் திருவுருவ பவனி நடைபெறும்'' என்றார்.

சமத்துவப் பொங்கல் வைத்து அந்தோனியார் வழிபாடு... தஞ்சையில் நடைபெற்ற வித்தியாசத் திருவிழா

`தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின்போது கடைப்பிடிப்பதைப்போன்றே கிறிஸ்தவ ஆலய விழாவிலும் செய்கிறீர்களே' என்று அவரிடம் கேட்டபோது,

'ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின்போது, குறிப்பாக பொங்கலுக்கு மூன்று நாள்களுக்குப் பிறகு, கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி பொங்கல் வைப்போம். 500 வருடங்களுக்கு முன், நாங்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டாலும் அடிப்படையில் நாங்கள் தமிழர்கள்தானே... அதனால் அந்தோனியாரின் மகிமையை நினைவுகூரும்போது, தமிழர் பாரம்பர்யப்படி பொங்கல் வைக்கிறோம்' என்றார்.