Published:Updated:

`அமைதியா இருக்கேன் பலவீனமா இல்ல’ - ட்விட்டரில் லெப்ட் ரைட் வாங்கிய அனுஷ்கா ஷர்மா!

என்னுடைய பெயரை தேவையில்லாமல் பயன்படுத்துகிறீர்கள். ஒருவரின் அமைதியை நீங்கள் பலவீனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

 அனுஷ்கா ஷர்மா
அனுஷ்கா ஷர்மா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய தேர்வுக்குழுவினர் கேப்டன் விராட் கோலி மனைவிக்குத் தேநீர் ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தனர் எனக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் முன்னாள் வீரர் ஃபரூக் இன்ஜினியர். புனேவில் ஒரு நிகழ்ச்சியில் பேசியவர், ``தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்தைத் தவிர அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களை யாருக்கும் தெரியாது. அவர்கள் குறைந்த போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர்.

நாம் ஒரு மிக்கி மவுஸ் தேர்வுக்குழுவை வைத்துள்ளோம். விராட் கோலி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். இது நல்லதுதான். இந்தத் தேர்வாளர்கள் எப்படி தகுதி பெறுகிறார்கள். அவர்கள் எல்லாம் 10 முதல் 12 டெஸ்ட் போட்டிகளில்தான் விளையாடியுள்ளனர். அவர்களுக்கு என்ன தெரியும்.

விராட் கோலி
விராட் கோலி
AP

உலகக்கோப்பை போட்டியின் போது எனக்கு தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவரை யார் என்றே தெரியவில்லை. நான், அவர் யார் எனக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஏனென்றால் அவர் இந்திய அணியின் கோட் அணிந்திருந்தார். நான் தேர்வுக்குழு உறுப்பினர் என பதிலளித்தார். இவர்கள் எல்லாம் அனுஷ்கா ஷர்மாவுக்கு டீ ஊற்றிக் கொடுத்துகொண்டிருந்தார்கள் எனப் பேசியிருந்தார்.

கோலி - அனுஷ்கா காதலர்களாக வலம் வந்த போதே அவர் மைதானத்தில் வந்து போட்டியைக் காணும் போது சில விமர்சனங்கள் வந்தன. திருமணத்துக்குப் பின்பு கோலியின் ஆட்டம் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்தனர். அப்போது எல்லாம் அனுஷ்கா அமைதியாகவே இருந்தார். இந்நிலையில் ஃபரூக் பேசியது தொடர்பாக நீண்ட விளக்கத்தை அனுஷ்கா சர்மா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

`இனி காஷ்மீர் வருமானமே வேண்டாம்!'- தீவிரவாதிகளின் தாக்குதலால் நிலைகுலைந்த தொழிலாளிகளின் குடும்பம்

``என்னைப் பற்றி வெளியாகும் அவதூறு செய்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. எப்போதுமே மெளனத்தையே பதிலாக அளித்து வந்தேன். இந்த 11 வருடத்தில் நான் அப்படித்தான். விராட் கோலியும் நானும் காதலித்து வந்த போது அவருடைய ஆட்டத்திறன் தொடர்பாக சில விமர்சனங்கள் வந்தன. நாங்கள் திருமணம் செய்துகொண்ட பின்னர் சில பழிகள் வந்தன. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தற்போது என்னுடைய பெயர் தவறாக சித்திரிக்கப்படுகிறது.

`அமைதியா இருக்கேன் பலவீனமா இல்ல’ - ட்விட்டரில் லெப்ட் ரைட் வாங்கிய அனுஷ்கா ஷர்மா!

உலகக்கோப்பை போட்டியின் போது எனக்கு தேர்வாளர்கள் டீ கொடுத்தார்கள் எனப் புதிய கதை கட்டப்படுகிறது. உலகக்கோப்பை தொடரின் போது நான் ஒரு போட்டியை மட்டுமே மைதானத்தில் நேரில் வந்து பார்த்தேன். நான் தேர்வாளர்கள் அறையிலிருந்து பார்க்கவில்லை. குடும்பத்தினர் அமர்ந்து பார்க்கும் இடத்திலிருந்து தான் பார்த்தேன்.

உங்களுக்குத் தேர்வாளர்கள் குறித்து விமர்சிக்க வேண்டும் என்றால் தாராளமாகச் செய்யுங்கள். எதற்காக என்னுடைய பெயரை தேவையில்லாமல் பயன்படுத்துகிறீர்கள். இந்த ஒரு செய்திக்காக நான் கோபப்படவில்லை. நிறைய செய்திகள் வந்ததுவிட்டன. அதுதான் நான் மெளனத்தைக் கலைக்க காரணம். அதனால் இன்று பேசவேண்டும் என முடிவெடுத்தேன். ஒருவரின் அமைதியை நீங்கள் பலவீனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கடைசியாக ஒன்றை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நான் காபி குடித்தேன்” என அதில் தெரிவித்துள்ளார்.