Published:Updated:

IND:``இந்திய அணியை தனித்தனி அணிகளாக உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது"- அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே

தனித்தனியாக அணிகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்திருக்கிறார்.

IND:``இந்திய அணியை தனித்தனி அணிகளாக உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது"- அனில் கும்ப்ளே

தனித்தனியாக அணிகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அனில் கும்ப்ளே
8- வது டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து இடையேயான போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட இந்திய அணியின் தோல்வி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

இந்திய அணியின் தோல்விக்கு மூத்த வீரர்கள் மீது காரணமும் கூறப்பட்டு வந்த நிலையில்  அணியை மாற்றுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று கவாஸ்கர், ரவி சாஸ்திரி போன்றோர் பேசியிருந்த நிலையில் தற்போது  இந்திய அணியின் முன்னாள் பந்து வீச்சாளர், அனில் கும்ப்ளே தனித்தனியாக அணிகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.

அணில் கும்ப்ளே
அணில் கும்ப்ளே

இது குறித்து பேசிய அவர், ``இந்திய அணியை மாற்ற வேண்டும்.  டி20, ஒருநாள் போட்டிகளுக்குத் தனி அணியாகவும் டெஸ்ட் போட்டிகளுக்குத் தனி அணியாகவும் உருவாக்க வேண்டும். இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதால் அது அவர்களுக்கு வேலைப்பளுவை அதிகரிக்கிறது. ஒரு சில வீரர்கள் தவிர, மற்றவர்களை பிரத்யேகமாக அந்தந்த போட்டிகளுக்கு என்று வைத்துக்கொள்ள வேண்டும். டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை லிமிடெட் ஓவர் போட்டிகளில் ஆட வைத்தால், அவர்கள் ஆடமாட்டேன் என்று மறுக்க மாட்டார்கள். ஆனால் வேலைப்பளு காரணமாக செயல்பாட்டில் குறைவு ஏற்படலாம். உலகக் கோப்பையில் ஏற்பட்ட இந்த தோல்வி ஒரு பாடமாக அமையட்டும்” என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.