Published:Updated:

``நீங்கள் எங்களுக்கு யாரென்பதை..." விராட் கோலி கொடுத்த பரிசு; கண்கலங்கிய சச்சின்!

சச்சின்

அப்போது விராட் கோலியுடன் நடந்த நெகிழ்ச்சியான தருணத்தையும் விராட் கோலி அளித்த விலைமதிப்பற்ற பரிசு குறித்தும் சச்சின் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

``நீங்கள் எங்களுக்கு யாரென்பதை..." விராட் கோலி கொடுத்த பரிசு; கண்கலங்கிய சச்சின்!

அப்போது விராட் கோலியுடன் நடந்த நெகிழ்ச்சியான தருணத்தையும் விராட் கோலி அளித்த விலைமதிப்பற்ற பரிசு குறித்தும் சச்சின் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Published:Updated:
சச்சின்

நமக்கெல்லாம் நன்றாக நினைவிருக்கும் ‘சச்சின்... சச்சின்... சச்சின்...’ என்ற ஆரவாரத்துடன் சச்சின் தனது ஓய்வை அறிவித்து தன் கடைசி கிரிக்கெட் போட்டியை விளையாடிவிட்டு மைதானத்திலிருந்து சச்சின் வெளியேறிய அந்தக் காட்சி கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாதது. அப்போது விராட் கோலியுடன் நடந்த நெகிழ்ச்சியான தருணத்தையும் விராட் கோலி அளித்த விலைமதிப்பற்ற பரிசு குறித்தும் சச்சின் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அந்த நேர்காணில் சச்சின் பின்வருமாறு பேசியிருக்கிறார். அன்று சச்சின், தனது ரசிகர்களிடமிருந்து கண்ணீர் மல்க விடைபெற்று தனது ட்ரெஸ்ஸிங் அறைக்குள் வந்து ஒரு மூலையில் உணர்ச்சி வசத்துடன் அமர்ந்திருக்கிறார். அப்போது விராட் கோலி சச்சின் அருகில் வந்து, ’நாம் வழக்கமாக நம் மணிக்கட்டில் கயிறு அணிவோம், இந்தியாவில் நிறைய பேர் அணிவார்கள். எனவே, என் தந்தை தன்னிடம் இருந்த கயிறு ஒன்றை எனக்குக் கொடுத்தார். நான் அதை என்னுடனே என் பையில் வைத்திருந்தேன், என் தந்தை இதை எனக்குக் கொடுத்தார். இது என்னிடம் உள்ள மிகவும் மதிப்புமிக்க விஷயம், என்னால் இதைவிட மதிப்புமிக்க எதையும் கொடுத்துவிட முடியாது என்று நான் நினைக்கிறேன், நீங்கள் என்னை எவ்வளவு ஊக்கப்படுத்தியுள்ளீர்கள், எங்கள் அனைவருக்கும் நீங்கள் யார் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இது உங்களுக்கான எனது சிறிய பரிசு.” என்று கூறி தந்தை தனக்கு அளித்த அந்த கயிற்றை சச்சினுக்கு பரிசாக அளித்துள்ளார் விராட்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விராட் கோலியின் இந்தச் செயலைக் கண்டு உணர்ச்சிவயப்பட்டுக் கண்கலங்கிய சச்சின், அந்த பரிசை மீண்டும் விராட் கோலியிடமே திருப்பி தந்துவிட்டு, ‘இது விலைமதிப்பற்றது, இது உன்னுடன் தான் இருக்க வேண்டும், இது வேறு யாருக்குமானதும் அல்ல. இது உன் சொத்து, உன் கடைசி மூச்சு வரை இது உன்னிடம் இருக்க வேண்டும் என்று விராட் கோலியிடம் கூறியுள்ளார் சச்சின்.

அதே நேர்காணலில் உங்கள் இருவரில் யார் நல்ல பேட்ஸ் மேன் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ‘இருவரும் நல்ல பேட்ஸ் மேன், நாங்கள் இருவரும் ஒரே அணியில் இருந்தால் எப்படி இருக்கும்” என்று பதிலளித்திருந்தார் சச்சின்.