Published:Updated:

``ஓய்வு பெறும் எனது முடிவை மாற்றிக்கொண்டேன்"- அர்ஜெண்டினாவிற்காக தொடர்ந்து விளையாட டி மரியா முடிவு!

ஏஞ்சல் டி மரியா.
News
ஏஞ்சல் டி மரியா.

அர்ஜெண்டினா உலகக்கோப்பையை வென்றதைத் தொடர்ந்து தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் ஏஞ்சல் டி மரியா.

``ஓய்வு பெறும் எனது முடிவை மாற்றிக்கொண்டேன்"- அர்ஜெண்டினாவிற்காக தொடர்ந்து விளையாட டி மரியா முடிவு!

அர்ஜெண்டினா உலகக்கோப்பையை வென்றதைத் தொடர்ந்து தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் ஏஞ்சல் டி மரியா.

Published:Updated:
ஏஞ்சல் டி மரியா.
News
ஏஞ்சல் டி மரியா.
சமீபத்தில் கத்தாரில் நடைப்பெற்று முடிவடைந்த உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் ஏஞ்சல் டி மரியாவும் ஒருவர். மெஸ்ஸி இரண்டு கோல்கள் அடித்திருந்த நிலையில் டி மரியா ஒரு கோலை அடித்திருந்தார். இதுவரை அர்ஜென்டினா அணிக்காக 129 ஆட்டங்களில் விளையாடி 28 கோல்களை அடித்துள்ளார். இதனிடையே உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு முன்னதாக சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக டி மரியா தெரிவித்திருந்தார்.

ஏஞ்சல் டி மரியா.
ஏஞ்சல் டி மரியா.

ஆனால் தற்போது ஏஞ்சல் டி மரியா, அர்ஜெண்டினா உலகக்கோப்பையை வென்றதைத் தொடர்ந்து தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.இது குறித்துப் பேசிய அவர், "எனக்கு இப்போது 34 வயதாகிறது. தற்போது நடைபெற்ற இந்த உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற முடிவு செய்திருந்தேன். இப்போது என்னுடைய முடிவை மாற்றிக்கொண்டேன். 2024 -ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் விளையாடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.