2013 -ஆம் ஆண்டு கடைசியாக எம்.எஸ் தோனி தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்று கொடுக்கவில்லை என்று பலரும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற கிரிக்கெட் வீரர்களை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், "எம்.எஸ் தோனி கேப்டனாக பொறுப்பேற்றவுடன் உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்தார் என்பதற்காக, அடுத்து வரும் கேப்டன்களும் அதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. அதேபோல் தம்முடைய கனவான உலகக்கோப்பையை வெல்வதற்கு சச்சின் டெண்டுல்கர் ஆறு முறை காத்திருந்தார். மேலும் நிறைய பேர் விராட் கோலி எந்த உலகக்கோப்பையும் வெல்லவில்லை என்று கூறிவருகின்றனர்.
ஆனால் அவர் 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன் டிராபியை வென்றுள்ளார். அதே போல் ரோகித் சர்மாவும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளார். எனவே அவர்கள் இருவருக்கும் சற்று இடைவெளி கொடுக்கலாம். தொடர்ந்து இருதரப்பு கிரிக்கெட் மற்றும் IPL உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றியைக் காண்கிறார்கள்." என்று அஸ்வின் பேசியுள்ளார்.