Published:Updated:

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; முன்னாள் Delhi Capitals அணி வீரர் கைது?

Cricket - Sandeep Lamichhane

தற்போது கரிபியன் பிரீமியர் லீக்கில் விளையாடிவரும் அவர், புகாரின் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; முன்னாள் Delhi Capitals அணி வீரர் கைது?

தற்போது கரிபியன் பிரீமியர் லீக்கில் விளையாடிவரும் அவர், புகாரின் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Published:Updated:
Cricket - Sandeep Lamichhane

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னாள் வீரரும் நேபால் தேசிய அணியின் தற்போதைய கேப்டனுமான சந்தீப் லமிச்சானேவை 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளது காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம். கடந்த செவ்வாய்கிழமை அன்று சந்தீப் மீது காத்மாண்டு காவல் நிலையத்தில் 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் குற்றம்சாட்டி புகார் அளிந்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் பக்த்பூருக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அச்சிறுமியை மத்திய பிரதேசத்தில் உள்ள அவரின் விடுதிக்கு இரவில் செல்ல விடாமல் தடுத்துள்ளார் லமிச்சானே. அன்றிரவு இருவரும் ஒரே அறையில் தங்கலாம் என்று கூறி அவரை லமிச்சானே பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 லமிச்சானே
லமிச்சானே

இந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கரிபியன் பிரீமியர் லீக்கில் விளையாடி வரும் அவர் இப்புகாரின் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். நேபால் கிரிக்கெட் ஆணையம் தொலைபேசி மூலம் இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது அப்படி ஏதும் தான் செய்யவில்லை என்று புகாரை மறுத்துள்ளார். தற்போது அவர்மீது அளிக்கபட்டுள்ள பாலியல் வன்கொடுமை புகார் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.