Published:Updated:

திருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்!

சி.வெற்றிவேல்
திருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்!
திருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், ஆறகழூர் கிராமத்தில் உள்ள திருகாமநாத ஈஸ்வரன் கோயிலில், சோழர் காலத்தைச் சேர்ந்த உலோகச் சிலைகள் மற்றும் தூபக்கரண்டிகள் பூமிக்கு அடியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

திருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்!

12 - ம் நூற்றாண்டில், ஆறகழூரைத் தலைநகராகக்கொண்டு, பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னன் மகதை நாட்டை ஆண்டுவந்தார். இவர், மூன்றாம் குலோத்துங்கச் சோழ மன்னனின் கீழ் ஆண்ட குறுநில மன்னர் ஆவார். இவர் கட்டிய கோயில்தான், ஆறகழூர் காமநாத ஈஸ்வரர் கோயில். பல்வேறு மன்னர்களின் காலகட்டங்களில் செய்யப்பட்ட 63 உலோகச் சிற்பங்கள், ஏற்கெனவே கோயிலில் இருக்கின்றன. அதில் சமணத்தைச் சேர்ந்த 3 சிற்பங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்!

தற்போது, குடமுழுக்குக்காக கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. கருவறை அருகே இருக்கும் முதல் திருச்சுற்றில் உள்ள சுற்றுப் பாதையில், கீழே பதிக்கப்பட்டுள்ள கற்களை அகற்றி, புதிய கற்களைப் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, கற்களை அகற்றி பூமியைத் தோண்டியபோது, மண்ணில் 2 அடி ஆழத்தில் 3 உலோகச் சிற்பங்களும், 4 தூபக்கரண்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோயில் செயல் அலுவலர் சண்முகம் மற்றும் சேலம் வரலாற்று ஆய்வுமையத் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசனும் கோயிலுக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.

திருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்!

கோயிலில், 3 அடி உயரத்தில் பார்வதி சிலை ஒன்றும் 2 அடி உயரத்தில் உள்ள பணிப்பெண்கள் இருவரும், வேலைப்பாடுகள் நிறைந்த நான்கு தூபக்கரண்டிகளும் கிடைத்திருக்கின்றன. ”இவை, 13 - ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும் பொன்பரப்பின வாணகோவரையன் காலத்தில் செய்யப்பட்டவையாக இருக்கலாம்” என்றும் கருதுகிறார், ஆய்வு மேற்கொண்ட ஆறகழூர் பொன்.வெங்கடேசன்.

Vikatan