Published:Updated:

``இவரின் பெற்றோர்களை நினைத்து..." - அமித் மிஷ்ராவின் ட்வீட்டும் நெட்டிசன்களின் விமர்சனமும்!

அமித் மிஷ்ரா

RCB ரசிகை ஒருவர் கையில் ஒரு பதாகை உடன் நிற்கும் படத்தை பகிர்ந்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து கமென்ட் செய்து வருகிறார்கள்.

``இவரின் பெற்றோர்களை நினைத்து..." - அமித் மிஷ்ராவின் ட்வீட்டும் நெட்டிசன்களின் விமர்சனமும்!

RCB ரசிகை ஒருவர் கையில் ஒரு பதாகை உடன் நிற்கும் படத்தை பகிர்ந்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து கமென்ட் செய்து வருகிறார்கள்.

Published:Updated:
அமித் மிஷ்ரா

பந்து வீச்சாளர் அமித் மிஷ்ரா நேற்றைக்கு நடந்த CSK vs RCB போட்டியின்போது, RCB ரசிகை ஒருவர் கையில் ஒரு பதாகை உடன் நிற்கும் படத்தைத் தனது ட்விட்டர் பகிர்ந்திருந்தார். அதற்கு நெட்டிசன்கள் அமித் மிஷ்ராவை விமர்சித்து வருகின்றனர்.

நேற்றைக்கு RCB மற்றும் CSK அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அந்த போட்டியைக் காண வந்திருந்த ரசிகை ஒருவர் கையில் ஏந்தியிருந்த பதாகை, "RCB அணி IPL போட்டிகளில் கோப்பையை வெல்லும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை" என்று எழுதப்பட்ட பதாகையைக் கையில் பிடித்திருந்தார். அந்த படத்தை பகிர்ந்த அமித் மிஷ்ரா, "உண்மையாகவே இவரின் பெற்றோர்களை நினைத்து வருந்துகிறேன்" என கேப்ஷன் பதிவிட்டு இருந்தார்.

ஒரு பதிவர், "முதலில் உங்களின் திருமணத்தை கவனியுங்கள்" என்று பதிவு செய்துள்ளார். இன்னொரு பதிவர், "உங்களை அன்பாலோ செய்கிறேன்" என கமென்ட் செய்துள்ளார்.

இந்தாண்டு ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியும் அமித் மிஷ்ராவை எடுக்காததால் unsold நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த வாரம் 'CSK அணியில் ஏன் நீங்கள் இணையக் கூடாது' என ஒரு பதிவர் கேட்ட கேள்விக்கு 'இல்லை நண்பரே, இரண்டு வருடம் இளமையாக இருக்கிறேன்' என பகடியாக பதிலளித்திருந்தார். அதற்கு சிஎஸ்கே ரசிகர்கள் இவரை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism