Published:Updated:

‘இந்திய அணியைத் தகுதிபெறச் செய்துவிட்டே புறப்படுவேன்’ - தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் விளையாடிய வீராங்கனை

பெண்களுக்கான ஹாக்கி சீரிஸ் தொடர், ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடைபெற்றுவருகிறது.  இதில் இந்தியா - சிலி அணிகள் மோதும் அரையிறுதிப் போட்டி சனிக்கிழமை நடந்தது.

‘இந்திய அணியைத் தகுதிபெறச் செய்துவிட்டே புறப்படுவேன்’ - தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் விளையாடிய வீராங்கனை

போட்டிக்கு முந்தைய தினம், இந்திய வீராங்கனை லால்ரெம்சியாமியின் தந்தை மாரடைப்பால் காலமானார். இந்தத் தகவல் 19 வயது வீராங்கனையான லால்ரெம்சியாமிக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரோ, தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கச் செல்லவில்லை. மாறாக, அரையிறுதிப் போட்டியில் விளையாடிவிட்டு பின்னர் செல்வதாக அணி நிர்வாகத்திடம் கூறிவிட்டார். இந்த அரையிறுதிப் போட்டி, இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும். இதில் வெற்றிபெற்றால்தான் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை உறுதிசெய்ய முடியும். 

இந்திய அணியின் பயிற்சியாளர்  லால்ரெம்சியாமியை அடுத்த விமானத்தில் ஊருக்குப் புறப்படும்படி அறிவுறுத்தியும், அரையிறுதில் விளையாடுவதில் உறுதியாக இருந்துள்ளார். நான், எனது தந்தைக்கு பெருமை சேர்க்க வேண்டும்.  “நான் இங்குதான் இருப்பேன். இந்திய அணியைத் தகுதிபெறச் செய்துவிட்டுத்தான் ஊருக்குப் புறப்படுவேன்” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.  

‘இந்திய அணியைத் தகுதிபெறச் செய்துவிட்டே புறப்படுவேன்’ - தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் விளையாடிய வீராங்கனை

இதனையடுத்து,  அரையிறுதிப் போட்டியில் அவர் களமிறங்கினார். போட்டி ஆரம்பித்த முதல் 18-வது நிமிடத்தில், சிலி வீராங்கனை கரோலினா கோல் அடித்து அணியை முன்னிலைபெறச் செய்தார்.  ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில், குர்ஜித் கவுர் பதில் கோல் அடித்தார். இதனையடுத்து, முதல் பாதியானது 1-1  என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியில், இந்திய அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஆட்டத்தின் முடிவில் 4 -2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின்மூலம்  ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய மகளிர் ஹாக்கி அணி உறுதிசெய்தது. இறுதிப்போட்டி  இன்று நடைபெறுகிறது.

பின்னர் பேசிய இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ராம்பால், " இந்த வெற்றியை லால்ரெம்சியாமியின் தந்தைக்கு சமர்ப்பிக்கிறோம்.  லால்ரெம்சியாமியை நினைத்து பெருமையாக இருக்கிறது. தனது தந்தை இறப்பு செய்திகேட்டுத் துடித்தவர், இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் நாட்டிற்காக விளையாடியுள்ளார்” என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு